டெம்னோ தோரக்ஸ் வகையை சேர்ந்த எறும்புகளுக்கு தங்களது எதிரிகளை எளிதில் அடையாளம் காணமுடியும். அந்த எறும்புகள் மிக ஆக்ரோஷமாக பதிலடி தந்து எதிரியை விரட்டும்.இந்த டெம்னோ தோரக்ஸ் எறும்பு வசிக்கும் பகுதிக்குள் ஸ்லேவ் மேக்கர் என்ற எறும்புகள் அடிக்கடி படையெடுத்து அட்டகாசம் செய்யும்.
இந்த எறும்புகள் இரையை தேடுவதற்கு சோம்பேறித்தனம் பட்டுக் கொண்டு சேர்த்து வைத்து இருக்கும் உணவுகளை திருடிச் செல்லும் குணாதியசம் கொண்டது ஆகும்.ஸ்லேவ் மேக்கர் எறும்புகளை அடையாளம் கண்டதும் டெம்னோ தோரக்ஸ் வகை எறும்புகள் மனிதர்களை கடிப்பது போலவே ஆக்ரோஷமாக தாக்கி கடிக்கும். இதில் ஸ்லேவ் மேக்கர் எறும்புகளுக்கு அதிர்ச்சி ஏற்பட்டு ஓட்டமும் நடையுமாக தனது இருப்பிடத்திற்கு திரும்பி வரும்.
எதிரிகளை அச்சுறுத்தும் எறும்புகள் தங்களது சக்தியை அதிகம் வீணடிப்பது இல்லை. சோம்பேறி எறும்புக் கூட்டத்தை விரட்டும் டெம்னோ தோரக்ஸ் எறும்பு பற்றிய சுவாரசிய ஆய்வு விடயங்கள் இயற்கை பாரம்பரியம் குறித்த இதழில் வெளியாகி உள்ளன.ஸ்லேவ் மேக்கர் வகை எறும்புகள் தன்னுடைய பலத்தை காட்டி உணவை திருடிவிடும். அந்த நேரத்தில் ராணி எறும்பு மற்றும் பணியாளர் எறும்புகளை கொன்று விடுவதும் உண்டு.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF