யாழில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் பூர்த்தியடைந்துள்ளன : பசில் ராஜபக்ஷ.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
யாழ்ப்பாணத்தில் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.வடமராட்சி கிழக்குப் பகுதியில் யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த 863 குடும்பங்கள் மீள் குடியேற்றப்பட்டுள்ளன. இடம்பெயர் மக்களை மீள் குடியேற்றும் நடவடிக்கைகள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி கலந்து கொண்டார். இந்த நிகழ்வின் போது இராணுவத்தினரால் நிர்மானிக்கப்பட்ட 10 வீடுகள் இடம்பெயர் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் போர்க்குற்ற காணொளியினை பான் கீ மூன் - ரணில் ஒன்றாக பார்க்க ஏற்பாடு.
அமெரிக்கா சென்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் ஐ.நா.செயலாளர் நாயகம் பான்கீமூனும் ஒன்றாக இருந்து இலங்கையின் கொலைக்களம் சனல் 4 ஆவணத் திரைப்படத்தை பார்வையிடுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.நாளை மறுதினம் பான் கீ மூனைச் சந்தித்து ரணில் பேச்சு நடத்தவுள்ளார். அந்த நேரத்தில் இருவரும் ஒன்றாக அமர்ந்து போர்க் குற்றங்கள் மற்றும் திகிலூட்டும் காட்சிகள் அடங்கிய இந்த ஆவணப்படத்தை பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ரணில், அரசின் உயர்மட்டத் தவைர்கள் மற்றும் பல்வேறு தரப்பினருடனும் பேச்சுக்களை நடத்தி வருகின்றார். விஜயத்தின் இறுதியாக நாளை மறுதினம் ஐ.நாவின் செயலாளர் நாயகம் பான் கீ மூனைச் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார். கடந்த மாதம் 15 ஆம் திகதி சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட இலங்கையின் கொலைக்களம் ஆவணப் படம் இதுவரை தாம் பார்க்கவில்லை என்று பான் கீ மூன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் தயாரிக்கப்படும் ஆளில்லா விமானங்கள்.
இலங்கையில் ஆளில்லா விமானங்கள் தயாரிக்கப்பட உள்ளதாக சிங்கள பத்திரிகையொன்ற செய்தி வெளியிட்டுள்ளது.இலங்கை இராணுவத்தினரும் மொரட்டுவை பல்கல்கலைக்கழகத்தினரும் கூட்டாக இணைந்து குறித்த விமானம் தயாரிக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.ஆளில்லா விமானம் மற்றும் கண்ணி வெடி அகற்றும் இயந்திரம் ஆகியன அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
ஏற்கனவே ஆளில்லா விமானமொன்று தயாரிக்கப்பட்டு பரீட்சார்த்த முயற்சிகள் பூர்த்தியடைந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.அதிகளவு இராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்து அவற்றை பிராந்திய வலய நாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அரசு எமது புத்திமதிகளை உதாசீனம் செய்தால் பழைய நிலையே தோன்றும்: மல்வத்த மகாநாயக்கர்.
அரசு எமது அறிவுரைகளை உதாசீனம் செய்தால் வடக்கில் பழைய மோசமான நிலைமைகள் மீண்டும் தலையயெடுக்கும் வாய்ப்பு ஏற்படலாம் என எச்சரிக்கிறார் மல்வத்த மகாநாயக்கர். வடக்கில் வாழும் மக்கள் குறித்து விசேட அக்கறை செலுத்தி அவர்களுக்குத் தீர்வு ஒன்றை வழங்குமாறு நாம் ஜனாதிபதிக்கு எடுத்துரைத்துள்ளோம். இல்லையேல் பழைய நிலைமையினையே மீண்டும் வடக்கில் ஏற்படுத்தும்.
கடந்த 28 ஆம் திகதி, மலையக மக்கள் முன்னணியின் மூத்த தலைவரான பீ.ராதாகிருஷ்னண் மல்வத்தபீடாதி திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரையைச் சந்தித்த போதே அவர், இவ்வாறு தெரிவித்தார்.ராதாகிருஷ்ணனுடனான சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவித்தவை,நாட்டில் பல்கலைக்கழகங்களை இன்று இழுத்து மூடும் நிலையே உருவாகியுள்ளது. நாட்டின் பல்கலைக்கழகங்களைப் பேணிப் பாதுக்காக்கத் திராணியற்றவர்கள் இன்று கட்டணம் செலுத்தி அங்கு வெளிநாட்டு மாணவர்கள் பயில்வதற்கு வாய்ப்புக்களை உருவாக்க முனைந்துள்ளனர்.
மலையக மக்களின் பிரச்சினைகள் பற்றியும் நான் நன்கறிவேன். அவர்களுக்காக நானும் தலையிட்டுச் செயற்பட்டுள்ளேன். ஹந்தானைப் பிரதேசத்தில் அவர்களுக்குத் தோட்ட வீடுகளைக் கட்டிக்கொடுக்க நான் உதவியுள்ளேன்.வடக்கைப் பொறுத்தவரை அந்த மக் களின் பிரச்சினைகள் இன்னமும் தீர்த்து வைக்கப்படவில்லை. எனக்கும் வட பகுதிக்குச் செல்லச் சந்தர்ப்பம் கிடைத்தது. நான் அவர்களது பிரச்சினைகள் பற்றி அறிந்துள்ளேன்.
வடக்கின் பிரச்சினை பற்றி நாம் தொடர்ச்சியாக அரசுக்கு அறிவுறுத்தி வருகிறோம். எமது கருத்துக்கள் எதையும் அரச தரப்பினர் கேட்பதாக இல்லை.வடக்கு மக்கள் மீது விசேட அக்கறை செலுத்தி அந்த மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குமாறு நாம் ஜனா திபதியிடமும் வலியுறுத்தியுள்ளோம். அவ்வாறு செயற்படாமல் விட்டால் எதிர்காலத்தில் மேலும் பிரச்சினைகள் உருவாக இடமுள்ளது. வடக்கில் முன்னைய சூழல் மீண்டும் உருவாகும் என்றார்.
கடந்த 28 ஆம் திகதி, மலையக மக்கள் முன்னணியின் மூத்த தலைவரான பீ.ராதாகிருஷ்னண் மல்வத்தபீடாதி திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரையைச் சந்தித்த போதே அவர், இவ்வாறு தெரிவித்தார்.ராதாகிருஷ்ணனுடனான சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவித்தவை,நாட்டில் பல்கலைக்கழகங்களை இன்று இழுத்து மூடும் நிலையே உருவாகியுள்ளது. நாட்டின் பல்கலைக்கழகங்களைப் பேணிப் பாதுக்காக்கத் திராணியற்றவர்கள் இன்று கட்டணம் செலுத்தி அங்கு வெளிநாட்டு மாணவர்கள் பயில்வதற்கு வாய்ப்புக்களை உருவாக்க முனைந்துள்ளனர்.
மலையக மக்களின் பிரச்சினைகள் பற்றியும் நான் நன்கறிவேன். அவர்களுக்காக நானும் தலையிட்டுச் செயற்பட்டுள்ளேன். ஹந்தானைப் பிரதேசத்தில் அவர்களுக்குத் தோட்ட வீடுகளைக் கட்டிக்கொடுக்க நான் உதவியுள்ளேன்.வடக்கைப் பொறுத்தவரை அந்த மக் களின் பிரச்சினைகள் இன்னமும் தீர்த்து வைக்கப்படவில்லை. எனக்கும் வட பகுதிக்குச் செல்லச் சந்தர்ப்பம் கிடைத்தது. நான் அவர்களது பிரச்சினைகள் பற்றி அறிந்துள்ளேன்.
வடக்கின் பிரச்சினை பற்றி நாம் தொடர்ச்சியாக அரசுக்கு அறிவுறுத்தி வருகிறோம். எமது கருத்துக்கள் எதையும் அரச தரப்பினர் கேட்பதாக இல்லை.வடக்கு மக்கள் மீது விசேட அக்கறை செலுத்தி அந்த மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குமாறு நாம் ஜனா திபதியிடமும் வலியுறுத்தியுள்ளோம். அவ்வாறு செயற்படாமல் விட்டால் எதிர்காலத்தில் மேலும் பிரச்சினைகள் உருவாக இடமுள்ளது. வடக்கில் முன்னைய சூழல் மீண்டும் உருவாகும் என்றார்.
நொடி பொழுதில் வெடித்து சிதறிய கார்.
பொதுவாக குண்டு ஒன்று வெடித்த பின்னரே அது தொடர்பான படங்கள் வெளியாவது வழமையான சாதாரண விடயம். ஆனால் வெடித்துச் சிதறும் பொழுது அந்த நிலையை படம் பிடிப்பது அசாதாரணம்.யாரும் எதிர்பாராத வேளையில் வெடித்த இந்த கார்குண்டு சுமார் 200 பேர் வரை காயமடைவதற்கு காரணமானது.
தாய்லாந்தின் அதிக சனநடமாட்டமுள்ள நகரத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் நேற்று காலை நடைபெற்றது.அங்கு வாழுகின்ற 4500 க்கும் மேற்பட்ட முஸ்லீம் மதத்தினரை நோக்காகக் கொண்டு இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாமென அந்நாட்டு ஊடகம் தெரிவிக்கிறது.பின்னர் அங்கு விரைந்த புலனாய்வுப் பிரிவினர் தமது வழக்கமான ஆய்வுப்பணியை தொடங்கினர். இன்னமும் இதை படம் பிடித்தவர் யாரென்று தெரியாமல் குழம்புகிறதாம் அந்நாட்டு பொலிஸ் பிரிவு..
ஏமன் அதிபரின் உடல்நிலை மிக மோசமாக உள்ளது: அதிகாரி தகவல்.
ஏமன் நாட்டில் அதிபர் அலி அப்துல்லா சலே பதவி விலக வேண்டும் என மக்கள் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.அவர்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தி ஒடுக்கி வருகிறது. கடந்த மாதம் 3ம் திகதி அதிபர் அலி அப்துல்லா தொழுகை நடத்திய மசூதி மீது குண்டு வீச்சு தாக்குதல் நடந்தது.இதில் படுகாயம் அடைந்த அப்துல்லா சிகிச்சைக்காக சவுதி அரேபியா சென்றார். அவரது உடல்நிலை குறித்து முழு விபரம் தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் ஏமன் அதிகாரி ஒருவர் கூறுகையில்,"குண்டு வீச்சு தாக்குதலில் ஏற்பட்ட தீக்காயத்தில் இருந்து அதிபர் குணமடையவில்லை. படுக்கையை விட்டு அவரால் எழுந்திருக்க முடியவில்லை. அதிபரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அதிபரை சந்தித்து வருகின்றனர்" என்றார்.
லிபியாவில் மீண்டும் வெடிக்கும் மோதல்: 11 பேர் காயம்.
லிபியாவில் கடாபி ராணுவத்திற்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் 11 போராட்டக்காரர்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு போர்க்கள பகுதியில் உள்ள மருத்துவமனையிலேயே அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.
அரசு தொலைக்காட்சியில் கடாபியின் ஓடியோ செய்தி ஒளிபரப்பானதை தொடர்ந்து மிஸ்ரட்டா மற்றும் டாப்னியா பகுதியில் கடாபி ராணுவம் குண்டுகளை வீசத் துவங்கியது. அந்த தாக்குதலில் போராட்டக்காரர்கள் ஆதிக்கம் உள்ள மிஸ்ரட்டாவில் 8 ராக்கெட்டுகள் விழுந்தன.லிபியாவில் நேட்டோ நடத்தும் தாக்குதலுக்கு பதிலடி தருவோம் என கடாபி எச்சரிக்கை விடுத்து இருந்தார். அவரது எச்சரிக்கை வெளியான சில மணி நேரத்தில் இந்த தாக்குதல் நடந்து உள்ளது.
லிபியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் நேட்டோ படைகள் முகாமிட்டு உள்ளன. அந்த படைகள் உடனடியாக திரும்ப வேண்டும் என கடாபி எச்சரித்து இருந்தார்.இல்லையென்றால் ஐரோப்பா பகுதிகளை குறிவைப்போம் எனவும் எச்சரித்து இருந்தார். லிபியா அரசு செய்தித் தொடர்பாளர் முசா இப்ராகிம் கூறுகையில்,"கடாபி பழி தீர்க்க அறைகூவல் விடுத்து உள்ளார். போராட்டக்காரர்களுக்கு உரிய ஆதரவு இல்லை" என்றார்.
இந்தோனேஷியாவில் எரிமலை சீற்றம்: மக்கள் வெளியேற்றம்.
இந்தோனேஷியாவின் சுலாவேஸி தீவில் உள்ள சோபுடன் மலையில் எரிமலை இன்று அதிகாலை 6 மணியளவில் சீற்றத்துடன் வெடித்து சிதறியது.இதனால் ஐந்தாயிரம் மீற்றர் உயரத்திற்கு எரிமலை சாம்பல் பரவியது. எரிமலையை சுற்றியுள்ள எட்டு கிலோ மீற்றர் சுற்றளவில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
கடந்த 2008ல் இதே மலையில் வெடித்துச் சிதறிய எரிமலையால் அதிக புகை வெளியேற்றப்பட்டது. இருப்பினும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. தீவுகளை அதிகம் கொண்டுள்ள இந்தோனேஷியாவில் 129க்கும் மேற்பட்ட எரிமலைகள் உள்ளன.
ஆப்கானிஸ்தானில் இருந்து பிரிட்டன் வீரர்கள் நாடு திரும்ப கமரூன் உத்தரவு.
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளை எதிர்த்து நேட்டோ படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த படைபிரிவில் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜேர்மனி வீரர்கள் உள்ளனர்.அங்கு கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 9 ஆயிரத்து 500 பிரிட்டன் வீரர்கள் உள்ளனர். அவர்களில் 500 பேர் வருகிற கோடை காலத்தில் நாடு திரும்புவதற்கு பிரதமர் கமரூன் உத்தரவிட்டு உள்ளார்.
பிரதமரின் இந்த முடிவு பிரிட்டன் பாதுகாப்பு துறை தலைவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம். ஏனெனில் ஆப்கானிஸ்தானில் இருந்து வீரர்களை திரும்ப அழைக்க கூடாது என அவர்கள் அறிவுறுத்திய நிலையில் பிரதமர் இந்த முடிவை அறிவித்து உள்ளார்.கடந்த 2006ஆம் ஆண்டில் இருந்து ஆப்கானிஸ்தானில் பிரிட்டன் பெற்ற வெற்றிகள் வீணாகி போய்விடும். எனவே படை குறைப்பு கூடாது என பிரிட்டன் ராணுவ தலைவர்கள் கூறி இருந்தனர்.
கடந்த மாதம் வெளியிட்ட அறிவிப்பில் இந்த இளவேனிற் காலத்தில் 450 பிரிட்டன் வீரர்கள் நாடு திரும்புவார்கள் என அரசு தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து தற்போது 500 வீரர்கள் திரும்ப அழைக்கப்படுவார்கள் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.ஆப்கானிஸ்தானில் வருகிற ஆண்டு இறுதிக்குள் 33 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் விலக்கிக் கொள்ளப்படுகிறார்கள். அதன் முதல்கட்டமக இந்த ஜீலை மாதத்தில் 5 ஆயிரம் வீரர்கள் அங்கிருந்து வெளியேறுகிறார்கள்.
மாகாண கவர்னர் திடீரென பதவி நீக்கம்: மேலும் புரட்சி வெடித்தது.
சிரியாவில் அதிபர் பஷர் அல் அசாத்தை எதிர்த்து புதிதாக கிளர்ச்சியில் ஈடுபட்ட மக்கள் மீது அந்நாட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில் 28 பேர் பலியாகினர்.மேலும் ஹமா நகரின் கவர்னர் அகமத் கலேத் அப்துல் அசிஷ்ஷை அதிபர் அசாத் பதவி நீக்கம் செய்தார். சிரியாவில் அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களை எதிர்த்து அந்நாட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பயந்து ஆயிரக்கணக்கானோர் அருகில் உள்ள துருக்கி நாட்டிற்குள் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்நிலையில் புதிதாக சிரியா நாட்டில் அசாத்துக்கு எதிராக புரட்சி வெடித்துள்ளது.நாட்டின் மேற்கில் லெபனான் மற்றும் கிழக்கில் ஈராக்கையொட்டிய கிராம மக்கள் கடந்த வெள்ளிக்கிழமை புதிதாக புரட்சியில் ஈடுபட்டனர். தொழுகை முடித்து வெளியே வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிளர்ச்சியாளர்கள் மீது அந்நாட்டுப் படைகள் தாக்குதலில் ஈடுபட்டன.
இதில் 28 பேர் பலியாகினர்.தொடர்ந்து நீடித்து வரும் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கத்தில் வரும் 16ம் திகதி தலைநகர் டமாஸ்கசில் நடக்கும் "தேசிய பிரச்னை தீர்வு" மாநாட்டில் கலந்து கொள்வது என்று எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.ஹமா நகரில் புதிதாக புரட்சி வெடித்ததையடுத்து அந்நகர கவர்னர் அகமத் கலேத் அப்துல் அசிஷ்ஷை அதிபர் அசாத் நேற்று திடீரென பதவி நீக்கம் செய்தார்.
இங்கிலாந்தில் 5 லட்சம் சிறுவர்களுக்கு கல்லீரல் நோய் தாக்கும் அபாயம்.
இங்கிலாந்தில் கூடுதல் எடை உள்ள 5 லட்சம் சிறுவர்களுக்கு கல்லீரல் நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இந்த நோய் அபாயம் காரணமாக இதய பாதிப்பு, பக்கவாதம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.கல்லீரல் சுருக்கம் ஏற்பட்டால் சாப்பிடும் உணவு அளவு வெகுவாக குறைந்து விடும். அது மட்டும் அல்லாமல் இந்த பிரச்சினை தொடர்ந்து நீடிக்கும் போது ஜீரண பிரச்சனை ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்படும்.இங்கிலாந்து தேசிய கிளினிகல் இயக்குனர் பேராசிரியர் மார்ட்டின் லோம்பர்டு கூறுகையில்,"4 வயது முதல் 14 வயது வரை உள்ள இங்கிலாந்து சிறுவர்களுக்கு கல்லீரல் வீக்க நோய் அபாயம் உள்ளது" என தெரிவித்தார்.
கல்லீரல் செல்களில் கூடுதல் கொழுப்பு படியும் பட்சத்தில் இதய நோய் மற்றும் பக்கவாத அபாயங்கள் உள்ளன என்று தெரிவித்தார். பிற்காலத்தல் நீரிழிவு நோய் மற்றும் சிரோசிஸ் எனப்படும் கல்லீரல் சுருக்க நோய் தாக்கத்தையும் ஏற்படுத்தும்.சிரோசிஸ் நோய் பொதுவாக மது அருந்துபவர்களுக்கு ஏற்படும். உடல் பருமன் உள்ளவர்களுக்கும் இந்த நோய் தாக்கம் ஏற்படுகிறது என அந்த ஆய்வாளர் தெரிவித்தார்.
பேராசிரியர் லோம்பர்டு தேசிய குழந்தை அளவீடு திட்டத்தின் அடிப்படையில் இந்த கருத்தினை தெரிவித்து உள்ளார். 10 வயதுக்கு உட்பட்ட 60 ஆயிரம் குழந்தைகள் கல்லீரலில் கூடுதல் கொழுப்பு பெறும் அபாய நிலை உள்ளது.சிறுவயதில் உடல் பருமன் அதிகரிக்கும் பிரச்சினை அமைதியான ஆட்கொல்லியாக உருவெடுத்து வருகிறது. இங்கிலாந்தில் மொத்தம் 5 லட்சம் சிறுவர்கள் கூடுதல் பருமன் உள்ளவர்களாக உள்ளனர். அவர்கள் தங்கள் உடல் எடையில் கவனம் செலுத்த வேண்டும் என அவர் எச்சரித்து உள்ளார்.
ஜேர்மனி மருத்துவ உதவிகளை அளிக்க வேண்டும்: போராட்டக்குழு தலைவர் வேண்டுகோள்.
லிபியாவில் கர்னல் கடாபிக்கு எதிராக கடந்த பெப்பிரவரி மாதம் 14ஆம் திகதி முதல் எதிர்ப்பு போராட்டம் வெடித்துள்ளது.இந்த போராட்டத்தில் பொதுமக்களை பாதுகாக்கவும் லிபியா ராணுவ நடவடிக்கையை ஒடுக்கவும் நேட்டோ படைகள் முகாமிட்டு உள்ளன.இந்த நடவடிக்கையில் ஜேர்மனி பங்கேற்காமல் விலகி உள்ளது. ஜேர்மனியின் முடிவை லிபியா போராட்டக்குழு தலைவர் மகமூத் ஜிப்ரில் வரவேற்று உள்ளார். அவர் ஜேர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் குய்டொ வெஸ்டர்வேலேவை பெர்லினில் வியாழக்கிழமை சந்தித்தார்.
அந்த சந்திப்பின் போது அவர் ஜேர்மனியின் முடிவை தான் மதிப்பதாக போராட்டக்குழு தலைவர் தெரிவித்தார். ஜேர்மனி தங்களுக்கு ஆயுத உதவி அளிக்க வேண்டாம். இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்டு காயம் அடைந்து உள்ள தமது பிரிவினருக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.
லிபியாவில் தேசிய மாற்ற கவுன்சிலை ஜேர்மனி அங்கீகரித்து உள்ளது. மேலும் 150 லட்சம் யூரோ நிதி உதவியும் அளித்துள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு போராட்டக்குழு தலைவர் நன்றி தெரிவித்து கொண்டார்.ஜேர்மனி படை லிபியா நேட்டோ படையில் இடம் பெறாதது குறித்து செய்தியாளர்கள் போராட்டக்குழு தலைவரிடம் கேட்ட போது,"உதவிகள் பலவித வழிகளில் வருகின்றன" என்று தெரிவித்தார்.பிரான்ஸ் ஆயுதங்கள் வான் வழியே போராட்டக்காரர்கள் பகுதியில் வீசியது குறித்து அந்த போராட்டக்குழு தலைவர் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
டொமினிக் ஸ்டிராஸ்கான் வருகை: சர்கோசிக்கு பெரும் அச்சுறுத்தல்.
சர்வதேச நிதியத்தின் தலைவராக இருந்த டொமினிக் ஸ்டிராஸ்கான் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தற்போது விடுதலையாகி உள்ளார்.அவர் மீது குற்றம் சுமத்திய ஹோட்டல் பெண் ஊழியரின் கருத்தில் உள்ள நம்பகத் தன்மை குறித்து விசாரணையாளர்கள் சந்தேகம் கொண்டு விசாரணை நடத்தி வந்தனர். அதன் பின் அந்த பெண் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என நிரூபிக்கப்பட்டதால் அவர் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
வருகிற 2012ம் ஆண்டு பிரான்சில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி நிகோலஸ் சர்கோசி மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சோசலிஸ்ட் டொமினிக் ஸ்டிராஸ்கான் போட்டியிட உள்ளார்.ஜனாதிபதி தேர்தலில் டொமினிக்கிற்கு பெரும் வரவேற்பு உள்ளது. அவர் நிரபராதி என விடுதலை ஆகி தேர்தலில் போட்டியிடும் போது டொமினிக் பெரும் வெற்றி பெறுவார் என கணக்கிடப்பட்டு உள்ளது.
பிலிப்பைன்சில் வெள்ளம்: 17 குழந்தைகள் பலி.
பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆற்றின் கரை உடைந்து ஏற்பட்ட வெள்ளத்தில் 17 குழந்தைகள் உள்பட 30 பேர் உயிரிழந்தனர்.கடந்த ஜூன் மாதம் 28ம் திகதி தாவோ நகரத்திலுள்ள பாங்கி ஆற்றின் கரை உடைந்து ஏற்பட்ட வெள்ளத்தில் நகரமே மூழ்கியது.ஒரே இரவில் தாவோ நகரம் 10 அடி உயர நீரில் மூழ்கியது. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தால் சூழப்பட்டதாக "தேசிய பேரிடர் ஆபத்துதவி மற்றும் மேலாண்மைக் கவுன்சில்" அதிகாரிகள் தெரிவித்தனர்.வெள்ளம் உடனடியாக மறுநாளே வடிந்து விட்டாலும் 17 குழந்தைகள் உள்பட 30 பேர் இறந்தனர்.
தாவோ மற்றும் மிண்டநாவ் நகரங்களில் வழக்கத்தை விட கூடுதலாக மழை பெய்வதாக வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.கடந்த சில வாரங்களாக கடுமையாக பெய்து வரும் மழை மற்றும் புயலுக்கு ஏற்கெனவே 50க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிரீஸ் நாட்டிற்கு கடன் அளிப்பது குறித்து ஐரோப்பிய நாடுகள் இன்று முடிவு.
கிரீஸ் அரசு மேற்கொண்டுள்ள சிக்கன நடவடிக்கைகள் தொடர்பான மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.அதனால் இன்று(3ம் திகதி) நடக்கும் ஐரோப்பிய யூனியன் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் அந்நாட்டிற்கு கடன் வழங்குவது பற்றி முடிவெடுக்கப்படும். கிரீஸ் கடந்த 2002ம் ஆண்டில் யூரோ நாணயத்திற்கு மாறியது.இதன்பின் அதன் பொருளாதாரம் பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளைச் சார்ந்தே இருந்தது. கிரீஸ் அரசாங்கத்தின் தவறான நிர்வாக குறைபாடுகளால் நாடே திவாலானது.
இதை ஈடு செய்ய கடன் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டியதுடன் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்க வங்கிகளில் இருந்து கடன் பெற்றது. அப்பொழுதும் கடன் சுமையை ஈடு செய்ய முடியாமல் ஐரோப்பிய நாட்டு வங்கிகள் மற்றும் சர்வதேச நிதி அமைப்பிடம் இருந்து ஏராளமான அளவிற்கு கடன் பெற ஒப்பந்தம் மேற்கொண்டது.கிரீஸ் நாட்டை திவாலில் இருந்து மீட்க கடந்தாண்டில் இருந்து 7 லட்சத்து 4 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க ஐரோப்பிய யூனியன் மற்றும் சர்வதேச நிதி அமைப்பு ஒப்புக் கொண்டன.
இதில் முதல் தவணை வழங்கப்பட்ட நிலையில் வரும் ஐந்து ஆண்டு காலத்திற்கு கிரீஸ் அரசு ஐந்து லட்சத்து 84 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த அமைப்புகள் நிபந்தனை விதித்தன.இதைத் தொடர்ந்து வரி அதிகரிப்பு, பென்ஷன் குறைப்பு, வேலை வாய்ப்பு குறைப்பு, அரசு நிறுவனங்களை மூன்று லட்சத்து 27 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு தனியாருக்கு தாரை வார்த்தல் போன்ற சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டது.
சிக்கன நடவடிக்கை மசோதாவை நிறைவேற்ற ஆதரவு தரும்படி அந்நாட்டு பிரதமர் ஜார்ஜ் பாபன்டிரியோ அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு கம்யூனிஸ்ட் சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இந்த பலத்த எதிர்ப்புக்கு இடையே பாராளுமன்றத்தில் சிக்கன நடவடிக்கை மசோதா நிறைவேறியது.இந்நிலையில் கிரீஸ் நாட்டிற்கு இரண்டாவது தவணை கடன் தொகையை கொடுப்பது தொடர்பாக இன்று நடக்கும் கூட்டத்தில் ஐரோப்பிய யூனியன் நாடுகள் முடிவு எடுக்கின்றன.முக்கியமாக கிரீஸ் நாட்டை கடனில் இருந்து காப்பாற்றாவிட்டால் யூரோ நாணயத்தின் மதிப்பு குறைந்து பணவீக்கம் அதிகரித்து யூரோ நாணயத்தை பயன்படுத்தி வரும் அனைத்து ஐரோப்பிய நாடுகளும் பொருளாதார மந்தநிலையை சந்திக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
நிதி மற்றும் ஆள் பற்றாக்குறையால் திணறிய அல்கொய்தா: ஆய்வில் தகவல்.
அல்கொய்தா பயங்கரவாத அமைப்பிற்கு நிதி மற்றும் ஆட்கள் பற்றாக்குறை இருந்த விடயம் ஒசாமா பின்லேடனின் கணணியில் இருந்த தகவல்களை ஆய்வு செய்ததில் தெரியவந்துள்ளது.பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத்தில் கடந்த மே 2ம் திகதி ஒசாமா பின்லேடனை சுட்டுக் கொன்ற அமெரிக்கப் படையினர் அங்கிருந்த ஒசாமாவின் 15 கணணிகள் மற்றும் மடிக்கணணிகள் போன்றவற்றை எடுத்துச் சென்றனர்.
இவற்றில் ஒசாமா பதிவு செய்து வைத்திருந்த தகவல்கள் அடிப்படையில் அமெரிக்கா மத்திய புலனாய்வு நிறுவனம்(சி.ஐ.ஏ) அறிக்கைகளை தயாரித்துள்ளது.ஒசாமாவின் கணணி மூலம் தெரியவந்துள்ள தகவல்கள்: அல்கொய்தா அமைப்புக்குள் சிக்கல்கள் இருந்தாலும் தொடர்ந்து அமெரிக்காவின் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என ஒசாமா திட்டமிட்டிருந்தார்.மேலும் பயங்கரவாத அமைப்பில் துரோகிகள் மற்றும் உளவாளிகளை கண்டறிந்து அழிக்க புலனாய்வு அமைப்பு ஒன்றை உருவாக்கவும் தீர்மானித்திருந்தார். அதற்கு ஒப்புதலும் அளித்துள்ளார்.நிதி நெருக்கடியை போக்க நிதி ஆதாரங்களை உருவாக்க வேண்டும் என்று பயங்கரவாத அமைப்பின் இரண்டாம் மட்ட தலைவர்கள் ஒசாமாவிடம் தெரிவித்துள்ளனர். அதையும் பரிசீலிப்பதாக கூறியுள்ளார்.
ஆப்கனில் அமெரிக்கப் படைகளை எதிர்த்து போரிட்டு வரும் அல்கொய்தா பயங்கரவாதிகள் விரைவில் பலியாகின்றனர். இவர்களுக்கு மாற்று கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது மற்றும் அமைப்பில் மூன்றாம் மட்டத் தலைவர்கள் ஆளில்லா விமானங்கள் நடத்திய தாக்குதலில் பலியாகி உள்ளனர் என்பது போன்ற விவரங்களும் இடம் பெற்றுள்ளன.ஒசாமா சிலருக்கு அனுப்பிய மின்னஞ்சலில் நிதிப் பற்றாக்குறை குறித்தும் குறிப்பிட்டு அதைப் போக்க அரசுப் பிரதிநிதிகளை கடத்தி பணம் கேட்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு நிறுவனங்களின் நிதி உதவியை நாடும் லிபியா.
லிபியாவில் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் வெளிநாட்டு நிறுவனங்கள் கடனுதவி அளிக்க வேண்டும் என அந்நாட்டு ஆட்சி மாற்றக் கவுன்சில் வேண்டுகோள் விடுத்துள்ளது.லிபியா தலைவர் கடாபி, அவரது மகன் சயீப் அல் இஸ்லாம் மற்றும் அரசு புலனாய்வுத்துறை அதிகாரிகள் மூவரையும் கைது செய்யும்படி சர்வதேச கிரிமினல் கோர்ட் கடந்த மூன்று நாட்களுக்கு முன் உத்தரவிட்டது. இந்நிலையில் இவருக்கு எதிராக போரிட்டு வரும் கிளர்ச்சியாளர்களுக்கு தற்போது நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய இடைக்கால அரசின் பொருளாதார ஆலோசகர் மசன் ரமதான் கூறியதாவது: நாட்டில் சம்பளம் கொடுக்க, இறக்குமதி செய்ய நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் மட்டும் 300 கோடி டொலர் அளவிற்கு லிபியாவின் நிதி ஆதாரங்கள் முடக்கப்பட்டுள்ளன.கடந்த மாதம் அரசு ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்கப்படவில்லை. நாட்டின் கிழக்கில் மின்சாரம் கிடையாது.இதற்கிடையே தலைநகர் திரிபோலியில் மலைப்பகுதியில் உள்ள பெர்பர் மலையின மக்களுக்கு பிரான்சு நாடு விமானங்கள் மூலம் ஆயுதங்கள் வீசியதாக சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.