சட்டவிரோதமாக தங்கி இருக்கும் வெளிநாட்டவருக்கு குவைத்தில் பொதுமன்னிப்பு! 4000 இலங்கையருக்கு நன்மை.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
குவைத் நாட்டில் சட்டவிரோதமான முறையில் தங்கி இருக்கும் வெளிநாட்டவர்களுக்கு இம்மாதம் முதல் எதிர்வரும் ஜூன் மாதம் வரை பொதுமன்னிப்பு வழங்கப்படுகின்றது. இவர்கள் இப்பொதுமன்னிப்பை பயன்படுத்தி குவைத்தை விட்டு வெளியேற முடியும். தண்டனை எதுவும் வழங்கப்பட மாட்டாது.இப்பொதுமன்னிப்பால் 4000 இலங்கையர்கள் வரை நன்மை அடைவார்கள்.
விசா முடிந்தவர்கள், கடவுச்சீட்டை தொலைத்தவர்கள், சிறுகுற்றங்களுக்காக தேடப்படுபவர்கள் அவரவர் நாடுகளின் தூதரகங்கள் ஊடாக பொதுமன்னிப்புக்கு விண்ணப்பிக்க முடியும். குவைத் வெளிவிவகார அமைச்சால் தூதரகங்களுக்கு விண்ணப்ப படிவங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இவற்றை நிரப்பி கொடுக்க வேண்டும்.
1000 இற்கும் அதிகமான இலங்கையர்கள் தூதரகத்துக்கு இன்று சென்று பொதுமன்னிப்புக்கு விண்ணப்பித்து உள்ளனர்.இன்னும் 3000 பேர் வரையானோர் விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

பண்டாரநாயக்கவின் சிலையை இடமாற்ற சந்திரிகா எதிர்ப்பு! இது ஒரு சதி எனவும் குற்றச்சாட்டு.
மறைந்த முன்னாள் பிரதமரும் தனது தந்தையுமான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவின் சிலையை காலி முகத்திடலிலிருந்து அகற்றுவதையோ, வேறிடத்திற்கு மாற்றுவதையோ தான் முற்றாக எதிர்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
கொங்ஹொங் ஹோட்டல் நிறுவனம் ஒன்றினால் காலிமுகத்திடலில் உல்லாச ஹோட்டலொன்று நிர்மாணிக்கப்படவுள்ளதால் பண்டாரநாயக்கவின் சிலை அங்கிருந்து இடம் மாற்றப்படலாம் என ஊகங்கள் நிலவுகின்றன.
இது குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிடம் கேட்டபோது, இச்சிலையை இடமாற்றுவதற்கு அல்லது அகற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறினார்.
இச்சிலையை நிர்மாணிப்பதற்கு மேற்படி இடம் தெரிவு செய்யப்பட்டதற்கு கலை ரசனை, கட்டிட நிர்மாணக் கலை, சிற்பக் கலை விவகாரம் உட்பட பல காரணங்கள் உள்ளதாக தெரிவித்தார்.
இது பண்டாரநாயக்கவின் பெயரை கட்சியிலிருந்து நீக்குவதற்கான சிந்தனையின் ஒரு பகுதி. இது ஒரு சதியாகும்' என அவர் கூறினார்.
இச்சிலையை இடமாற்றும் திட்டத்திற்கு எதிராக எகிப்து மற்றும் ஏனைய இஸ்லாமிய நாடுகளில் நடைபெறுவதைப் போன்ற ஆர்ப்பாட்டங்களுக்கு தான் ஏன் ஏற்பாடு செய்யவில்லை என பலர் தன்னிடம் தொலைபேசி மூலம் கேட்பதாகவும் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார்.
சிலையொன்றை இடமாற்றுவதற்கு எதிராக இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் தேவை என நான் கருதவில்லை. அது அவசியமானால் ஊழல், வாழ்க்கைச் செலவு உயர்வு, தவறான பொருளாதார முகாமைத்துவம், இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் நடத்தப்பட்ட விதம் என்பனவற்றுக்கு எதிராகவே அது நடைபெறவேண்டும் என்றார்.
லாப் காஸின் விலையும் 96 ரூபாவால் அதிகரிப்பு.
இலங்கையில் இன்று முதல் லாப் காஸின் விலை அமுலாகும் வகையில் 96 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி லாப் எரிவாயுவின் புதிய விலை 1,652 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.முன்னர் 12.5 கிலோகிராம் நிறைறை கொண்ட லாப் காஸின் விலை 1,556 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டது.
இதேவேளை அரசாங்கத்தினால் அண்மையில் பொறுப்பேற்கப்பட்ட லித்ரோ சமையல் எரிவாயுவின் விலையில், எதுவித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. இதன்படி, லித்ரோ சமையல் எரிவாயுவின் விலை 1,652 ரூபாவிற்கே தொடர்ந்தும் விற்பனை செய்யப்படுகிறது.இந்த வருடத்தின் இரண்டாவது விலை திருத்தத்திற்கு அமைவாகவே, லாப் காஸின் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்களின் ஆடைகளைக் களையப் போவதாக இலங்கைக் கிரிக்கட் அதிகாரிகள் மிரட்டல்.
இலங்கைக் கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையைச் சோ்ந்த அதிகாரிகள் சிலர் பலவந்தமாக ஊடகவியலாளர்களின் ஆடைகளைக் களையப் போவதாக மிரட்டியுள்ளனர்.இச்சம்பவம் அண்மையில் கொழும்பில் நடைபெற்ற இலங்கை மற்றும் கென்ய அணிகளுக்கிடையிலான கிரிக்கட் போட்டியின்போது நடைபெற்றுள்ளது. அதன் போது சில ஊடகவியலாளர்கள் தமது ஊடகத்தின் அடையாளத்தைப் பிரதிபலிக்கும் வண்ணமான டீசோ்ட்டுகளை அணிந்து போட்டியைக் கண்டுகளித்துக் கொண்டிருந்தனர்.
சற்றுநேரத்தில் இலங்கைக் கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் டீசோ்ட் அணிந்த இரண்டு பெண் அதிகாரிகள் அவர்களை நெருங்கி வந்து தமது நிறுவனத்தின் விதிகளின் பிரகாரம் கிரிக்கட் போட்டிகளின் போது எந்தவொரு ஊடகவியலாளரும் அவர்களது நிறுவன இலச்சினை பொறித்த ஆடைகளை அணிய முடியாது என்றும், அது தமது தொலைக்காட்சி ஒளிபரப்பூடாக இலவச விளம்பர அனுகூலம் பெறுவதற்கு ஒப்பானது என்றும் ஊடகவியலாளர்களுடன் வாக்குவாதப்பட்டுள்ளனர்.
அதன் பின் உடனடியாக குறித்த டீசோ்ட்களை கழற்றுமாறும் இல்லாது விடில் தாம் பலவந்தமாகக் கழற்றப் போவதாகவும் அவர்கள் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியுள்ளனர். ஆயினும் ஊடகவியலாளர்கள் அது குறித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.ஊடகவியலாளர்கள் மத்தியில் இருந்து கிளம்பிய எதிர்ப்பலை காரணமாக குறித்த அதிகாரிகள் இருவரும் கடைசியில் மெதுவாகப் பின்வாங்கிச் சென்றுள்ளதாக அறியப்படுகின்றது.
ஐ.நா.மனித உரிமை மாநாட்டில் இலங்கைக்கு சாதகமான நிலை காணப்பட்டது – மஹிந்த சமரசிங்க
ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 16ஆவது மாநாட்டில் இலங்கைக்கு சாதகமான நிலை காணப்பட்டதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
போரின் பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பில் உறுப்பு நாடுகள் திருப்தி வெளியிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.போர் நிறைவடைந்த பின்னர் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு நடவடிக்கைகளை சில நாடுகள் வியந்து பாராட்டியதாக அவர் தெரிவித்துள்ளார்.பிரபல சிங்கள இணையமொன்றுக்கு அமைச்சர் அளித்த செவ்வியில் இந்தத் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அத்துடன் இடம்பெயர் மக்கள் மீள் குடியேற்றம், விடுதலைப் புலி உறுப்பினர் புனர்வாழ்வு, அரசியல் பொருளாதார ஸ்திரத்தன்மை போன்ற காரணிகள் தொடர்பில் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விஜயத்தின் போது பல்வேறு நாடுகளின் உயர்ஸ்தானிகர்களை சந்தித்து இலங்கை தொடர்பாக கருத்துக்களை பரிமாறிக்கொள்ளும் சந்தர்ப்பம் தனக்கு கிடைக்கப் பெற்றதாகவும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
கடாஃபிக்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்.
லிபிய அதிபர் மம்மர் கடாபிக்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்ற மேலவையில் (செனட்) தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.லிபியாவில் ராணுவ விமானங்கள் மூலம் மக்கள் மீது குண்டுகளை வீசி அவர்களை கடாஃபி கொலை செய்து வருவதாகவும், இதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
லிபியாவில் விமானங்கள் பறப்பதற்கு ஐ.நா. பாதுகாப்பு சபை தடை விதிக்க வேண்டுமெனவும் அமெரிக்க செனட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.கடாஃபிக்கு எதிரான தீர்மானத்தை நியூஜெர்சி செனட்டர் ராபர்ட் மெனின்டெஸ் முன்மொழிந்து பேசியது: லிபிய அதிபர் பதவியில் இருந்து கடாஃபி உடனடியாக விலகி நாட்டில் ஜனநாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். லிபியாவில் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டு வருகின்றன. இதனை மிகமுக்கியப் பிரச்னையாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கவனத்தில் கொண்டு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பேசினார்.
சர்வாதிகாரியான கடாஃபிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் ஒற்றுமையாகப் போராடும் துணிவை பாராட்டுவதாகவும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.போராட்டக்காரர்கள் மீது கடாஃபி, கொடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இது கண்டிக்கத்தக்கது. மக்கள் விருப்பத்துக்கு ஏற்ப லிபியாவில் ஜனநாயகம் மலர வேண்டும். தேர்தல் மூலம் மக்கள் தங்கள் அரசை தேர்வு செய்ய வழிவகை காண வேண்டுமென்றும் அமெரிக்க செனட் தீர்மானம் தெரிவிக்கிறது.
கடாஃபி தனித்து விடப்பட்டுள்ளார், லிபிய மக்கள் மட்டுமின்றி சர்வதேச சமூகமே அவருக்கு எதிராகத் திரண்டுள்ளது. பல ஆண்டுகளாக அவர் மக்களை வதைத்து வந்துள்ளார். தன்னை எதிர்ப்பவர்களை கொன்று குவித்துள்ளார். இதற்கு பல்வேறு சான்றுகள் உள்ளன. இப்போது மக்கள் அவருக்கு எதிராக எழுச்சியடைந்துள்ளனர். அரசைத் தேர்வு செய்யும் உரிமை மக்களுக்கு உண்டு என்று செனட் உறுப்பினர்கள் தீர்மானத்தின் போது தெரிவித்தனர்.
ஐ.நா. குழுவில் இருந்து நீக்கம்: இதனிடையே ஐ.நா. மனித உரிமைகள் குழுவில் இருந்து லிபியா இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.ஐ.நா. மனித உரிமைகள் குழுக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. லிபிய அதிபர் கடாஃபி, போராட்டக்காரர்களுக்கு எதிராக மனித உரிமைகளை மீறி செயல்படுவதால் லிபியாவை இடை நீக்கம் செய்வதாக தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. லிபியாவில் நிலவி வரும் சூழ்நிலைகள் குறித்தும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
லிபியாவில் போராட்டம் நடத்தி வருபவர்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. லிபியாவில் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எகிப்து, டுனீசியாவில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.லிபியாவைத் தாக்கக் கூடாது-ஈரான் எச்சரிக்கை: அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் லிபியா மீது தாக்குதல் நடத்தினால் அவர்கள் மோசமான எதிர்விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று ஈரான் அதிபர் மெஹ்மூத் அகமதி நிஜாத் கூறியுள்ளார்.
முன்பு அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ், இராக் மீதும் ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினார். அப்போது இருந்த சூழ்நிலை இப்போது இல்லை. இப்போது லிபியா மீது தாக்குதல் நடத்தினால் அது, அவர்களுக்கு அவர்களே மரணக் குழியை தோண்டிக் கொள்வதற்கு சமமாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். புறப்பட்டது கடாஃபியின் படை: இதனிடையே ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்க அதிபர் கடாஃபியின் படைகள் புறப்பட்டு விட்டதாக கடைசியாக கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க கடற்படையினர் நிலைகொண்டுள்ள பகுதிக்கு அருகேயுள்ள பிரிகா நகரை இந்தப் படையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளன. தலைநகர் திரிபோலியை நோக்கி வரும் கிளர்ச்சியாளர்களை இந்த படைகளைக் கொண்டு ஒடுக்க கடாஃபி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.வாஷிங்டன், மார்ச் 2: லிபிய அதிபர் மம்மர் கடாபிக்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்ற மேலவையில் (செனட்) தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
லிபியாவில் ராணுவ விமானங்கள் மூலம் மக்கள் மீது குண்டுகளை வீசி அவர்களை கடாஃபி கொலை செய்து வருவதாகவும், இதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.லிபியாவில் விமானங்கள் பறப்பதற்கு ஐ.நா. பாதுகாப்பு சபை தடை விதிக்க வேண்டுமெனவும் அமெரிக்க செனட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடாஃபிக்கு எதிரான தீர்மானத்தை நியூஜெர்சி செனட்டர் ராபர்ட் மெனின்டெஸ் முன்மொழிந்து பேசியது: லிபிய அதிபர் பதவியில் இருந்து கடாஃபி உடனடியாக விலகி நாட்டில் ஜனநாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். லிபியாவில் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டு வருகின்றன. இதனை மிகமுக்கியப் பிரச்னையாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கவனத்தில் கொண்டு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பேசினார்.சர்வாதிகாரியான கடாஃபிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் ஒற்றுமையாகப் போராடும் துணிவை பாராட்டுவதாகவும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்கள் மீது கடாஃபி, கொடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இது கண்டிக்கத்தக்கது. மக்கள் விருப்பத்துக்கு ஏற்ப லிபியாவில் ஜனநாயகம் மலர வேண்டும். தேர்தல் மூலம் மக்கள் தங்கள் அரசை தேர்வு செய்ய வழிவகை காண வேண்டுமென்றும் அமெரிக்க செனட் தீர்மானம் தெரிவிக்கிறது.
கடாஃபி தனித்து விடப்பட்டுள்ளார், லிபிய மக்கள் மட்டுமின்றி சர்வதேச சமூகமே அவருக்கு எதிராகத் திரண்டுள்ளது. பல ஆண்டுகளாக அவர் மக்களை வதைத்து வந்துள்ளார். தன்னை எதிர்ப்பவர்களை கொன்று குவித்துள்ளார். இதற்கு பல்வேறு சான்றுகள் உள்ளன. இப்போது மக்கள் அவருக்கு எதிராக எழுச்சியடைந்துள்ளனர். அரசைத் தேர்வு செய்யும் உரிமை மக்களுக்கு உண்டு என்று செனட் உறுப்பினர்கள் தீர்மானத்தின் போது தெரிவித்தனர்.
ஐ.நா. குழுவில் இருந்து நீக்கம்: இதனிடையே ஐ.நா. மனித உரிமைகள் குழுவில் இருந்து லிபியா இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.ஐ.நா. மனித உரிமைகள் குழுக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. லிபிய அதிபர் கடாஃபி, போராட்டக்காரர்களுக்கு எதிராக மனித உரிமைகளை மீறி செயல்படுவதால் லிபியாவை இடை நீக்கம் செய்வதாக தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. லிபியாவில் நிலவி வரும் சூழ்நிலைகள் குறித்தும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
லிபியாவில் போராட்டம் நடத்தி வருபவர்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. லிபியாவில் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எகிப்து, டுனீசியாவில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.லிபியாவைத் தாக்கக் கூடாது-ஈரான் எச்சரிக்கை: அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் லிபியா மீது தாக்குதல் நடத்தினால் அவர்கள் மோசமான எதிர்விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று ஈரான் அதிபர் மெஹ்மூத் அகமதி நிஜாத் கூறியுள்ளார்.
முன்பு அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ், இராக் மீதும் ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினார். அப்போது இருந்த சூழ்நிலை இப்போது இல்லை. இப்போது லிபியா மீது தாக்குதல் நடத்தினால் அது, அவர்களுக்கு அவர்களே மரணக் குழியை தோண்டிக் கொள்வதற்கு சமமாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
புறப்பட்டது கடாஃபியின் படை: இதனிடையே ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்க அதிபர் கடாஃபியின் படைகள் புறப்பட்டு விட்டதாக கடைசியாக கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க கடற்படையினர் நிலைகொண்டுள்ள பகுதிக்கு அருகேயுள்ள பிரிகா நகரை இந்தப் படையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளன. தலைநகர் திரிபோலியை நோக்கி வரும் கிளர்ச்சியாளர்களை இந்த படைகளைக் கொண்டு ஒடுக்க கடாஃபி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
பூகம்பத்திற்கு பின் நியூசிலாந்தை தாக்கிய தூசிப் புயல்.
நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் நகரில் கடந்த 22 ம் திகதி பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. பலி எண்ணிக்கை 159 ஆக உயர்ந்துள்ளது.மீட்புப் பணிகள் தொடர்ந்து கொண்டிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. இந்நிலையில் கிறிஸ்ட்சர்ச் நகரில் மணிக்கு 70 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசுகிறது.
பூகம்பத்தில் இடிந்த கட்டிடங்களின் தூசிகளையும் அள்ளி வீசுவதால் மீட்புப் பணிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.தூசிப் புயலாலும் ஆங்காங்கே இடிபாடுகளில் சிக்கி கிடக்கும் பிணங்களாலும் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முக மூடி அணிந்து கொண்டு மீட்பு பணிகளில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.
ஆற்றில் காரை மூழ்க வைத்து மகளை கொலை செய்த தந்தை.
ஒரு ஆற்றில் தன்னுடைய இரு குழந்தைகளை காரோடு மூழ்க வைத்த குற்றத்திற்காக தந்தை கிறிஸ்டோபர் கைது செய்யப்பட்டார்.கடந்த ஆண்டு பெப்ரவரி 11 ல் நடந்த இச்சம்பவம் இப்பொழுது நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளது. கிம் ஸ்மித், கிறிஸ்டோபர் தம்பதியரின் குழந்தைகள் கேப்ரியில்லா மற்றும் ரையான். இவர் இரும்பு பட்டறை தொழிலாளியாகவும், போதிய பண வசதி இல்லாதவராகவும் இருந்துள்ளார்.
தனது மனைவியுடன் ஏற்பட்ட சண்டையின் காரணமாக தனது வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இவர் தனது குழந்தைகளையும் காரில் அழைத்து கொண்டு ஆற்றில் காரை செலுத்தினார். குழந்தைகள் இருவரும் பின்பக்கம் வழியாக கதறிக் கொண்டு தப்பிக் முயன்றுள்ளனர்.இருவருக்கும் நீச்சல் தெரியாததால் மூழ்கும் காருக்குள் சிக்கிக் கொண்டனர். காரில் மூழ்கிய மூவரையும் பொலிஸ் அதிகாரி ஒருவர் காப்பாற்றினார். அதன் பின் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சிகிச்சை பலனின்றி அவரது மகள் இறந்து விட்டார். எனது மனைவியால் நான் அனைத்து கஷ்டங்களையும் அடைந்து விட்டேன். அதனால் அனைவரையும் கொல்ல நினைத்தேன். இதன் காரணமாகவே காரை ஆற்றுக்குள் செலுத்தினேன் என்று கிறிஸ்டோபர் கூறினார்.
குடும்பச்சண்டையில் குழந்தைகளுடன் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்த பெண்!
பெங்களூரு, மாத நாயக்கன ஹள்ளியில், ஜனப்ரியா அடுக்கு மாடி குடியிருப்பில், வசித்து வருபவர் ஷியாம் சுந்தர். கேப்ஸ் டிரைவரான இவருக்கு மனைவி அனுராதா (23), மகள் பாவனா (5),மகன் விஸ்வநாத் (1) உள்ளனர். கணவனுக்கும், மனைவிக்கும் நேற்று முன்தினம் இரவு, சண்டை ஏற்பட்டது. வெறுத்து போன அனுராதா, நேற்று காலை, தான் வசித்து வரும் ஐந்தாவது மாடியிலிருந்து, இரு குழந்தைகளுடன் கீழே குதித்தார்.
அனுராதாவும், குழந்தை பாவனாவும் பலியாகினர். ஒரு வயது குழந்தை விஸ்வநாத் படுகாயமடைந்து, நிமான்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. மாதநாயக்கனஹள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அனுராதாவும், குழந்தை பாவனாவும் பலியாகினர். ஒரு வயது குழந்தை விஸ்வநாத் படுகாயமடைந்து, நிமான்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. மாதநாயக்கனஹள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குடும்பத் தகராறில் மனைவி, 3 குழந்தைகளையும் குத்திக் கொன்ற தொழிலாளி!
தர்மபுரி மாவட்டம் அரூர் தாதம்பட்டி தி.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். கூலி தொழிலாளி. இவரது மனைவி சியாமளா. இவர்களுக்கு சுஜித்ரா (6) என்ற பெண் குழந்தையும், ஜெகன் (4), அன்பழகன் (3) என்ற 2 ஆண்குழந்தைகளும் இருந்தனர்.
சுரேஷ் குடிப்பழக்கம் உடையவர். இவர் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பும் சுரேசுக்கும், அவரது மனைவி சியாமளாவுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சுரேஷ் வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயக்கம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் மீட்டு அரூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று நேற்று வீட்டிற்கு திரும்பினார். தன்னை தற்கொலை செய்யும் அளவுக்கு தூண்டிய மனைவி சியாமளா மீதும், குழந்தைகளின் மீதும் சுரே சுக்கு கொலைவெறி ஏற்பட்டது. நேற்று இரவு வீட்டில் அனைவரும் சாப்பிட்டு விட்டு படுத்து தூங்கினர். அந்தநேரத்தில் சுரேஷ் அவரும் ஒரு கூர்மையான கல்லை எடுத்து வந்தார். அதை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருந்தார். பின்னர் படுத்து தூங்கினார்.
இன்று அதிகாலை திடீரென எழுந்த சுரேஷ் வீட்டை உள்பக்கமாக பூட்டினார். பின்னர் குழந்தைகள் மற் றும் மனைவி படுத்திருந்த அறைக்கு சென்றார். முதலில் ஒரு குழந்தையின் வாயை பொத்தி கூர்மையான கல்லால் கழுத்து, தலை, வயிறு உள்ளிட்ட இடங்களில் குத்தி கொலை செய்தார். அடுத்த குழந்தையையும் இதே போல் கொலை செய்தார். 3-வது குழந்தையை கொலை செய்த போது அந்த குழந்தை சத்தம் போட்டது. ஆனாலும் விடாமல் கொடூரமாக துடிக்க, துடிக்க கொலை செய்தார்.
அப்போது சத்தம் கேட்டு எழுந்த மனைவி சியாமளாவையும் கூர்மையான கல்லால் தலை, வயிறு, தொண்டை உள்ளிட்ட இடங்களில் குத்தினார். அவர் மயக்கம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் அவர்கள் அனைவரும் வீட்டிற்குள்ளே கிடந்தனர்.
உடனே சுரேஷ் நான் என் மனைவி மற்றும் 3 குழந்தைகளை கொலை செய்து விட்டேன் என்று சந்தோசமாக சத்தம் போட்டப்படி சென்றார். இதைக்கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். சுரேஷ் வீட்டிற்கு வந்து பார்த்த போது 3 குழந்தைகளும் ரத்த வெள்ளத்தில் படுக்கையிலேயே பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சியாமளாவுக்கு உயிர் இருப்பதை பார்த்த அவர்கள் அவசர அவசரமாக அவரை அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தப்பி ஓடிய சுரேஷ் அந்த வழியாக வந்த லாரியில் மோதி தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த லாரி டிரைவர் திடீர் பிரேக் போட்டு லாரியை நிறுத்தினார். கை, தலையில் படுகாயம் அடைந்த சுரேசையும் பொதுமக்கள் மீட்டு அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பாகிஸ்தானை உலுக்கிய அமைச்சர் படுகொலை! சரமாரியாகச் சுட்ட மர்ம மனிதர்கள்.
பாகிஸ்தான் சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் ஷாபாஸ் பட்டி, நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார்.
இரண்டு மாதங்களில் நடந்துள்ள இரண்டாவது பெரிய அரசியல் படுகொலை இது. பாகிஸ்தான் அரசில், சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சராக இருந்தவர் ஷாபாஸ் பட்டி.
பிரதமர் கிலானி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஒரே கிறிஸ்தவரான இவர், சமீப காலமாக தனக்கு கொலை மிரட்டல் வருவதாக கூறி வந்தார். பாகிஸ்தான் அரசின் மத துவேச சட்டத்திற்கு எதிராகவும் அடிக்கடி குரல் கொடுத்தார். இறை தூதர் முகமது நபியை இழிவுபடுத்தியதற்காக, கடந்த ஆண்டில், பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்தவ பெண்ணான ஆசியா பீவிக்கு ஆதரவாகவும் பேசி வந்தார்.
இந்நிலையில், நேற்று காலை 11.20 மணிக்கு இஸ்லாமாபாத்தில் செக்டார்-1பி-யில் உள்ள தன் வீட்டிலிருந்து ஷாபாஸ் பட்டி காரில் புறப்பட்டார். அவருடன் டிரைவரும், மற்றொரு அடையாளம் தெரியாத பெண்ணும் காரில் அமர்ந்திருந்தனர்.

பாதுகாவலர்கள் யாரும் இல்லை. ஷாபாஸ் பட்டியின் கார் வீட்டை விட்டு வெளியே வந்த போது, துப்பாக்கியுடன் வந்த ஒருவன் காரை நிறுத்தினான். டிரைவரையும், காரில் அமர்ந்திருந்த மற்றொரு பெண்ணையும் கீழே இறங்கும்படி கூறிய அவன், அவர்கள் இறங்கியதும், அமைச்சரை நோக்கி சரமாரியாக சுட்டான். 20 வினாடிகள் வரை சுட்டு விட்டு, தப்பினான். பலத்த காயம் அடைந்த அமைச்சர் ஷாபாஸ் பட்டியை, உடனடியாக அருகிலிருந்த ஷிபா சர்வதேச மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்; அங்கு அவர் இறந்தார்.
அமைச்சரின் காரை துப்பாக்கியுடன் வந்த நான்கு பேர் பல கோணங்களில் இருந்து தாக்கியதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். கடந்த ஜனவரி 4ம் தேதி, பாகிஸ்தான் பஞ்சாப் மாகாண கவர்னர் சல்மான் தசீன், அவரது தீவிரவாத பாதுகாவலரால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். அதன் பின், இரண்டு மாதத்திற்குள் இரண்டாவது பெரிய அரசியல் படுகொலை நடந்துள்ளது. அமைச்சரை துப்பாக்கியால் சுட்டவர்கள் உருது மொழியில் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்களையும் வீசிச் சென்றுள்ளனர்.
அதில், மத துவேச சட்டத்திற்கு எதிராக ஷாபாஸ் அடிக்கடி பேசி வந்ததால், கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. கொல்லப்பட்ட அமைச்சர் ஷாபாஸ் பட்டி, தனது உயிருக்கு ஆபத்து உள்ள விவரம் குறித்து, பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக், அதிபர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் பிரதமர் கிலானி ஆகியோரிடம் ஏற்கனவே புகார் தெரிவித்துள்ளார். இருந்தும் அவருக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை. அமைச்சர் ஷாபாஸ் பட்டி படுகொலைக்கு பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, பிரதமர் கிலானி உட்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.