அமைச்சரவைப் பத்திரங்கள் இனிவரும் காலங்களில் மும்மொழிகளிலும் சமர்ப்பிக்கப்படவேண்டும்: ஜனாதிபதி.
அமைச்சரவைக்கான மசோதாக்களை இனிவரும் காலங்களில் மும்மொழிகளிலும் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போதே ஜனாதிபதி பிரஸ்தாப உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
உலகிலேயே விலை உயர்ந்த அதிவேக சூப்பர் கார் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதன் முதலாக பீங்கானை பயன்படுத்தி தயாராகியிருக்கும் கார் விலை ரூ.9.95 கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.உலக அளவில் கார் தயாரிப்பில் முதலிடத்தில் இருக்கும் நிறுவனம் ஜப்பானை சேர்ந்த டொயோட்டோ. இதுவரை 72 லட்சம் கார்களை விற்றிருக்கிறது.இரண்டாம் இடத்தில் இருப்பது அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ். இது 65 லட்சம் கார்களை விற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் இருக்கிறது ஜேர்மனியை சேர்ந்த வோக்ஸ்வேகன் குழுமம். இக்குழுமம் 63 லட்சம் கார்கள் விற்றுள்ளது.

அதன் பிரகாரம் இனிவரும் காலங்களில் அமைச்சரவை மசோதாக்கள், பாராளுமன்ற மசோதாக்கள், பொதுமக்கள் கவனத்துக்காகச் சமர்ப்பிக்கப்படவுள்ள ஆவணங்கள், சுற்றறிக்கைகள், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் உடன்படிக்கைகள் போன்ற அனைத்தும் மும்மொழிகளிலுமான மொழிபெயர்ப்பைக் கொண்டிருக்க வேண்டும்.ஆயினும் அந்த ஆவணங்கள் ஒரு சில அதிகாரிகளின் கவனத்துக்கு சமர்ப்பிக்கப்படுகின்றவையாக இருக்கும் பட்சத்தில் மாத்திரம் அந்தந்த மொழிகளில் மட்டும் சமர்ப்பிக்கப்பட்டாலும் போதும் என்பதாகவும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சரவை வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.
உலகின் மிக விலை உயர்ந்த கார் அறிமுகம்.

இக்குழுமத்தின் கீழ் 342 நிறுவனங்கள் இருக்கின்றன. அதில் ஒன்றாக பிரான்சின் மோல்ஷெய்ன் நகரை தலைமையிடமாகக் கொண்டு 2000ல் தொடங்கப்பட்ட நிறுவனம் "புகாட்டி". பல கோடி மதிப்புள்ள கார்கள், ஸ்போர்ட்ஸ் கார்களை தயாரித்து வருகிறது.இதன் புதிய தயாரிப்பான "புகாட்டி வேரன் இ.பி.16.4" என்ற ஸ்போர்ட்ஸ் கார் ஜேர்மனி தலைநகர் பெர்லினில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் வெளிப்புற பாகங்கள் பெரும்பாலும் பீங்கானை(போர்ஸ்லைன்) கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியில் பீங்கான் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் கொனிங்லிச் போர்சீலியன் நிறுவனம் இதை வடிவமைத்து கொடுத்திருக்கிறது. இதன் விலை ரூ.9.95 கோடி. மணிக்கு 431 கி.மீ. வேகம் வரை போகும். இதன்மூலம் உலகிலேயே விலை உயர்ந்த கார், உலகிலேயே அதிவேக ஸ்போர்ட்ஸ் கார் என்ற பெருமையை பெற்றுள்ளது.இதுபற்றி புகாட்டி நிறுவன இன்ஜனியர்கள் கூறுகையில்,"அதிவேக கார்களில் பீங்கானை பயன்படுத்த வேண்டும் என்பது புகாட்டி நிறுவனர் எட்டோர் புகாட்டியின் விருப்பம். அவரது கனவை நனவாக்கும் வகையில் அவரது மறைவுக்கு பிறகும் புகாட்டி நிறுவனம் தொடர்ந்து ஆய்வு செய்து வந்தது. அவரது விருப்பம் தற்போது நிறைவேறியுள்ளது" என்றனர்.
பாகிஸ்தானில் விமான தாக்குதல் தொடர்ந்து நடைபெறும்: அமெரிக்கா.

தீவிரவாதிகள் மீது தான் தாக்குதல் நடத்துகிறோம் என பதில் தெரிவித்த அமெரிக்கா பாகிஸ்தான் எதிர்ப்பை கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் கடந்த வாரம் பேட்டியளித்த பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் அகமது முக்தர்,"ஷாம்சி விமானப்படை தளம் மூடப்பட்டுவிட்டது. அங்கிருந்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்படவில்லை" என்றார்.இதற்கு பதில் அளித்துள்ள அமெரிக்க அதிகாரிகள் ஷாம்சி தளத்தை காலி செய்யவில்லை. பாகிஸ்தானில் ட்ரோன் தாக்குதல் தொடர்ந்து நடக்கும் என கூறியுள்ளனர்.
ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய அரசு முடிவு: ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

இதில் சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இதனால் பள்ளிகள் மூடப்பட்டன. அரசு அலுவலகங்களில் பணிகள் முடங்கின. இவை மட்டுமின்றி விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.இங்கிலாந்தின் முக்கிய விமான நிலையங்களான ஹீத்ரு, மான் செஸ்டர் போன்ற இடங்களில் ஊழியர்கள் பணிக்கு வராததால் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன.கடவுச்சீட்டு அலுவலகங்களில் இருந்து ஊழியர்கள் வெளி நடப்பு செய்தனர். வரி வசூலிப்பு அலுவலகங்கள் மற்றும் வேலை வாய்ப்பு மையங்களும் மூடப்பட்டன நேற்று அடையாள வேலை நிறுத்தம் மட்டுமே நடைபெற்றது. இன்னும் சில மாதங்களில் போராட்டம் தீவிரமாகும் என அரசு ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இ.கோலி பக்டீரியா பரவலுக்கு எகிப்து விதைகளே காரணம்: ஐரோப்பிய நோய் கட்டுப்பாட்டு வாரியம்.

இ.கோலி பாதிப்பால் ஜேர்மனியில் நான்கு ஆயிரம் பேர் பாதிப்படைந்தனர். இதே போன்று பிரான்ஸ் போர் டெக்ஸ் பகுதியில் 15 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த விதைகள் பிரிட்டன் தாம்சன் மற்றும் மார்கென் நிறுவனத்தில் இருந்து பெறப்பட்டது என முதலில் கூறப்பட்டது.இருப்பினும் இதற்கான தொடர்பு உறுதிப்படுத்தப்படவில்லை. இதைத் தொடர்ந்து தாம்சன் அன்ட் மார்கென் நிறுவன விதைகளை உணவுத் தர முகமை ஆய்வு செய்து வருகிறது.
கடந்த 2010ம் ஆண்டு எகிப்தில் இருந்து ஜேர்மனிக்கு விதைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. அதே போன்று 2009ம் ஆண்டு எகிப்தில் இருந்து பிரிட்டனுக்கும் அங்கிருந்து பிரான்சுக்கும் விதைகள் அனுப்பப்பட்டன.இ.கோலி பக்டீரியா பரவலுக்கு எகிப்து விதைகளே காரணம் என்று தற்போது ஐரோப்பிய நோய் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து உள்ளது.
உலகின் மிக நீளமான பாலம்.

இப்பாலமானது இதுவரை காலமும் உலகின் நீளமான பாலம் என்ற பெருமையைப் பெற்றிருந்த அமெரிக்க லூசியான மாநிலத்தில் அமைந்துள்ள பாலத்தினை விட 3 மைல்கள் நீளம் கூடியதாகும்.வெறும் 4 வருடங்களில் சுமார் 960 மில்லியன் பவுண்கள் செலவில் இப்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இப்பாலமானது 5,200 இற்கும் அதிகமான தூண்களை கொண்டுள்ளது.தினசரி 30 ஆயிரம் கார்கள் இப்பாலத்தில் பயணிக்கக் கூடியதாகவிருக்குமென தெரிவிக்கப்படுகிறது..




அணு உலைகளை மூடும் திட்டம்: பாராளுமன்றத்தில் ஒப்புதல்.

இதன் எதிரொலியாக கடந்த மே மாதம் 30ம் திகதியன்று ஜேர்மனி தங்களது நாட்டில் உள்ள 8 முக்கிய அணு உலைகளை வரும் 2022ஆம் ஆண்டிற்குள் நிரந்தரமாக மூடிவிட முடிவு செய்துள்ளதாக அறிவித்தது.இதன்படி நேற்று பாராளுமன்ற கூட்டம் நடந்தது. இதில் கீழ்சபையில் இதற்கான வரை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு 513 உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர். 79 பேர் எதிராக வாக்களித்தனர். 9 பேர் விலகினர்.
உலகின் மிகப்பெரிய தொழில் வளர்ச்சி அடைந்த நாடான ஜேர்மனி தனது மின்சக்தி தேவையினை 23 சதவீதம் அணு உலைகளே பூர்த்தி செய்கின்றன.தற்போது ஜேர்மனியின் இந்த முடிவால் மாற்று எரிசக்தி மூலம் தேவையினை பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இது குறித்து ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மார்க்கெல் கூறுகையில்,"இனி ஜேர்மனியின் மின்தேவையினை புதுப்பிக்கவல்ல எரிசக்தி மூலம் பெறப்படும்" என்றார்.
கம்பிகள் மற்றும் கான்கீரிட் வைத்து மரம் கட்டும் நூதனம்.

உலகின் "தாவர தலைநகராக" இந்நகரை மாற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மரம், செடி, கொடிகளையும் இங்கு வளரச் செய்வது, சுற்றுச்சூழலை பாதுகாப்பது, அதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஆகியவை முக்கிய நோக்கம்.இதன் ஒரு கட்டமாக வானுயர்ந்த கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு இணையாக மரங்களுக்காக தனியே பிரமாண்ட தூண்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
மரங்கள் கிளை பரப்பியிருப்பது போன்ற உருவத்திலேயே கம்பிகள் கட்டப்பட்டு பில்லர்கள் கட்டப்பட்டன. சுமார் 150 உயரத்துக்கு தூண் போல அமைத்து அதன் மேல் பகுதி முழுவதும் தாவரங்கள் அமைக்கப்படுகின்றன. மரக் கிளைகள் போலவே கம்பிகள் கட்டப்பட்டு கான்கிரீட் போட்டு இந்த பில்லர்கள் உருவாக்கப்படுகின்றன.
இந்த பில்லரின் பக்கவாட்டு பகுதிகளிலும் மரங்கள், சிறு செடிகள், கொடிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த ஒவ்வொன்றும் "சூப்பர் ட்ரீ" எனப்படுகிறது.இதுபோல மெரினா சவுத் பகுதியில் பல சூப்பர் ட்ரீக்கள் உருவாக்கப்படுகின்றன. ஒவ்வொன்றையும் தாவர தொகுப்பாக உருவாக்கி அப்பகுதியை முழு பசுமையாக்க வேண்டும் என்பதே நோக்கம் என்கின்றனர் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள்.


நிலாவுக்கு கொண்டு சென்ற கமெராவை விற்க முயன்ற விண்வெளி வீரர் மீது நாசா வழக்கு.

அவர் முறைகேடாக அந்த கமெராவை நிலவு பயணத்தில் கொண்டு சென்றார் என நாசா குற்றம் சாட்டி உள்ளது. உரிய அங்கீகாரம் இல்லாமல் கொண்டு சென்ற அந்த கமெராவை சுயலாபத்திற்காக அந்த வீரர் விற்க முயன்றுள்ளார் என்றும் நாசா கண்டனம் தெரிவித்து உள்ளது.பிரிட்டன் ஏல நிறுவனமான போனம்ஸ் குறிப்பிட்ட கமெராவை ஏலத்தில் விட முயன்ற தகவலை நாசா அறிந்தது. அந்த கமெராவில் சந்திரனின் நில பரப்பை பற்றிய அதிக தகவல்கள் இருந்தன.
ஆராய்ச்சி விண்வெளி தகவல்கள் விற்கப்படுவதாக கருதிய நாசா அந்த விண்வெளி வீரர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. அப்போலோ14 விண்கலம் கடந்த 1991ஆம் ஆண்டு ஆலன் ஷெப்ர்டு தலைமையில் நிலவுக்கு 9 நாள் பயணத்தை மேற்கொண்டது.இந்த பயணக்குழுவில் ஒரு வீரராக எட்வர்டு மிட்சல் இருந்தார். சந்திரனில் நடந்து சென்ற 6வது விண்வெளி வீரர் எட்வர்டு மிட்சல் ஆவார். அவர் விண்வெளி பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். அவர் தனது இணையதளத்தல் கையெழுத்திட்ட தனது பொட்டோவை விற்பனை செய்து வருகிறார்.
ஜெல்லி மீன்கள் புகுந்ததால் பிரிட்டனில் 2 அணு மின் உலைகள் அவசரமாக மூடப்பட்டன.

பாதுகாப்பை கருத்தில் கொண்டு அணு மின் உலை தற்காலிமாக மூடப்பட்டு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. ஜெல்லி மீன்கள் புகுந்ததால் கதிர் வீச்சு அபாயம் இல்லை என்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.ஜெல்லி மீன்கள் தண்ணீர் செல்லும் பாதையை அடைத்ததால் பிரச்சினை வரலாம் என்ற அச்சமும் ஏற்பட்டது. கடந்த மார்ச் மதம் 11ஆம் திகதி ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக கதிர் வீச்சு அபாயம் ஏற்பட்டு பெரும் பாதிப்பு எற்பட்டது.அந்த இயற்கை பேரிடருக்கு பின்னர் அணு கதிர் வீச்சு விடயத்தில் உலக நாடுகள் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
லாகர்டே விலகலை தொடர்ந்து புதிய பிரான்ஸ் நிதி அமைச்சர் நியமனத்தில் மோதல்.

தனக்கு நிதித்துறை அமைச்சர் பதவி கிடைக்காவிட்டால் அமைச்சரவையில் இருந்து விலகி விடுவதாகவும் அவர்கள் எச்சரித்து உள்ளனர். பிரான்சின் உயர் கல்வித் துறை அமைச்சர் வாலரேவும் புதிய நிதி அமைச்சர் பதவிக்கு வர விரும்புகிறார். புதிய அமைச்சர் குறித்த முடிவை ஜனாதிபதியும் பிரதமரும் நாளை அறிவிக்கிறார்கள்.ஐ.எம்.எப்.பின் முதல் பெண் தலைவர் என்ற பெருமை பெற்றுள்ள கிறிஸ்டியானே லாகர்டே புதன்கிழமை நடைபெற்ற பிரான்ஸ் கேபினட் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டி இருந்தது.எனவே அவர் சர்வதேச நிதியத்தின் தலைமை பதவியை ஜூலை 5ஆம் திகதி ஏற்கிறார். ஐ.எம்.எப் போட்டியில் வெற்றி பெற்றதும் லாகர்டே கூறுகையில்,"முன்னாள் ஐ.எம்.எப் தலைவர் டொமினிக் ஸ்டிராஸ்கானை சந்திக்க விரும்புகிறேன்" என்றார்.
ஜப்பானில் நிலநடுக்கம்: 9 பேர் காயம்.

அத்துடன் சில பகுதிகளில் சேதமும் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட வேறு சில சம்பவங்களில் ஒரு பெண் உட்பட ஒன்பது பேர் காயம் அடைந்தனர்.இந்த அரண்மனை ஜப்பான் அரசினால் தேசிய சொத்தாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆறு ஆண்டுகளாக பலத்த பாதுகாப்புடன் பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பின்லேடன்: அமெரிக்க அதிகாரி.

வாஷிங்டனில் உள்ள பால் நிட்ஸ் கல்வி மையத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியது: ஒசாமா பின்லேடன் தான் பதுங்கியிருந்த இடத்தை மிகவும் ரகசியமாக வைத்திருந்ததோடு தன்னைச் சுற்றிலும் அதிகபட்ச பாதுகாப்புடன் 6 ஆண்டுகள் இருந்துள்ளார்.
அந்த கட்டடத்தினுள் இருந்தவர்கள் எவருமே அங்கு வந்த பிறகு வெளியே செல்லவேயில்லை. வெளி உலக தொடர்புக்கு சிலர் மட்டும் வந்து சென்றுள்ளனர். அவர்கள் அங்கிருந்தவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்துள்ளனர்.அபோதாபாத் வீட்டில் மிகவும் நிம்மதியாகவும், தனது பாதுகாப்பு குறித்து எவ்வித அச்சமும் இன்றி இருந்தார். அவர் அங்கிருப்பது பாகிஸ்தானில் உள்ள சில பிரிவினருக்குத் தெரியும் என்பதை ஏற்க முடியாது என்று குறிப்பிட்ட பிரெனன் அல்கொய்தா இயக்கத்தில் உள்ள முக்கிய தலைவர்களில் பலருக்கு அவர் எங்கிருக்கிறார் என்ற விவரம் தெரியாது என்பது தான் உண்மை நிலை.
அவ்வாறு யாரேனும் ஒருவருக்குத் தெரிந்திருந்தால் கூட அது தனது மரணத்துக்கு அழைப்பு விடுத்து விடும் என்பதை ஒசாமா உணர்ந்திருந்தார். அதனாலேயே தான் பதுங்கியிருக்கும் விவரத்தை அவர் யாருக்கும் தெரிவிக்கவில்லை. இத்தகைய சூழலில் அமெரிக்காவின் கடற்படை கமாண்டோக்கள் அதிரடியாக நுழைந்து தாக்குதல் நடத்தியதை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை.அபோதாபாத்தில் ஒசாமா பதுங்கியிருந்த விவரம் அந்நாட்டின் உயர்நிலைத் தலைவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை என்று பிரெனன் குறிப்பிட்டார். அபோதாபாத்தில் உள்ள ஒரு வீட்டில் அதுவும் ராணுவ அகாடமி அமைந்துள்ள பகுதியில் பாகிஸ்தானின் தலைநகருக்கு வெகு அருகில் அவர் பதுங்கியிருந்தது எவருக்குமே தெரியவில்லை.
அதனால் தான் அவரால் ஆறு ஆண்டுகள் அங்கு பதுங்கி வாழ முடிந்தது. பாகிஸ்தான் ராணுவத்துக்கோ அல்லது புலனாய்வு அமைப்புக்கோ அவர் பதுங்கியிருந்த விவரம் தெரியவில்லை.இருப்பினும் பின்லேடனுக்கும், அங்கிருந்தவர்களுக்கும் அதிகபட்ச பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. அமெரிக்க கடற்படை கமாண்டோக்கள் மே 2ம் திகதி ரகசியமாக மேற்கொண்ட தாக்குதல் கூட பாகிஸ்தான் அரசுக்குத் தெரிவிக்காமல் மேற்கொள்ளப்பட்டது.
இந்த தாக்குதலை பாகிஸ்தான் அரசுக்குத் தெரிவிக்காமல் மேற்கொண்டது தான் பெரிய கேள்வியாக எழுப்பப்படுகிறது. இருப்பினும் அத்தகைய உரிமையை அமெரிக்காவே எடுத்துக் கொண்டது.இந்த சம்பவத்துக்குப் பிறகு அபோதாபாத் வீட்டை அல்கொய்தா பயங்கரவாதிகள் தங்களது தங்குமிடமாக இதற்கு முன்னர் பயன்படுத்தி வந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. அந்த விவரம் பாகிஸ்தானுக்கே தெரியவில்லை. இங்கிருந்து இஸ்லாமாபாத் மற்றும் வஜிரிஸ்தான் பகுதிக்கு அவர்கள் சென்றுள்ளனர் என்று பிரெனன் குறிப்பிட்டார்.
அபோதாபாத் வீட்டில் கைப்பற்றப்பட்ட சில ஆவணங்களைப் பார்க்கும் போது அல்கொய்தாவின் எதிர்காலம் குறித்த அச்சம் பின்லேடனின் மனதில் இருந்தது தெரியவந்துள்ளதாக பிரெனன் குறிப்பிட்டார். அமெரிக்காவுக்கு எதிராக அதிக அளவில் தாக்குதல்களை மேற்கொள்ள அவர் அழைப்பு விடுத்தார்.ஆனால் அதற்கு அவரது ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் பல ஆண்டுகள் எத்தகைய தாக்குதலும் நடத்தாமல் அவர் இருந்துள்ளார். அத்துடன் மூத்த தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக கைதாவது அல்லது கொல்லப்படுவது அவரை மிகுந்த கலக்கமடையச் செய்துள்ளது.
இவ்விதம் உயிரிழந்தவர்களுக்கு மாற்றான முன்னணி தலைவரை அவரால் உடனடியாக உருவாக்க முடியவில்லை. நீண்ட போருக்கு அல்கொய்தா தயாரில்லை என்பதோடு இந்த இயக்கம் தொடர்பாக மக்கள் மனதில் இருந்த அபிப்ராயம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வெறுப்பு ஏற்படத் தொடங்கியது.இதற்கு காரணம் அல்கொய்தா மேற்கொண்ட தாக்குதலில் அப்பாவி பொதுமக்களும், குறிப்பாக அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்களும் உயிரிழந்தது இந்த இயக்கத்தின் மீதான அபிப்ராயத்தை முற்றிலுமாக சிதைத்து விட்டது என்று பிரெனன் குறிப்பிட்டார்.
ஏமன் அதிபரின் கோரிக்கைகள் நிராகரிப்பு.

இந்நிலையில் கடந்த மாதம் 3ம் திகதி தலைநகர் சானாவில் உள்ள அப்துல்லா சலேவின் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் காயமடைந்தார். தற்போது அவர் சவுதி அரேபியாவில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில் சலேயை ஏமன் வெளியுறவு அமைச்சர் அபுபக்கர் அல் குயிர்பி சந்தித்து பேசினார். சந்திப்பிற்கு பின் பேட்டியளித்த அல் குயிர்பி,"ஆட்சி மாற்றம் தொடர்பாக அரசியல் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அதிபர் அறிவுறுத்தியுள்ளார்" என்றார்.
அதிபர் சலேயின் இந்த அழைப்பை ஏமன் எதிர்க்கட்சிகள் நிராகரித்து விட்டன. மேலும் அதிபர் பதவியில் இருந்து அப்துல்லா சலே விலக வேண்டும் என சவுதி அரேபியா உட்பட ஆறு வளைகுடா நாடுகளும் கோரிக்கை விடுத்துள்ளன.இதனால் அப்துல்லா சலேவுக்கு இக்கட்டான சூழல் உருவாகியுள்ளது. சவுதி அரேபியாவில் சலே தற்போது சிகிச்சை பெற்று வருவதால் அவரது மகன் மற்றும் குடும்ப உறவினர்கள் அரசு மற்றும் ராணுவப் பதவிகளை வகித்து வருகின்றனர்.
மனித உரிமை மீறிலில் ஈடுபட்ட பொலிஸ் படைகளுக்கு அமெரிக்கா பொருளாதார தடை.

இதுகுறித்து அமெரிக்காவின் பயங்கரவாதம் மற்றும் நிதி புலனாய்வு பிரிவு செயலர் டேவிட் எஸ் கோகென் கூறியதாவது: சிரியாவில் மனித உரிமை மீறல் செயல்களுக்கு ஈரான் நாட்டு ராணுவம் மற்றும் பாதுகாப்பு படை ஆதரவு அளித்து வருவது தற்போது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. அமைதியான வழியில் கிளர்ச்சியாளர்கள் போராட வழிவிட வேண்டும்.இதை விட்டு அப்பாவி கிளர்ச்சியாளர்கள் மீது வன்முறையை ஏவக் கூடாது. வன்முறைக்கு முடிவு கட்டி ஆட்சி மாற்றத்திற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை அந்நாட்டு அதிபர் பஷர் அல் அசாத் எடுக்க வேண்டும்.இதற்காகவே தற்போது இரு நாட்டு பொலிஸ் படை மீது பொருளாதார தடை கொண்டு வரப்பட்டுள்ளது. சிரியா மக்களுக்கு உரிமைகள் கிடைக்க அதிபர் அசாத் உறுதி அளிக்க வேண்டும்.