Sunday, July 24, 2011

உங்கள் கணணியை வைரஸ் தாக்கியுள்ளதா என கண்டறிந்து அறியப்படுத்தும் கூகுளின் புதிய சேவை.


நம் கணணியில் நுழைந்து மால்வேர்களும், வைரஸ்களும் செய்யும் அட்டகாசம் நாம் அறிந்ததே.
நமக்கு தெரியாமலே நம் கணணிக்குள் நுழைந்து நம்முடைய முக்கிய கோப்புக்களை அழித்து உச்சகட்டமாக நம் கணணியையே முடக்கி விடும். இதில் வேடிக்கை என்னவென்றால் நம்முடைய கணணி பாதிக்கபட்டிருக்கிறதா இல்லையா என்று கூட நம்மால் சுலபமாக கண்டறிய முடியாது.
சில வைரஸ்களை நம் ஆன்ட்டிவைரஸ் மென்பொருட்களும் தவற விடுகின்றன. பெரும்பாலான வைரஸ்கள் இணையம் மூலமே நம் கணணியில் பரவுகிறது. இந்த நிலையில் மால்வேர்களால் பாதிக்கப்பட்ட கணணிகளை காட்டி கொடுக்க கூகுள் ஒரு புதிய வசதியை அதன் தளத்தில் புகுத்தியுள்ளது.
நீங்கள் கூகுள் தளத்திற்கு செல்லும் பொழுது குறிப்பிட்ட சில மால்வேர்களால் உங்கள் கணணி தாக்கப்பட்டிருந்தால் கூகுள் ஒரு எச்சரிக்கை செய்தியை அளிக்கும். இந்த குறிப்பிட்ட மால்வேர்களால் உலகில் சுமார் 2 மில்லியன் கணணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற எச்சரிக்கை செய்தி வந்தால் உங்கள் கணணி அந்த மால்வேரால் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.
அதை தீர்ப்பதற்கான வழிமுறையையும் கூகுள் அங்கேயே கொடுத்துள்ளனர். Learn how to fix this என்ற லிங்க்கை க்ளிக் செய்தால் அந்த மால்வேரை நீக்குவதற்கான வழிமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கும்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF