பிரிட்டனுக்கான மாணவர் விசா: 230 இலங்கையர்கள் கடந்த மாதம் மோசடி!
பிரித்தானியாவுக்கான மாணவர் விசாவுக்கு விண்ணப்பித்தபோது கடந்த மாதம் மாத்திரம் 230 இலங்கையர்கள் மோசடிகள் செய்து இருக்கின்றார்கள்.பிரித்தானிய எல்லைக் காப்புப் படையினர் இம்மோசடிகளை கண்டு பிடித்து இருக்கின்றார்கள்.
போலியான ஆவணங்களை பயன்படுத்தி மாணவர் விசாவுக்கு விண்ணப்பிக்கின்றமையில் இலங்கையர்கள் மிகவும் முன்னிலை உள்ளார்கள் என்று பிரித்தானிய எல்லைக் காப்புப் படைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்து உள்ளார். மோசடியில் கடந்த மாதம் ஈடுபட்ட இலங்கையர்களின் பெயர்கள், விபரங்கள் ஆகியவற்றை இலங்கைப் பொலிஸாருக்கு சமர்ப்பிக்க உள்ளனர் என்றும் இவர் கூறினார்.
கனடா போர்க்கப்பல் லிபியாவை நோக்கி விரைந்தது.
லிபிய அதிபர் கடாபியின் பதவி விலகலை கோரும் சர்வதேச நாடுகளின் இராணுவ நடவடிக்கைகளுக்கு இணங்க கனடாவும் தன்னுடைய அதிவிரைவு போர்க்கப்பலை லிபியாவுக்கு அனுப்பியுள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

இது குறித்து பிரதமர் ஹார்ப்பர் கூறுகையில்,"இன்று போர்க்கப்பல் கிளம்பி 6 நாட்களில் 240 வீரர்களுடன் லிபிய கடல் எல்லைக்குள் நுழையும்" என்றார். கனடிய மக்களை லிபியாவிலிருந்து வெளியேற்ற வேண்டிய உதவிகளை இக்கப்பல் செய்யும்.
பாதுகாப்பு துறை அமைச்சர் பீட்டர் மெக்கே கூறியதாவது: நோட்டோவோ மற்றும் ஐக்கிய நாடுகளோ லிபியாவை முற்றுகையிட முடிவு செய்யுமானால் அப்பணிகளிலும் இக்கப்பல் உதவியாக இருக்கும் என்றார்.
மேலும் கனடா துருப்புகள் 13 பேர் பணி புரிவதாகவும், அவர்கள் கனடாவைச் சேர்ந்த 100 லிருந்து 200 பேர்களை பாதுகாப்பாக வெளியேற்ற ஒத்துழைப்பார்கள் என்றும் தெரிவித்தார். கனடா துருப்புகள் இப்போதுள்ள நிலையில் எந்த இராணுவ நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என்றும் தன் நாட்டவரை பத்திரமாகவும், விரைவாகவும் அங்கிருந்து வெளியேற்றுவதே முக்கிய நோக்கம் என்றும் கூறினார்.
வட ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள சமீபத்திய மக்கள் போராட்டங்களுக்கு கனடாவின் மிதமான அணுகுமுறை விமர்சனங்களுக்குள்ளானது. அதன் பின் கனடா கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் படி கடாபியின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் பயணத் தடையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹோஸ்னி முபாரக் வெளிநாடு செல்லத் தடை.
எகிப்தில் அரசியல் சாசனத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள் குறித்து பொதுமக்கள் ஓட்டெடுப்பு, அதிபர் பதவிக்கு தேர்தல் நடக்கும் தேதிகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதே சமயம் முபாரக் குடும்பத்தினர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. எகிப்தில் சமீபத்தில் அரசியல் சாசனத்தின் 11 பிரிவுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன. அதிபரின் பதவிக் காலத்தைக் குறைப்பது, அவசர நிலைச் சட்டத்தைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட முக்கியமான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதுகுறித்து முன்பு முபாரக்கை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட புரட்சிகர இளைஞர் கூட்டணி என்ற அமைப்பின் ஜாயத் எல் எலய்லி என்பவர் இரு நாட்கள் முன்பு ராணுவ உயர் மட்டக் கவுன்சிலின் மூன்று உறுப்பினர்களைச் சந்தித்தார்.
அதன் பின் அவர் அளித்த பேட்டியில்,"அரசியல் சாசனத் திருத்தம் பற்றிய பொது ஓட்டெடுப்பு மார்ச் 19 ம் தேதியும், பார்லிமென்ட்டுக்கான தேர்தல் ஜூன் மாதமும் அதில் இருந்து ஆறு வாரங்கள் கழித்து அதிபர் தேர்தலும் நடக்கும் என்று என்னிடம் கூறினர்" என்று தெரிவித்தார்.
எனினும் இது குறித்து ராணுவக் கவுன்சில் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. இதற்கிடையில் சமீபத்தில் முன்னாள் அதிபர் முபாரக்கின் மனைவி சூசன்னே மற்றும் இளைய மகன் கமால் இருவரும் தற்போது முபாரக் தங்கியுள்ள சினாய் தீபகற்பத்தின் ஷரம் எல் ஷேக் விமான நிலையத்தில் இருந்து தனியார் விமானம் ஒன்றின் மூலமாக வெளிநாடு செல்ல முற்பட்டனர்.
அப்போது எகிப்து அதிகாரிகள் அரசின் அனுமதியின்றி வெளிநாடு செல்ல அனுமதிக்க முடியாது என்று தடுத்து விட்டனர். இதையடுத்து நேற்று முன்தினம் எகிப்து அரசுத் தரப்பு வக்கீல் முபாரக் மற்றும் அவரது குடும்பத்தார் வெளிநாடு செல்லத் தடை விதித்தும், எகிப்தில் உள்ள முபாரக்கின் சொத்துக்களை முடக்கியும் அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
மக்களுக்கு போதை மருந்து வழங்கல்: கடாபி திடுக்கிடும் தகவல்கள்
லிபியாவில் கடாபிக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்ற செய்தி வெளியாகியுள்ளன.அது மட்டுமின்றி வீதிகளில் பிணங்கள் கேட்பாரற்று கிடக்கிறது என்கிற செய்தி வரும் வேளையில் மக்கள் என்மீது அன்பாக உள்ளனர். எனக்காகத்தான் உயிர் துறக்கின்றனர் என்று பேட்டியளித்துள்ளார் கடாபி.
கடந்த 41 ஆண்டுகளாக அதிபராக இருந்து வரும் கடாபி எதிரான போராட்டத்தை அடக்க ராணுவம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. போராட்டக்காரர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு அமெரிக்காவும், ஐ.நா.சபையும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந் நிலையில் அதிபர் கடாபி திரிபோலியில் வெளிநாட்டு செய்தி நிறுவனங்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது: லிபியா மக்கள் அனைவரும் என் மீது அன்பாக உள்ளனர். அனைத்து தெருக்களிலும் எனக்கு எதிராக போராட்டம் நடைபெறவில்லை. அவர்கள் ஏன் என்னை எதிர்க்க வேண்டும். அனைத்து மக்களும் என் மீது அன்பாக இருக்கின்றனர். என்னை காப்பாற்றவே தங்கள் இன்னுயிரை துறக்கின்றனர்.
நான் எனது நாட்டை விட்டும், அன்பான மக்களை விட்டும் வெளியேற மாட்டேன். நான் ஏன் எனது தாய்நாட்டை விட்டு வெளியேற வேண்டும். போராட்டம் நடைபெறுவதற்கு அல்குவைதாதாவே காரணம். மக்களுக்கு போதை மருந்துகளை கொடுத்து எனக்கு எதிராக கிளப்பி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வித்தியாசமான உணவுகள் - நியூசிலாந்தில் நடைபெறும் காட்டு உணவுத் திருவிழா.
நியூசிலாந்தின் ஹொகிடிகா நகரில் வருடந்தோறும் காட்டு உணவுத் திருவிழா நடைபெறுகின்றது. இது 'ஹொகிடிகா காட்டு உணவுத்திருவிழா' என அழைக்கப்படுகின்றது. இங்கு பல வித்தியாசமான உணவு வகைகள் பரிமாறப்படுகின்றன. நத்தைக் கறி, ஆட்டின் மூளை கறி, ஆட்டின் வால் கறி, பசுக் கன்றுகளின் உடல் உறுப்புக்களின் கறி, கடல் அட்டைக் கறி, மண்புழுக் கறி ஆகியன அங்கு பரிமாறப்படுபவற்றில் சிலவாகும்.
ஓமனில் போராட்டம் தொடர்வதால் பீதி!
வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமனில், அரசுக்கு எதிரான போராட்டம் நேற்று மூன்றாவது நாளாகத் தொடர்ந்தது. நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தில் ஆறு பேர் பலியாயினர்.இதனால், அரபு நாடுகள் பீதியில் ஆழ்ந்துள்ளன. டுனீசியா, எகிப்து, ஏமன், லிபியா, பக்ரைன், ஜோர்டான், சிரியா, மொராக்கோ, அல்ஜீரியா என அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடரும் நாடுகளின் வரிசையில் தற்போது, எண்ணெய் வளம் மிக்க நாடான ஓமனும் சேர்ந்துள்ளது.
அந்நாட்டை கடந்த 40 ஆண்டுகளாக கபூஸ் பின் சயீத் ஆண்டு வருகிறார். ஓமனில் அரசியல் கட்சிகள் தடை செய்யப்பட்டுள்ளன. கடந்த 26ம் தேதி, அந்நாட்டின் தொழில் நகரமான சோகாரில் நூற்றுக்கணக்கானோர் சம்பள உயர்வு, ஊழல் ஒழிப்பு, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல், ஊழல் அமைச்சர்களை பதவி நீக்கல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டத்தில் இறங்கினர்.
போலீசார் இப்போராட்டத்தை தடியடி உள்ளிட்ட வழக்கமான "கவனிப்புகள்' மூலம் கலைத்து விட்டனர். ஏற்கனவே அரபு பிராந்தியத்தில் போராட்டம் நெருப்பாக பரவி வருவதால், பீதியடைந்த மன்னர் சயீத், உடனடியாக அமைச்சரவையில் இருந்து ஆறு அமைச்சர்களை நீக்கினார்.
ஆனால், நேற்று முன்தினமும் போராட்டம் தொடர்ந்தது. போலீசார் ரப்பர் குண்டுகள், கண்ணீர் புகை குண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு நடத்தி கூட்டத்தைக் கலைக்க முற்பட்டனர். இச்சம்பவத்தில் ஆறு பேர் பலியானதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், சுகாதாரத் துறை அமைச்சர் அகமது பின் முகமது அல் சயீத், "துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை; ஒருவர் மட்டுமே பலியானார்' என்று கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் சோகாருக்குச் செல்லும் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. நேற்று, சோகாரில் உள்ள பிரதான சந்தைப் பகுதி கொள்ளையடிக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது. அந்நகரைச் சுற்றி போலீசார் குவிக்கப்பட்டனர். எனினும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைக்க முற்படவில்லை. எண்ணெய் ஏற்றுமதி பாதிக்குமா? "பெட்ரோல் ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பில்' (ஓபெக்) ஓமன் இல்லை என்றாலும், உலகின் எண்ணெய் வளம் மிக்க நாடுகளில் 24வது இடத்தில் உள்ளது.
ஒரு நாளைக்கு 8,50,000 பேரல்கள் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் குறிப்பிடத்தக்க நாடு அது. அதன் முக்கியத் துறைமுகமான மினா அல் பஹல் வழியாக, எண்ணெய் ஏற்றுமதி நடக்கிறது. ஓமன் துறைமுகங்களின் வழியாகத் தான் உலகின் 40 சதவீத எண்ணெய்க் கப்பல்கள் போக்குவரத்து நடந்து வருகிறது.
சோகார் துறைமுகம் வழியாக ஒரு நாளைக்கு 1,60,000 சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் பேரல்கள் கையாளப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், "சோகார் துறைமுகம் வழியாக சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஏற்றுமதி தொடர்ந்து நடக்கிறது.
போராட்டக்காரர்கள் அமைதியான முறையில் தான் போராடுகின்றனர். எனினும் போராட்டங்கள் தொடர்ந்தால், துறைமுகப் பணிகளுக்குச் செல்வோர் தடுக்கப்பட்டால் ஏற்றுமதி நிச்சயம் பாதிக்கப்படும்' என்று சோகார் துறைமுக செய்தித் தொடர்பாளர் கவலை தெரிவித்தார்.

பதற்றத்தில் லிபியா! எந்த நேரத்திலும் உக்கிர மோதல் வெடிக்கலாம்.
லிபியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஜாவியா மற்றும் மிஸ்ரட்டா நகரங்களில் நேற்று, கடாபி ராணுவத்துக்கும், எதிர்ப்புப் படைகளுக்கும் இடையில் பயங்கர மோதல் நடந்தது. இதில் 10 பேர் பலியாயினர்.
இதற்கிடையில், லிபியாவைச் சுற்றியுள்ள தனது படைத் தளங்களில், கப்பல்படை மற்றும் விமானப் படைகளை அமெரிக்கா தயார் நிலையில் வைத்துள்ளது. மேலும் "நேட்டோ' கூட்டணி நாடுகளுடன் ராணுவ நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகிறது.லிபியாவில் அதன் தலைவர் மும்மர் கடாபிக்கு எதிரான ஆர்ப்பாட்டம் தற்போது பெரும் மோதலாக வெடித்துள்ளது.
நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள ராணுவம் பொதுமக்களோடு சேர்ந்துள்ள நிலையில், மேற்குப் பகுதி ராணுவம் மட்டும், கடாபிக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறது.இந்த ராணுவம், கடாபியின் மகன் கமீஸ் என்பவரின் கீழ் இயங்கி வருகிறது.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நவீன ரக ஆயுதங்கள் இதன் வசம் இருப்பதால் மிகவும் சக்தி வாய்ந்ததாக இந்த ராணுவம் கருதப்படுகிறது.இதுதான் தற்போது கடாபிக்கு ஆதரவாகச் செயல்பட்டு, டிரிபோலியை தன் வசம் பிடித்து வைத்துள்ளது. நேற்று முன்தினம், டிரிபோலியில் இருந்து 50 கி.மீ., மேற்கில் உள்ள ஜாவியா நகரை, எதிர்ப்புப் படைகள் கைப்பற்றிய நிலையில், அந்நகரை 2,000 கடாபி ராணுவ வீரர்கள் முற்றுகையிட்டனர்.
ஜாவியா நகரில் மோதல்: ஜாவியா நகர் அருகில் உள்ள அஜ்தாபியா என்ற இடத்தில், எதிர்ப்புப் படையினர் கைப்பற்றிய வெடிபொருள் கிடங்கின் மீது கடாபி ராணுவம் குண்டு வீசி அழித்தது. இந்த கிடங்கில் குண்டுகள், ஏவுகணைகள் மற்றும் பல்வேறு வெடிபொருட்கள் இருந்தன. குண்டு வீச்சில் கிடங்கின் பாதிப் பகுதி சேதம் அடைந்தது.
ஆனால் லிபிய பாதுகாப்பு அமைச்சகம், இந்தத் தாக்குதல் நடக்கவில்லை என்று மறுத்துள்ளது. தொடர்ந்து இருதரப்புக்கும் கடும் மோதல் வெடித்தது. இதில் எதிர்ப்புப் படைகள் தீவிரமாகப் போரிட்டு கடாபி ராணுவத்தை முறியடித்தன.ஜாவியா நகரைச் சேர்ந்த ஒருவர் இந்த மோதல் பற்றிக் கூறுகையில்,"இந்தப் பகுதியின் செல்வாக்கு மிகுந்த பழங்குடியினத் தலைவர் முகமது அல் மக்துப்பிடம் பேசிய கடாபி, இன்று காலைக்குள் (நேற்று) எதிர்ப்புப் படைகள் ஜாவியாவை விட்டு போகாவிட்டால், போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப் போவதாக மிரட்டியுள்ளார்.
நாங்கள் துணிந்து விட்டோம். அந்தப் போரைத் தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்' என்று தெரிவித்தார்.ஜாவியா நகர் போரில், கடாபி ராணுவத்தைச் சேர்ந்த 10 பேர் பலியாயினர். ஆனால் எதிர்ப்புப் படையினரில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இதை லிபிய அரசுத் தரப்பும் உறுதிப்படுத்தியது.
மிஸ்ரட்டாவில் மோதல்:அதேபோல், மிஸ்ரட்டா நகரில் உள்ள ராணுவ விமான தளத்தை கடாபி ராணுவம் கைப்பற்றியது. ஆனால், எதிர்ப்புப் படைகளின் அதிரடி போரால் அந்த விமான தளத்தில் இருந்து கடாபி ராணுவம் பின் வாங்க வேண்டியதாகி விட்டது. விமான தளம், எதிர்ப்புப் படையினர் வசம் வந்தது.டிரிபோலி அருகிலுள்ள சப்ரத்தா நகரை கடாபி ராணுவம் கைப்பற்றியது. ஆனால் அங்கிருந்த மக்கள், போலீஸ் நிலையம் ஒன்றை தீக்கிரையாக்கி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதையடுத்து மக்கள் கூட்டம் போலீசாரால் கலைக்கப்பட்டது.
"மக்கள் என்னை நேசிக்கின்றனர்':நேற்று முன்தினம் "ஏ.பி.சி.,' செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த மும்மர் கடாபியிடம், அவர் பதவியை விட்டு விலகுவாரா என்ற கேள்வி கேட்கப்பட்ட போது பலமாகச் சிரித்துக் கொண்டே கூறியதாவது: லிபியாவின் அனைத்து மக்களும் என்னை நேசிக்கின்றனர்; என்னைக் காப்பதற்காக அவர்கள் தங்களையே பலி கொடுப்பர்; எனக்கு எதிராக யாரும் செயல்படவில்லை; பதவி விலகுவதற்கு நான் ஒன்றும் மன்னரோ, அதிபரோ அல்ல.
நான் இருப்பது ஒரு கவுரவமான பதவி. என்னிடம் அதிகாரம் ஒன்றும் இல்லை. பிரிட்டனில், யாரிடம் அதிகாரம் உள்ளது? ராணி எலிசபெத்திடமா? பிரதமர் டேவிட் கேமரூனிடமா?வெளிநாட்டவரால் லிபியா அரசியலைப் புரிந்து கொள்ள முடியாது. இங்கு அதிகாரம் முழுவதும் மக்களிடம் தான் உள்ளது.மேற்கத்திய நாடுகள், லிபியாவை மீண்டும் காலனி நாடாக்க விரும்புகின்றன.
அதனால் தான் அவை லிபியாவைக் கைவிட்டு விட்டன. அல் குவைதாவை எதிர்ப்பதற்காக நான் மேற்கத்திய நாடுகளுடன் இணைந்தேன்.இப்போது எங்களை கைவிட்டு விட்ட பயங்கரவாதிகளை எதிர்த்து நாங்கள் போராடுகிறோம். நான் வெளிநாடுகளில் பணம் வைத்திருப்பதாக பிரிட்டன் பிரதமர் கூறுகிறார்.
அப்படியானால் அவர் ஒரு ஆதாரத்தையாவது காட்டட்டுமே! நான் அவர்களின் கண்களில் விரல்களை விட்டு ஆட்டி விடுவேன்.அல் குவைதா கொடுத்த போதை மருந்துகளை உண்டதால் தான், லிபிய இளைஞர்கள் தெருவில் நின்று ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.இவ்வாறு கடாபி தெரிவித்தார்.அவரது பேட்டி குறித்து கருத்து தெரிவித்த
ஐ.நா.,வுக்கான அமெரிக்கத் தூதர் சூசன் ரைஸ்,"அவரது பேட்டி வெறும் வாய்ச் சவடால்தான். இதில் இருந்தே அவர் உண்மை நிலவரத்தை விட்டு விலகியிருக்கிறார் என்பது வெளிப்பட்டு விட்டது' என்றார்.
ஊடுருவ அமெரிக்கா தயார்: இந்நிலையில் லிபியாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமெரிக்கா தனது கப்பல் மற்றும் விமானப் படைகளை தயார் நிலையில் வைத்துள்ளது. தேவைப்பட்டால், லிபியா மீது அமெரிக்க விமானங்கள் ரோந்து வரும். மேலும் "நேட்டோ' கூட்டணியில் உள்ள நாடுகளுடன், லிபியா மீது ராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்தும் அமெரிக்கா ஆலோசித்து வருகிறது. லிபியா மீது விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்படும் என்றும், மக்களைக் குண்டு வீசிக் கொல்லும் லிபிய ராணுவ விமானங்களை போர் விமானங்கள் மூலம் தாக்க நேரிடும் என்றும் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் எச்சரித்துள்ளார்.
நேற்று பி.பி.சி., செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், கடாபி, நாட்டின் மிகச் சிறிய பகுதியை மட்டுமே தனது பிடியில் வைத்திருப்பதாகவும், அவர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அமெரிக்காவைத் தடுக்க வெனிசுலா முயற்சி: கடாபிக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தான் அவ்வாறு செய்யப் போவதில்லை என்று வெனிசுலா அதிபர் ஹ்யூகோ சாவேஸ் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் அளித்த பேட்டியில்,"நான் அவரைக் கண்டனம் செய்யப் போவதில்லை. ஆனால், இந்த சூழலை சாக்காக வைத்துக் கொண்டு, அமெரிக்கா எந்நேரம் வேண்டுமானாலும், லிபியாவுக்குள் ஊடுருவ முயலும் என்று எச்சரிக்க மட்டுமே விரும்புகிறேன்' என்று கூறியுள்ளார். கடாபியுடனான அவரது நெருக்கத்துக்கு வெனிசுலா நாட்டு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.