Friday, December 3, 2010

சிறகடித்து பறக்க ஜெட்பேக் வாகனம்



பறவை போல வானில் ஜிவ்வென்று பறப்பதற்காக ‘ஜெட் பேக்’ என்ற வாகனத்தை உருவாக்கியிருக்கிறார்  நியூசிலாந்து விஞ்ஞானி க்ளென் மார்ட்டின். இது அவரது 30 ஆண்டு கால உழைப்புக்கு கிடைத்த வெற்றி.  1961 - ல் நடந்த முதல்கட்ட சோதனை வெற்றிகரமாக முடிந்தது.
அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப  அதில் பலப்பல மாற்றங்கள் செய்து சாதனையாளர் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.


இறக்கை அசைத்து பறக்கும் வாகனம் கண்டுபிடிக்கப் போகிறேன் என்று அவர் முதலில் கூறியபோது  உறவினர், நண்பர்கள், சக ஊழியர்கள் கேலி செய்துள்ளனர். அதை கொஞ்சமும் பொருட்படுத்தாமல்  ஆராய்ச்சியில் கவனம் செலுத்தியதால் இன்று சாதனையாளனாக நிற்கிறேன் என்று பெருமையுடன்  சொல்கிறார்.  காற்றை கிழித்துக் கொண்டு பறக்கும் வகையில் ஜெட்பேக்கில் இலைவடிவில் 2 இறக்கைகள். 200 குதிரைத்  திறன் சக்தி கொண்ட இன்ஜின் உதவியுடன் உந்து விசையை பயன்படுத்தி தடையின்றி பறக்க முடியும்.

நீண்ட தூர பயணத்துக்கு ஏற்ற வகையில் எரிபொருளை வாயு நிலையில் சேமித்துக்கொள்ள முடியும். சக்தி  வாய்ந்த இன்ஜின் என்பதால் 8 ஆயிரம் அடி உயரம் வரை பறக்க முடியுமாம். தொடர்ச்சியாக அரை மணி  நேரம் வானிலேயே பறந்து 50 கி.மீ. தொலைவு வரை செல்ல முடியும். நின்று பயணிக்கும் வகையில்  தற்போது வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF