கோவையில் பட்டபகலில் 29 வயதான சந்தோஷ்குமார் என்ற வலிபர் சாலையில் கொடுரமான முறையில் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் மேட்டுப்பாளையம் ஏ.ஆர்.சி. சிக்னலில் இருந்த சிசிடிவி கமெராவில் பதிவானது. மதுக்கடையில் நடந்த பிரச்சனை காரணமாக சந்தோஷ்குமாரை சாலையில் மோட்டர் வாகனத்தில் இடித்து பின் நான்கு பேர் அடித்து கிழே தள்ளினார்கள். கிழே விழுந்த சந்தோஷ்குமாரை குடிபோதையில் அந்த நான்கு பேரும் வெறித்தனமாக அடித்து தாக்கினர்கள். படுகாயமடைந்த சந்தோஷ்குமாரை கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு போய்ச் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்து விட்டார்.
சிக்னலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராவின் மூலம் இந்த கொடூரச் சம்பவம் செய்தவர்களான கிருஷ்ணன், ராமச்சந்திரன், முருகன், கணேசன் ஆகிய நான்கு போரையும் அடையாளம் கண்டு பொலிசார் கைது செய்தனர்.இந்தக் கொடூரச் சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த சந்தோஷ்குமாரின் மனைவி சரோஜா மற்றும் உறவினர்கள், நண்பர்கள் பிணத்தை வாங்க மறுத்து மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த பொலிசார் மருத்துவமனைக்கு வந்து அவர்களை கலைந்துபோகச் செய்தனர். உடனே அவர்கள் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், சரோஜாவுக்கு இழப்பீடு வழங்கக் கோரியும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
சந்தோஷ்குமார் குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும், ரூ. 5 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோஷமிட்டனர். பொலிஸ் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோகச் செய்தனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF