Friday, July 15, 2011

காட்சிக்கு ஏற்ப வாசனையை வெளிப்படுத்தும் தொலைக்காட்சி விரைவில் அறிமுகம்.


காட்சிக்கு ஏற்ப வாசனையை வெளியிடும் தொலைக்காட்சி விரைவில் வர இருக்கிறது. இதுதொடர்பாக நடத்தப்பெற்ற ஆராய்ச்சி வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.தொலைக்காட்சியில் வாசனை வரவழைப்பது தொடர்பாக அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான்டியாகோ பல்கலையும் சாம்சங் டிவி நிறுவனமும் இணைந்து ஆராய்ச்சி நடத்தின. ஆய்வு தற்போது வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஹைடெபனெஷன், 3டி என்று தொடர்ந்து புதுப் புது தொழில்நுட்பங்கள் அறிமுகமாகின்றன.இந்த வரிசையில் அடுத்தது "ஸ்மெல் ஓ விஷன்". அதாவது தொலைக்காட்சியில் படத்துடன் சேர்ந்து வாசனையும் வரும். உதாரணமாக தொலைக்காட்சியில் சாம்பிராணி கொளுத்தும் காட்சி வந்தால் வீடு கமகமக்கும்.இதுபற்றி அமெரிக்க பேராசிரியர் சன்கோ ஜின் கூறியதாவது: ஸ்மைல் ஓ விஷன் தொலைக்காட்சியில் இருந்து ஆயிரக்கணக்கான வாசனைகள் வெளியேறும் வகையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சிப்ஸ், பீட்சா, புழுதி, காடு, சென்ட் என பல்வேறு வாசனைகள் தொலைக்காட்சியில் இருந்து வெளிப்படும்.
இதற்காக அமோனியா போன்ற ரசாயன திரவங்கள் பயன்படுத்தப்படும். மின்சாரத்தின் மூலமாக உலோக தகட்டை சூடாக்கச் செய்து இத்தகைய திரவத்தில் நனைக்கும் போது விதவிதமான வாசனைகள் வெளியேறும்.ஒலி, ஒளி காட்சிகள் மின்காந்த அலைகளாக மாற்றப்பட்டு தொலைக்காட்சிக்கு வந்து சேர்வது போல வாசனையை உருவாக்கச் செய்வதற்கான சிக்னலும் மின்காந்த அலைகளாக மாறி ஒலி, ஒளியுடனேயே தொலைக்காட்சிக்கு வரும்.காட்சிக்கேற்ப வாசனை வெளியாகும். இதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கைத்தொலைபேசியையும் தயாரிக்க முடியும். ஆய்வு பணிகள் முடிவடைந்து விட்ட நிலையில் வாசனை தொலைக்காட்சியை உருவாக்குவதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF