Wednesday, July 27, 2011

மனித உருவிலான விலங்கினங்களை உருவாக்கி சாதனை படைத்த விஞ்ஞானிகள்.

Hybrid animal human
மனித விந்தையும் மிருகங்களின் கரு முட்டையையும் இணைத்து புதிய உயிரினங்களை பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளது தெரிய வந்துள்ளது.
கடந்த 3 ஆண்டாக இந்த ஆராய்ச்சி வெளி உலகுக்குத் தெரியாமல் நடந்து வருகிறது. இதுவரை 150க்கும் மேற்பட்ட உயரினங்கள் இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இவ்வாறு உருவாக்கப்படும் உயிரினங்களிலிருந்து எடுக்கப்படும் மூல உயிரணுவை மனித உடலுக்குள் செலுத்தி மனிதனுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட உறுப்புகளை உருப்பெறச் செய்வது தான் இந்த ஆராய்ச்சியின் நோக்கம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
சட்டப்படி இத்தகைய கலப்பு உயிரனங்களை உருவாக்குவது தவறு என்பதால் இவை உருவாக்கப்பட்ட 14 நாட்களுக்குள் அழிக்கப்படுவதாகவும் இந்த கண்டுபிடிப்பு மனிதனுக்கு ஏற்படும் கொடிய நோய்களை சரி செய்வதற்கு உதவும் என்றும் இந்த விஞ்ஞானிகள் குழுவின் தலைவர் பேராசிரியர் ராபின் லோவல் பாட்ஜ் தெரிவித்தார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF