சிட்னி: மீன் பற்களைக் கொண்டு விரைவில் கார், விமானங்கள் உருவாக்கப்படும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். உயிரினங்களின் பற்கள், எலும்புகள் குறித்து ஆஸ்திரேலியாவின் குயீன்ஸ்லேண்ட் தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர்கள் தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனர். ஆய்வு பற்றி அவர்கள் தெரிவித்துள்ளதாவது: மனிதர்கள், விலங்குகள் மற்றும் உயிரினங்களின் பற்கள் மிகவும் வலுவாக இருக்கின்றன.
செயற்கையாக தயாரிக்கப்படும் பொருட்களைவிட விலங்குகளின் பற்கள் உறுதியாக இருக்கின்றன. ஆப்ரிக்கா, தென்அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் மட்டுமே காணப்படும் சாலமண்டர் மீன் வகையின் பற்கள் அசாத்திய உறுதியுடன் காணப்படுகின்றன. எடையும் குறைவாக உள்ளன.
இந்த பற்கள் மற்றும் அதன் எனாமல் (மேற்புற பூச்சு) ஆகியவற்றை பயன்படுத்தி எடை குறைவான கார்கள், விமானங்கள் தயாரிக்க முடியும் என்று கண்டறிந்துள்ளோம். மிகவும் பழமையான உயிரினம் என்பதால் சாலமண்டர் மீனில் இருந்து இந்த ஆராய்ச்சியை தொடங்கியுள்ளோம். மற்ற மீன்கள் மற்றும் விலங்குகளின் பற்கள், எலும்புகளைக் கொண்டும் வாகனங்கள் உருவாக்கப்படும்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF