Sunday, July 31, 2011

பெண் உருவத்தில் வளரும் அதிசய பூக்கள்.


Nareepol என்றழைக்கப்படும் இந்த வினோத மரம் தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக் நகரத்திலிருந்து 500 கிலோமீற்றர் தொலைவில் உள்ள Petchaboon province என்ற இடத்தில் உள்ளது. இந்த மரத்தில் பெண் உருவத்தில் பூக்கள் வளருகின்றன. அதனால் தான் இந்த மரம் Nareepol எனப்படுகிறது. Naree என்றால் மலாய் மொழியில் பெண் என்றும் Pol என்றால் மரம் என்றும் பொருள் தருகிறது. 

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

உங்கள் கணணியின் வேகத்தை கணக்கிடுவதற்கு.


கணணியில் இருக்கும் வன்பொருள்களை பொறுத்தே கணணியினுடைய வேகமும் அமையும்.
ஒரு சிலர் தனது கணணி ஆமை வேகத்தில் உள்ளது என்று கூறுவார்கள். ஒரு சிலரோ எனது கணணி என்னை விட வேகமாக உள்ளது என்று கூறுவார்கள்.
இதற்கு காரணம் கணணியில் இருக்கும் வன்பொருள்கள் ஆகும். மேலும் அதற்கேற்றார் போல் மென்பொருளும் சரியாக அமைய வேண்டும். சரி கணணி ஆமையோ, முயலோ எதுவாக இருந்தாலும் இதை எப்படி நாம் சரியாக கணக்கிடுவது என்றால் இதற்கும் மென்பொருள்கள் உண்டு. அதில் ஒன்றுதான் NovaBench.
இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணணியில் நிறுவிக் கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்து Start Benchmark Tests என்னும் பொத்தானை அழுத்தவும்.
சிறிது நேரம் உங்கள் கணணினுடைய RAM மற்றும் வன்பொருள்கள் சோதிக்கப்பட்டு முடிவுகள் தெரிவிக்கப்படும். மேலும் டிஸ்பிளே எந்த அளவு உள்ளது என துல்லியமாக பார்க்க முடியும்.
அதற்கான காட்சி படத்தையும் காண முடியும். இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள் மூலமாக நம் கணணியில் எதாவது குறையிருப்பின் அதையும் அறிந்து கொள்ள முடியும்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

பேஸ்புக் நண்பர்களின் ஸ்கைப் முகவரியை கண்டறிவதற்கு.


நாம் பேஸ்புக்கில் பல நண்பர்களுடன் தொடர்பில் இருப்போம். ஆனால் அவர்களில் நாம் விரும்பும் நபரோடு முகம் பார்த்து பேச விரும்பினால் இலகுவாக தொடர்பு கொள்ள ஸ்கைப்பை தான் அனைவரும் விரும்புவோம்.
ஆனால் பேஸ்புக்கில் இருக்கிற அனைவரும் தங்கள் ஸ்கைப் முகவரியை பேஸ்புக் சுயவிபர குறிப்பில் காட்சிப்படுத்தியிருக்க மாட்டார்கள். ஆகவே அதை எவ்வாறு பெறுவது? இதற்கு ஸ்கைப்பிலே வசதி உள்ளது.
நீங்கள் செய்ய வேண்டியது ஸ்கைபிலே சென்று contacts ->import contacts ஐ சொடுக்குங்கள். அதன் பின்னர் ஒரு விண்டோ தோன்றும்.
அதில் உங்கள் பேஸ்புக்கின் பயனர் பெயரையும், கடவுச்சொல்லையும் கொடுத்து import என்பதை அழுத்துங்கள்.
சற்று நேரத்திலே உங்கள் பேஸ்புக் தொடர்பில் உள்ளவர்களது மின்னஞ்சல் முகவரிகளுடன் ஸ்கைப் முகவரியையும் வெளிக்காட்டும்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

சனி கிரகத்தில் தண்ணீர் உள்ளது: விஞ்ஞானிகள் தகவல்.


சனி கிரகத்தில் தண்ணீர் உள்ளதா என விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வு கடந்த 14 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஜேர்மனியைச் சேர்ந்த வானியல் விஞ்ஞானிகள் பால் ஹார்டாக் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது சனி கிரகத்தில் தண்ணீர் இருப்பதை கண்டறிந்தனர். சனி கிரகத்தை சுற்றி பல சந்திரன்கள் உள்ளன. அவற்றில் அக்கிரகத்தின் மேல் பகுதியில் ஆறாவது மிகப்பெரிய சந்திரன் உள்ளது. அது முழுவதும் ஐஸ் கட்டினால் மூடப்பட்டுள்ளது.
இதனால் சனிகிரகத்தில் மழை பெய்து அதன் மூலம் தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. மேலும் அங்கு ஆவி நிலையில் தண்ணீர் இருப்பதும் தெரியவந்துள்ளது.
இவை சனி கிரகத்தை சுற்றி வட்டவடிவில் உள்ளது. இது அந்த கிரகத்தின் சுற்றளவை விட 10 மடங்கு பெரியதாக உள்ளது. இதனால் இங்கு தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

இன்றைய செய்திகள்.

கட்சித் தலைமையிலிருந்து விலகப் போவதில்லை – ரணில்.

கட்சித் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகப் போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
தலைமைப் பொறுப்பை வேறு எவரிடமும் ஒப்படைப்பது குறித்து இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை.
கட்சித் தலைமைப் பொறுப்பை கரு ஜயசூரிய ஏற்றுக் கொள்ள விருப்பம் n;தரிவித்துள்ளதாக கட்சியின் இணைப் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச வெளியிட்ட அறிவிப்பு தொடர்பில், ரணில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கரு ஜயசூரிய கட்சித் தலைமைப் பதவியை ஏற்றுக் கொள்ள அறிவித்தமை தொடர்பில் எதுவும் தெரியாது.
ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் பொறுப்பினை கரு ஜயசூரியவிடம் ஒப்படைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா அலுவலகங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு சிறிலங்காவிற்கு கோரிக்கை.

இலங்கையில் உள்ள ஐ.நா அலுவலகம் மற்றும் ஐ.நா சபைக் காரியாலயத்திற்கு தேவையான பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு சிறிலங்காவிற்கான ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி நீல் பூஹ்னே கோரிக்கை விடுத்துள்ளார்.
இவர் நேற்று முன் தினம் இக் கோரிக்கையினை விடுத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் உத்தியோக பூர்வ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோரிக்கைக்கான காரணம் நிபுணர் குழு அறிக்கை மற்றும் சனல்4 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்ட 2வது இலங்கையின் கொலைக்களம் என்பவற்றைத் தொடர்ந்தே ஐ.நா காரியாலயத்திற்கு மீண்டுமொருமுறை அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் அவ்வறிக்கையில் இலங்கையின் மனிதாபிமான செயல் திட்டங்களை மேற்கொண்டு வரும் தமது செயற்பாடுகளுக்கு சிறிலங்கா அரசு ஒத்துழைப்பு வழங்குமாறும் தாம் அரசாங்கத்தை வலிறுத்துவதாகவும் அந்தக் கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடக சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் இல்லை என்கிறார் கெஹலிய ரம்புக்வெல.

செய்தியாசிரியர் குகநாதன் மீதான தாக்குதல் குறித்த ஒரு சம்பவத்தை மட்டும் வைத்துக்கொண்டு செய்தியாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன என்று கூறிவிட முடியாது என்றும் இலங்கையில் ஊடக சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் எதுவுமில்லை என்றும் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் முல்லைத்தீவு மாவட்டம் கொக்காவில் இராணுவ முகாமில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு ஒன்றை ஆரம்பித்து வைப்பதற்காக அங்கு சென்றிருந்த ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிடம், குகநாதன் மீதான தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோதே அவர் மேற்கண்டவாறு  பதிலளித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
இத்தகைய சம்பவங்கள் குறித்து தாங்கள் அக்கறை செலுத்த வேண்டும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்றும் ரம்புக்வெல கூறினார்.
இதனை ஒரு சாதாரண சம்பவம் எனக் கூறி, அதனை புறந்தள்ளி விடுவதற்கு தான் முயற்சிக்கவில்லை என்றும், இத்தகைய தாக்குதல்கள் தொடர்பில் பல்வேறு கோணங்களில் ஆராயப்பட வேண்டிய தேவை இருப்பதாகவும் இலங்கை ஊடகத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
எனினும் இந்தத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் அவர் கூறினார்.
இதேவேளை, யாழ் போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்தும் மயக்க நிலையில் உள்ள குகநாதனின் உடல்நிலை குறித்து 36 மணித்தியாலங்கள் கழிந்த பின்பே தெரிவிக்க முடியும் என வைத்தியர்கள் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
எனினும், இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை நடத்தி வருகின்றபோதிலும், இதுவரையில் எவரும் கைது செய்யப்பட்டதாகத் தெரியவில்லை என சரவணபவன் பா.உ. குற்றஞ்சாட்டியுள்ளார்.
மூத்த செய்தியாளராகிய குகநாதன் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் கண்டித்திருக்கின்றன.
செய்தியாளர்கள் மீதான வன்முறை அலையை மீண்டும் ஆரம்பிக்கும் விதமாக இந்த சம்பவம் அமைந்துவிடலாம் என்று ஆர்.எஸ்.எஃப் என்ற எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. அதிர்ச்சியளிக்கும் இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் துரிதமாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரியிருக்கின்றது.
யாழ்ப்பாணத்தில் கருத்து மற்றும் பேச்சு சுதந்திரம் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருவதையே குகநாதன் மீதான இந்தத் தாக்குதல் எடுத்துக் காட்டுகின்றது என தெரிவித்துள்ள இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்துவதற்கு அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியிருக்கின்றது.
இலங்கைக்கு அமெரிக்கா புதிய இராஜதந்திர அழுத்தம்!- இலங்கை நிராகரிக்கும் என எதிர்பார்ப்பு.

இலங்கையின் உள்நாட்டில் மனித உரிமை மீறல் தொடர்பாக ஆராய்ந்து வரும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் சமர்ப்பிக்குமாறு அமெரிக்கா, இலங்கையிடம் உத்தியோகபூர்வமாக கோரியுள்ளது. 
இது தொடர்பான இராஜதந்திர கோரிக்கை கடிதம் ஒன்றை இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம், இலங்கையின் வெளிநாட்டு அமைச்சுக்கு அனுப்பியுள்ளது. எனினும் இலங்கையின் வெளிநாட்டு அமைச்சு இதற்கான உரிய பதிலை வழங்கவில்லை.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் 19 வது அமர்வு எதிர்வரும் வருடம் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ளது.
இதன்போது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை கலந்துரையாடலுக்காக சமாப்பிக்குமாறு அமெரிக்கா இலங்கையிடம் கேட்டுள்ளது.
எனினும் அமெரிக்காவின் இந்தக் கோரிக்கையை இலங்கை நிராகரிக்கும் நிலையே உள்ளதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு உடன்பட்டால் இலங்கை மனித உரிமைகள் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படலாம் என்பதே இதற்கான காரணமாகும்.
அத்துடன் இதனை பயன்படுத்திக்கொண்டு இலங்கைக்கு எதிராக அமெரிக்கா வேறு முனைப்புகளையும் மேற்கொள்ளலாம் என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சு தகவல்கள் தெரிவித்தன.
இதேவேளை இலங்கைக்கான உதவிகளை நிறுத்துவது தொடர்பான முடிவுக்காக அமெரிக்க அரசாங்கம், நல்லிணக்க குழுவின் அறிக்கை எதிர்வரும் நவம்பர் மாதத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கிறது.
இலங்கையின் உறுதிமொழியின் அடிப்படையிலேயே இந்த கால எல்லை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள சபையின் 18 வது அமர்வில் இலங்கைக்கு எதிரான முனைப்புகளை அமெரிக்கா மேற்கொள்ளாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதன் பொறுப்பை சனல் 4 ஏற்றுக் கொள்ள வேண்டும் : சவேந்திர சில்வா.

எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதன் பொறுப்பை சனல் 4 ஊடகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஐக்கிய நாடுகளுக்கான இலங்கை பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு தமது பயணங்கள் தொடர்பில் கண்காணித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டனின் சனல் 4 ஊடகவியலாளர்கள் திடீரென தம்மிடம் நேர்காணல் ஒன்றை நடத்தியதாகவும், இதன் மூலம் புலிகள் தரவுகளை திரட்டி வருவது புலனாகியுள்ளது.
சனல் 4 ஊடகத்தினால் வெளியிடப்பட்ட காணொளி உண்மைக்குப் புறம்பானது, அதில் தோன்றியவர்கள் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல.
45 நிமிடங்கள் நேர் காணல் நடத்திய போதிலும், இரண்டு நிமிடங்கள் மட்டுமே ஒளிபரப்புச் செய்யப்பட்டது.
முடியுமென்றால் நேர் காணலை முழுமையாக ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கவும் என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பை வழி நடாத்தும் ருத்ரகுமாரன், எனது வாசஸ்தலத்திலிருந்து ஒரு கிலோ மீற்றர் தொலைவில் வாழ்ந்து வருகின்றார்.
சர்வதேச இணையத்தளம் மூலம் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை அறிவிப்பு.

சர்வதேச வலையமைப்பு மூலம் வர்த்தகக் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் போதும், வங்கிச் செயற்பாடுகளில் ஈடுபடும் போதும், அதுபற்றி மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று சர்வதேச வலையமைப்பைப் பயன்படுத்துவோருக்கு இலங்கை குற்ற விசாரணைத் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
சர்வதேச இணையத்தள வலையமைப்பினூடாக நிகழ்த்தப்படும் குற்றங்களில் அதிகரிப்பு காணப்படுகிறது எனவும் எனவே சர்வதேச இணையத்தள வலையமைப்பு ஊடான கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகளில் பாதுகாப்பு எச்சரிக்கை செலுத்துவது முக்கியமானது எனவும் மேற்படி திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜயந்த குலதிலக்க தெரிவித்துள்ளார்.
தற்போது கணினி குற்றவாளிகள் சம்பந்தமாக குற்ற விசாரணைத் திணைக்களம் விரிவான விசாரணைகள் பலவற்றையும் மேற்கொண்டு வருவதாகவும் கணினி மற்றும் சர்வதேச வலையமைப்பு குற்றவாளிகளுக்கு இரையாகும் எந்த ஒருவரும் அதுபற்றி                    அல்லது            0112380380 begin_of_the_skype_highlighting            0112380380      end_of_the_skype_highlighting       என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்கமுடியும் என்றும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
கணினி குற்றமிழைப்புக்கள் சம்பந்தமாக பரிசீலிக்கத்தக்க பரிபூரணமான ஆய்வுகூடம் மற்றும் தற்போது குற்ற விசாரணைகள் திணைக்களத்தின் வசமுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்தவின் அழைப்பின் பேரில் நிரூபமா ராவ் இலங்கைக்கு திடீர் விஜயம்.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் இந்திய வெளியுறவுச் செயலர் நிரூபமா ராவ் இலங்கைக்கு திடீர் விஜயம்  செய்துள்ளார்.
இன்று காலை நிரூபமா ராவிற்கு காலை உணவுடன் பிரியாவிடை அளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தகவல்கள் தெரிவித்துள்ளன.
1973ம் ஆண்டு தொடக்கம் நிரூபமா ராவ் இலங்கையுடன் இணைந்து பல்வேறு விதத்தில் செயற்பட்டுள்ளார். அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலேயே இந்த பிரியாவிடை அளிக்கப்பட்டுள்ளது.
நிரூபமா ராவ் அமெரிக்காவிற்கான இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே இன்று விருந்தளித்தார்.
இந்திய வெளியுறவுச் செயலராக இருக்கும் நிருபமா ராவ், விரைவில் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக பணியில் அமரவிருக்கிறார்.
இந்த நிலையில் 3 நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளார் நிருபமா ராவ். அவருக்கு இன்று காலை இலங்கை அதிபர் ராஜபக்ச பிரிவு உபசார விருந்து அளித்தார்.
இதற்கு முன் இலங்கைக்கான இந்திய தூதராக பணியாற்றிவர் நிருபமா. அப்போது முதல் ராஜபக்சவுக்கு மிகவும் அனுசரணையாக நடந்து வருகிறார். அமெரிக்கா செல்லும் முன் கடைசி பயணமாக அவர் இலங்கை சென்றுள்ளார்.
உலகமே ராஜபக்சவை இனப்படுகொலை செய்த போர்க்குற்றவாளி என கூறி வந்தாலும் இந்தியா அதுகுறித்து எதுவும் சொல்ல மறுக்கிறது. மத்திய அரசின் பிரதிநிதிகள் ராஜபக்சவுடன் தொடர்ந்து நெருக்கமாக இருந்து வருகின்றனர்.
இலங்கை மீது சீறிப்பாயும் நாடுகள் மீது ஈரான் அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டும் - பசில்.

இலங்கை உட்பட பொருளாதார ரீதியில் வளர்ந்துவரும் நாடுகளை அழிக்க மேற்குலக நாடுகள் மேற்கொண்டுவரும் முயற்சிகளை தடுத்துநிறுத்த ஈரான் அரசாங்கம் தலைமைப்பொறுப்பை எடுத்துக்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஸ தெரிவித்தார்.
இன்று மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச செயலகத்துக்குட்பட்ட காங்கேயனோடை பகுதியில் ஈரான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட 70 வீடுகளை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஈரானிய பிரதி வெளிவிவகார அமைச்சர் அமீர் மன்சூர் பேர்காய்,கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்,ஈரான் தூதுவர் ரஹ்மி ஜோர்ஜி உட்பட அதிதிகள் பலர் கலந்துகொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,
ஈரானிய இஸ்லாமிய குடியரசின் நிதிகள் மூலம் இலங்கையில் பாரிய வேலைத்திட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த நிதி மூலம் இலங்கையில் பாரிய நீர் விநியோக திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன் 1000 கிராமங்களுக்கான மின்சாரத்தை பெற்றுக்கொடுக்கும் பாரிய திட்டத்தினையும் செய்துதந்துள்ளது.
இலங்கையின் அபிவிருத்திக்கு மட்டுமல்லாது மனிதாபிமான அடிப்படையிலும் பாரிய உதவிகளை ஈரானிய அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
ஈரான் அரசாங்கத்தினால்,ஈரான் மக்களினால் வழங்கப்படுகின்ற மனிதாபிமான உதவிகளில் இந்த வீட்டுத்திட்டமும் ஒன்று.இந்த வீட்டுத்திட்டத்துக்கு இஸ்லாமிய குடியரசு கூடிய கவனம் செலுத்தியுள்ளது.
இங்கு வந்த ஈரானிய பிரதி வெளிவிவகார அமைச்சர் அதனை சுற்றிப்பார்த்து இப்பிரதேசத்தை பச்சைப் பிரதேசமாக மாற்றவேண்டும் என கூறியுள்ளதுடன், அதற்காக இங்குள்ளவர்களுக்கு விதைகளும் நீர் இறைக்கும் இயந்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் பிரதான வீதி அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அவையும் விரைவில் பூர்த்தியடையும் என நம்புகின்றோம்.
இங்கு அடிப்படை வசதிகளைக்கொண்ட 70 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே இவற்றைக்கொண்டு அனைவரும் ஒன்று சேர்ந்து இக்கிராமத்தை கட்டியெழுப்பவேண்டும்.
அமெரிக்காவை விட அதிகளவு கடன் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய நாடுகள்.
கடந்த 10 ஆண்டுகளில் பொருளாதார தாராளமயம் என்ற சூறாவளி எல்லா நாடுகளையும் ஓரளவு பாதித்திருக்கிறது. தற்போது கடன் சுமையில் அமெரிக்கா தத்தளிப்பது எல்லாரும் விமர்சிக்கும் விஷயம்.
மிகப்பெரிய வளர்ந்த நாடான அமெரிக்கா அதற்கு தீர்வு காண முயல்கிறது. ஆனால் ஐரோப்பிய நாடுகள் பலவும் மூச்சு முட்டும் பொருளாதார அபாயத்தை தற்போது சந்தித்து வருகின்றன.
அடுத்த 10 ஆண்டுகளில் அமெரிக்கா 2.7 டிரில்லியன்  டொலர் நிதிப்பற்றாக்குறையை சமாளித்தாக வேண்டும். அதற்கு வழிகாணும் வகையில் செலவினம் குறைப்பது, வரியைக் கூட்டுவது குறித்து அங்கே ஆளும் ஜனநாயக கட்சி மற்றும் எதிர்க்கட்சியான குடியரசு கட்சி ஆகியவை ஆலோசித்து வருகின்றன.
ஆனால் இதில் இக்கட்சிகள் தங்களுக்கு உள்ள ஆதாயத்தைக் கருதுவதால் முடிவு எடுக்க தாமதம் ஆகிறது.
ஆனால் பொதுவாகவே இந்த தாராள பொருளாதாரமயம் என்ற கோட்பாடு உலகின் எல்லா நாடுகளையும் அமெரிக்க கடன் சூறாவளி பாதிப்பில் இழுத்து அலைக்கழிக்கிறது.
அமெரிக்காவின் பொருளாதாரத்தில் நேச நாடாக செயல்படும் சீனா தன் முடிவைச் சொல்லாமல் சமாளிக்கிறது. அதற்கு அங்கு நடைபெறும் ஜனநாயகமற்ற ஆட்சி கவசமாக உள்ளது.விலைவாசி உயர்வு ஏன்? நாட்டின் மொத்த வளர்ச்சியைக் கணக்கிட்டு அதில் 10 சதவீத அளவுக்குமேல் நிதிப்பற்றாக்குறை வந்தால் அந்த நாடு பொருளாதாரத்தில் தள்ளாட்டம் போடுகிறது என்று அர்த்தம்.
அந்த நாடு தலைகீழாக நின்றாலும் எங்குமே கடன் வாங்க முடியாது. ஆனால் இன்று அந்த நிலையில் இருக்கும் அமெரிக்கா எளிதாக தன் பிரச்னைகளைச் சமாளிக்க முயற்சிக்கிறது. காரணம் அது வலுவான நாடு.
டொலர் - யூரோ போர்: அமெரிக்க டொலர் அதற்கு அடுத்த இடத்தில் இருந்த யூரோ என்ற ஐரோப்பிய நாணயம் ஆகிய இரண்டுக்கும் இடையே தற்போது பெரிய போர் நடக்கிறது.
அடுத்த சில நாட்களில் யூரோ மேலும் பலமிழக்கும். டொலருக்கு பதிலாக சுவிஸ் பிராங்க், தங்கம் ஆகியவற்றில் முதலீடு செய்து வரக்கூடிய அபாயத்தைத் தவிர்க்கும் போக்கு வந்து விட்டது.
அபாயத்தில் கிரீஸ், இத்தாலி: ஐரோப்பிய நாடுகளில் கிரீஸ் மிக மோசமாக இருக்கிறது, இத்தாலிக்கு அதிக அபாயம் காத்திருக்கிறது.  ஜேர்மனி சிரமப்படுகிறது. போர்ச்சுகல், அயர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் இந்த பொருளாதார இருள் சூழ்ந்திருக்கிறது.
ஐரோப்பிய யூனியன் என்பதில் உள்ள 17 நாடுகளின் நிதியமைச்சர்கள் கூடி ஆலோசித்தனர். அதில் பெரிய அளவில் முடிவு ஏற்படவில்லை. கிரீஸ் தடுமாற்றத்தை எந்த அளவு குறைப்பது என்று பேசிய அவர்கள் முடிவு எடுக்காமல் பின்வாங்கினர். அதேசமயம் ஐரோப்பிய நாடுகளில் பெரிய நாடுகள் வரிசையில் மூன்றாவது நாடான இத்தாலி கடன் சுமையில் தவிப்பது கண்டு அச்சப்பட்டனர்.
இன்று எல்லாரும் அமெரிக்காவின் கடன் சுமை பாதிப்பு பற்றி பேசும் போது ஐரோப்பிய நாடுகள் தவிப்பு குறித்து பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற நிபுணர் ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் கூறிய கருத்து இதோ: உலக வங்கியும், சர்வதேச நிதி நிறுவனமும் தந்த நிதியுதவிகள் எகிப்து, துனிஷியா ஆகிய நாடுகளில் வளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம்.
ஆனாலும் எல்லாத் தரப்பையும் அந்த வளர்ச்சி சென்றடையவில்லை. மத்திய தர மக்களைக் கூட முன்னுக்குக் கொண்டு வரவில்லை. தனியார்மயம் ஊழலை வளர்த்து புதிய பணக்காரர்களை உருவாக்கி முடிவில் அதிக வேலையின்மையை ஏற்படுத்தி விட்டது. பொதுவாக உலகமயமாக்கல் தத்துவம் ஒருவர் மற்றவரைச் சார்ந்து வாழவைத்து விட்டது.
உலகின் ஒரு பக்கம் பாதிப்பு என்றால் அடுத்த பக்கத்தில் அது பிரதிபலிக்கிறது. அமெரிக்காவின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் அங்கே தொழில்துறை தேக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.
தற்போது ஐரோப்பிய நாடுகளின் தள்ளாட்டம் அமெரிக்காவை மட்டுமல்ல, மத்திய கிழக்கு நாடுகளையும் பாதிக்கும். அரபு நாடுகளின் மகிழ்ச்சியை பாதிக்கும். அங்கிருந்து பலர் வேலை வாய்ப்புகளை இழந்து ஐரோப்பிய நாடுகளுக்கு திரும்பலாம்.
தற்போதைய பிரச்னைகளுக்கு சீர்திருத்த நடவடிக்கைகள் பலன் தரலாம் என்றாலும், அதற்கான பலன் கிட்ட பல மாதங்கள் காத்திருக்க வேண்டும்.
ஊழியர் பிரச்சனையை தடுக்க ரோபோக்களை பயன்படுத்த நிறுவனம் முடிவு.
அதிகரித்துவரும் ஊழியர் சம்பளத்தைக் கட்டுப்படுத்த 10 லட்சம் ரோபோக்களைப் பயன்படுத்த தைவான் நிறுவனம் முடிவு செய்துள்ளது. சீனாவில் செயல்படும் தைவான் நிறுவனமான பாக்ஸ்கான் இத்தகைய முடிவை எடுத்துள்ளது.
பாக்ஸ்கான் நிறுவனம் கணணி சார்ந்த பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனம் ஆப்பிள், சோனி, நோக்கியா உள்ளிட்ட மின்னணு நிறுவனங்களுக்கு தேவையான கணணி உதிரிபாகங்களை தயாரித்து அளிக்கிறது.
இந்நிறுவனத்துக்குச் சொந்தமான ஆலை சீனாவில் செயல்படுகிறது. இந்த ஆலையில் 12 லட்சம் பேர் பணி புரிகின்றனர். கடந்த ஆண்டு வேலைப் பளு காரணமாக பல தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
இது நிறுவனத்தின் மதிப்பை சர்வதேச அளவில் வெகுவாக பாதித்தது. இதிலிருந்து மீள நிறுவனம் புதிய உத்தியைக் கையாள முடிவு செய்துள்ளது.
இதன்படி நிறுவனத்தில் பெரும்பாலான பணிகளுக்கு ரோபோக்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளது. ஸ்பிரே செய்வது, வெல்டிங் மற்றும் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பணிகளில் ரோபோக்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இப்போது இந்நிறுவனத்தில் 10 ஆயிரம் ரோபோக்கள் உள்ளன. அடுத்த ஓராண்டுக்குள் இதை 3 லட்சமாகவும் மூன்றாண்டுகளில் 10 லட்சமாகவும் உயர்த்த பாக்ஸ்கான் முடிவு செய்துள்ளது.
ஜப்பானில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம்.
ஜப்பானில் இன்று அதிகாலையில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 என பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் ஜப்பானின் வடகிழக்கு பகுதியை சேர்ந்த புகுஷிமாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலநடுக்கம் காரணமாக எந்த வித சேதமும் ஏற்படவில்லை என்றும், சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களிடம் பணத்தை சுரண்டி அதிகளவு சொத்து சேர்த்த அதிபர்கள்.
எகிப்து, துனிஷியா உள்ளிட்ட நாடுகளில் நிகழ்ந்த மக்கள் புரட்சியின் மூலம் அந்நாடுகளின் அதிபர்கள் மற்றும் அதிகார வர்க்கத்தினர் மக்களைச் சுரண்டி சேகரித்த செல்வத்தின் அளவு வெளியுலகிற்குத் தெரியவந்துள்ளது.
அவர்கள் திருடிய பணத்தை மீண்டும் தங்களுக்கே அளிக்க வேண்டும் என அந்நாட்டு மக்கள் கோரி வருகின்றனர். ஆப்ரிக்காவின்  துனிஷியாவில் தான் முதலில் மக்கள் புரட்சி வெடித்தது.
அதையடுத்து எகிப்து, லிபியா, பக்ரைன், ஏமன், ஓமன், கத்தார், சிரியா, ஜோர்டான், மொராக்கோ என அரபு நாடுகளை புரட்சித் தீ விழுங்கத் துவங்கியது. இவற்றில் தற்போது துனிஷியா மற்றும் எகிப்தில் மட்டுமே புரட்சி ஓரளவுக்கு வெற்றியைத் தந்துள்ளது எனலாம். மற்ற நாடுகளில் புரட்சி தொடர்கிறது அல்லது தற்போதைக்கு அடங்கியிருக்கிறது என்றளவில் தான் நிலவரம் உள்ளது.
துனிஷிய அதிபர் பென் அலி: துனீஷியாவைப் பொருத்தவரை அதன் அதிபராக இருந்த பென் அலி மற்றும் அவரது குடும்பத்தார், உறவினர்கள் நாட்டின் வளத்தைச் சுரண்டி ஆடம்பரமாக வாழ்ந்தனர்.
பாரிஸ், ஆல்ப்ஸ் மற்றும் பிரான்சின் தென்பகுதி ஆகியவற்றில் பென் அலிக்குச் சொந்தமாக பங்களாக்கள் உள்ளன. சுவிட்சர்லாந்து மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் வங்கிகளில் பில்லியன் கணக்கில் பணத்தை அலி போட்டு வைத்திருந்தார்.
கடந்த ஜனவரி 14ம் திகதி அவர் நாட்டை விட்டு ஓடிப் போன பின் அவரது அரண்மனையைச் சோதனையிட்ட புலனாய்வு அதிகாரிகள் குவியல் குவியலாக நகைகள் மற்றும் ரொக்கத்தை மீட்டனர். மக்களின் தொடர் கோரிக்கையையடுத்து அலியின் சுவிஸ் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. அலியுடன் தொடர்புடைய 110 பேரின் சொத்துகளை துனிஷிய அரசு முடக்கியது.
70 பில்லியன் சொத்து சேர்த்த முபாரக்: "செத்தால் எகிப்தில் தான் சாவேன்" என்று அப்போதைய அதிபர் ஹோஸ்னி முபாரக் வீர வசனம் பேசிக் கொண்டிருந்த போது லண்டனில் இருந்து வெளியான கார்டியன் இதழில் வெளிநாடுகளில் 40 பில்லியன் டொலர் முதல் 70 பில்லியன் டொலர் வரை முபாரக் சொத்து சேர்த்துள்ளதாக வெளியான செய்திகள் புரட்சித் தீக்கு மேலும் எண்ணெய் விட்டது போலாயிற்று.
செய்தி வெளியான உடன் தாரிர் சதுக்கத்தை நோக்கி மக்கள் ஆயிரக்கணக்கில் திரளத் துவங்கினர். ஒரே வாரத்தில் முபாரக், ஷரம் எல் ஷேக்கிற்கு ஓடிப் போனார். அவரது அமைச்சரவையில் ஊழலில் திளைத்த அமைச்சர்கள் தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.
சொத்தே சேர்க்காத கடாபி: லிபியத் தலைவர் மும்மர் கடாபியின் அமைச்சரவையில் இருந்து வெளியேறிய லிபிய மத்திய வங்கி கவர்னர் பர்ஹத் பெங்டாரா திரிபோலியில் தனது வீட்டில் கடாபி 500 மில்லியன் டொலர் ரொக்கம், 7.5 பில்லியன் டொலர் மதிப்புள்ள 155 டன் தங்கம் வைத்துள்ளார் என்று தெரிவித்தார்.
பெங்காசியில் புரட்சி வெடித்த போது வெளிநாடுகளில் கடாபி பதுக்கி வைத்துள்ள சொத்துகளை முடக்க வேண்டும் என மக்கள் கோரினர். சில சொத்துகள் பின்னர் முடக்கப்பட்டன. ஆனால் வெளிநாடுகளில் தனக்கு சொத்தே இல்லை என்று மீண்டும் மீண்டும் கடாபி கூறி வருகிறார்.
லிபிய அரசுக்குச் சொந்தமான 50 பில்லியன் டொலர் மதிப்புள்ள வெளிநாட்டு சொத்துகள் ஐ.நா பொருளாதாரத் தடைகளால் முடக்கப்பட்டுள்ளன.
மக்கள் கோரிக்கை: தற்போது இம்மூன்று நாட்டு மக்களும் தங்களிடம் இருந்து திருடப்பட்ட பணம் தங்கள் நாட்டுக்கே திருப்பி அளிக்கப்பட வேண்டும் என வலுவாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.
இம்மூன்று நாட்டு அதிபர்களுக்கும் ஒரு காலத்தில் ஆதரவு அளித்து வந்த அமெரிக்கா தற்போது இம்மக்களுக்கு ஆதரவாகப் பேசி வருகிறது.
ஏர் பிரான்ஸ் விபத்துக்கு விமானிகள் காரணம் இல்லை: நிறுவனம் தெரிவிப்பு.
228 பயணிகள் பலியாக காரணமாக இருந்த ஏர் பிரான்ஸ் விமான விபத்துக்கு விமானிகள் காரணம் இல்லை என ஏர் பிரான்ஸ் நிறுவனம் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.
பிரேசிலின் ரியோடி ஜெனீராவில் இருந்து பாரிசுக்கு 2009ஆம் ஆண்டு வந்த ஏர் பிரான்ஸ் விமானம் அட்லாண்டிக் கடல்பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்துக்கு விமானியின் தவறே காரணம் என குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.
இது குறித்து ஏர் பிரான்ஸ் நிர்வாகம் விடுத்த அறிக்கையில் இந்த தருணத்தில் விமானிகளின் தொழில்நுட்ப கையாளும் திறனை குறை கூற முடியாது. எச்சரிக்கை தரும் கருவி உரிய நேரத்தில் செயல்படாததால் விபத்து ஏற்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.
ஏர் பிரான்ஸ் விமான விபத்துக்கு விமானிகள் தான் காரணம், சென்சார் கருவி பழுதடைந்த நிலையில் எப்படி செயல்படுவது என்பது குறித்து அவர்களுக்கு பயிற்சி இல்லை என விமானப் போக்குவரத்து விபத்து குறித்த விசாரணை அமைப்பான பி.இ.ஏ குற்றம்சாட்டி இருந்தது.
பிரான்சின் பெரும் விமான நிறுவனங்களான ஏர் பிரான்சும், ஏர் பஸ்சும் உண்மை வெளிவர விடாமல் தடுப்பதாக விபத்தில் பலியானர்களின் குடும்பத்தினர் அச்சம் தெரிவித்தனர்.
அயல்நாட்டு தொழிலாளர்களுக்கு ஜேர்மனி மக்கள் எதிர்ப்பு.
கிறீஸ் மற்றும் ஸ்பெயினில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் அங்கு திறன் வாய்ந்த தொழிலாளர்கள் ஜேர்மனியில் வேலை தேடும் முயற்சியில் குவிகின்றனர்.
திறன் பெற்ற தொழிலாளர்கள் வருகையால் தொழிலாளர் நிபுணர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். ஆனால் ஜேர்மானியர்கள் அயல் நாட்டு திறன் வாய்ந்த தொழிலாளர்கள் குவிவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
ஜேர்மனி தொழிலாளர் நிர்வாகத்தினர் கடந்த 20 ஆண்டுகளாக சர்வதேச வேலை அமர்வை உற்சாகப்படுத்தி வருகின்றனர். இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி 3.1 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூன் மாதத்தில் வேலையில்லா நிலை 20 ஆண்டுகளில் குறைவாக இருந்தது. எனவே தொழிலாளர் துறை காலி இடங்களில் அயல்நாட்டு தொழிலாளர்களை கொண்டு பூர்த்தி செய்ய விரும்புகிறது.
கிறீஸ், ஸ்பெயின், போர்ச்சுக்கல் நாடுகளில் கடுமையான பொருளாதார நெருக்கடி காணப்படுகிறது. இதனால் அந்த நாடுகளில் 12.4 சதவீதம் முதல் 20.9 சதவீதம் வரை வேலையில்லாத் திண்டாட்டம் கடுமையாக உள்ளது.
ஜேர்மனியில் தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை இல்லை. எனவே அயல்நாடுகளில் இருந்து தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதை வரவேற்கவில்லை என ஜேர்மனி மக்கள் கூறுகின்றனர்.
ஜேர்மனியில் வேலை பார்க்க 17 ஆயிரம் ஸ்பெயின் தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். இருப்பினும் 1500 அல்லது கூடுதல் தொழிலாளர்கள் தான் ஜேர்மனி வருவார்கள் என தொழிலாளர் நிபுணர் கூறினார்.
பாகிஸ்தானில் 11 நபர்களை சுட்டுக் கொன்ற மர்ம நபர்.
பாகிஸ்தானில் அடையாளம் தெரியாத நபர் சுட்டதில் ஒரு பெண் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் தென் மேற்கு நகரான குவெட்டா நகரில் சனிக்கிழமை இச் சம்பவம் நிகழ்ந்தது. இப்பகுதியில் நிகழ்ந்த இனப் படுகொலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது.
ஹஸரா ஷியா பிரிவைச் சேர்ந்த சிலர் வேலைக்குச் செல்வதற்காக ஒரு வேனில் ஏறிக் கொண்டிருந்தனர். இவர்கள் மீது அருகிலிருந்த பஸ் நிலையத்திலிருந்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் ஒரு பெண் உள்பட 11 பேர் உயிரிழந்தனர், 4 பேர் காயமடைந்தனர்.
ஈரானில் உள்ள வழிபாட்டுத்தலத்திற்கு சென்ற 7 ஷியா பிரிவு முஸ்லிம்களை வெள்ளிக்கிழமை சிலர் சுட்டுக் கொன்றனர். லஷ்கர்-இ-ஜாங்வி என்ற தீவிரவாதக் குழு இந்த சம்பவத்துக்குப் பொறுப்பேற்றது.
சன்னி பிரிவு முஸ்லிம் கல்வியாளர் மெளலவி கரீம் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக ஷியா பிரிவினர் மீது இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அலி ஷேர்ஹைத்ரி தெரிவித்துள்ளார்.
தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து ஷியா முஸ்லிம்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அரசுக்கு எதிராகவும், இனப்படுகொலைகளைத் தடுத்து நிறுத்தக் கோரியும் அவர்கள் போராட்டம் நடத்தினர்.
பிரதான சாலையில் மறியல் நடத்தியதோடு வாகனங்களுக்கும் தீ வைத்தனர். மருத்துவமனைக்கு வெளியே கடைகள் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன.
பாகிஸ்தானின் தென் மேற்கு பகுதியில் உள்ள குவெட்டா நகரில் பிரிவினைவாத மோதல் அதிகரித்து வந்துள்ளது. இங்கு ஷியா முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.
வெள்ளிக்கிழமை மாஸ்துங் மாவட்டத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பலுசிஸ்தான் மாகாண முதல்வரின் நெருங்கிய உறவினர் உள்ளிட்ட இருவர் இறந்தனர். கால்பந்து மைதானத்துக்கு வெளியே இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் 30 பேர் படுகாயமடைந்தனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து நகரில் பொலிசார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். நிலைமை இப்போது கட்டுக்குள் இருப்பதாக பொலிசார் தெரிவித்தனர். இதனிடையே தங்களது சமுதாய மக்களைக் காப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
குவெட்டா சம்பவத்துக்குக் காரணமானவர்களை 24 மணி நேரத்திற்குள் கைது செய்யாவிடில் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக ஷியா பிரிவு முஸ்லிம் தலைவர் ரஹீம் ஜாப்ரி அறிவித்தார்.
இச்சம்பவத்தைக் கண்டித்து ஜூலை 31ம் திகதி முழு கடையடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாகவும், 40 நாள் துக்கம் அனுசரிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.
கனடாவில் சொந்தமாக விண்வெளி ஏவுதளம்.
கனடாவில் சொந்தமாக விண்வெளி ஏவும் மையம் அமைக்கப்படுமா என்ற கேள்வி விஞ்ஞானிகளிடமும், வணிக சமூகத்தினரிடமும் விவாதமாக இருந்து வருகிறது.
விண்வெளி இயற்பியல் ஆய்வு நிபுணரான ரெடோனே பகிர் கனடாவின் மேற்கு கடலோரப் பகுதியில் செயற்கை கோள்களை ஏவும் தளத்தை அமைக்க வேண்டும் என ஆர்வம் கொண்டவராக உள்ளார்.
இதற்காக அவர் ஏவுதளம் அமைத்தல் தொடர்பான உத்தேச கருத்துகளையும் உருவாக்கி வருகிறார். விண்வெளி ஏவுத் தளத்தை அமைப்பதற்கு பணம் ஒரு தடையாக இருக்காது. இருப்பினும் இந்த ஏவுதளம் திட்டத்திற்கு அரசாங்கம் ஒப்புதல் அளிக்குமா என்பதை பார்க்க வேண்டும் என பகிர் கூறுகிறார்.
கனடாவிலேயே சொந்த ஏவுதளம் அமைவதால் இரு நன்மைகள் கிடைக்கும். செயற்கை கோள்களை ஏவுவதற்கான செலவினங்கள் குறையும், மற்றொன்று செயற்கை கோள்களை ஏவுவதற்கு ஆகும் காலதாமதம் தவிர்க்கப்படும்.
கனடாவின் வான்கூவர் தீவுப்பகுதியை விண்வெளி ஏவுதள மையமாக உருவாக்க வேண்டும் என்பது பகிரின் லட்சியமாகும்.
ப்ளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி நிலையம் போன்று சிக்கல் நிறைந்ததாக கனடா விண்வெளி ஆராய்ச்சி மையம் இருக்காது. சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உறுதி அளிக்கின்றனர்.
மோசடி விசா: இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை.
போலி விசா மற்றும் ஆவணங்களை விற்கும் தரகர்களின் மோசடி வளையத்திற்குள் சிக்கிக்கொள்ளாமல் விழிப்புடன் இருக்கவேண்டும் என்று இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
விதிமுறைகளை மீறி அதிக அளவில் மாணவர்களை சேர்ந்த மோசடியில் அமெரிக்காவிலுள்ள நார்தர்ன் வெர்ஜீனியா பல்கலைகழகம் சிக்கியுள்ளது. இங்கு விதிமுறைகளை மீறி மாணவர்கள் சேர்க்கப்படிருந்ததை அந்நாட்டு புலனாய்வுத் துறை கண்டுபிடித்துள்ளது.
மேலும் அந்த பல்கலைகழகத்தில் அதிரடி சோதனைகளும் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் அங்கு பயிலும் இந்திய மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் அந்த பல்கலைகழகத்தில் பயிலும் இந்திய மாணவர்கள் வேறு பல்கலைகழகத்தில் சேர்ந்து கொள்ள அனுமதி அளிப்பதாக அமெரிக்க அரசு உறுதி கூறியுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்கா வந்து படிக்க திட்டமிட்டுள்ள இந்திய மாணவர்கள் விசா தரகர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு அந்நாட்டு எச்சரித்துள்ளது. இதுபோன்ற மோசடி வளையத்திற்குள் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அரசின் செய்திதொடர்பாளர் மார்க் டோனர் கூறியதாவது: மோசடி விசா சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். இதுதொடர்பாக இந்திய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு வருகிறோம். டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் இதுகுறித்து விரிவாக விளக்கியுள்ளது.
விசாரணை நடந்து வரும் நிலையில் இதுகுறித்து மேற்கொண்டு எதுவும் கூற இயலாது. மோசடி விசா மற்றும் போலி ஆவணங்களை விற்கும் தரகர்களிடம் இந்திய மாணவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். அமெரிக்கா வர திட்டமிட்டுள்ள இந்திய மாணவர்கள் மோசடி விசா வளையத்திற்குள் சிக்கிக்கொள்ள வேண்டாம்.
ரஷ்யாவில் மிருகங்களை வேட்டையாடி ரத்தம் குடிக்கும் மிருகம்.
வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் ஒரு வினோத மிருகம் ஊருக்குள் புகுந்து கால் நடைகளை கொன்று ரத்தம் குடிப்பதாக பல நாடுகளில் இருந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் தற்போது ரஷியாவில் இது போன்ற கொடூர சம்பவம் நடப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ரஷியாவின் சைபீரியா வில் உள்ள நொவோசி பிர்ஸ்க் நகரை ஒட்டி வனப்பகுதி உள்ளது.
அங்கிருந்து நாய் போன்று வெளியே வரும் ஒரு ரத்தக் காட்டேரி மிருகம் கிராமங்களுக்குள் வருகிறது. பின்னர் ஆடு, மாடுகளின் கழுத்தில் கடித்து ரத்தத்தை மட்டும் குடிக்கிறது. ஆனால் அவற்றின் இறைச்சியை சாப்பிடுவதில்லை.
அந்த மிருகத்தை ரத்தம் குடிக்கும் நாய் என ரஷிய விவசாயிகள் வர்ணிக்கின்றனர். இதனால் அச்சத்தில் உறைந்துள்ள அவர்கள் மத குரு மார்களை அழைத்து வந்து அவற்றிடம் இருந்து தங்களது கால் நடைகளை காப்பாற்றும்படி ஆசி பெறுகின்றனர்.
தனது 17 வருட நினைவுகளை மறந்து தவித்த பெண்.
இங்கிலாந்தை சேர்ந்தவர் நவோமி ஜாக்கப்ஸ்(34). இவருக்கு 11 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.
இந்த நிலையில் கடந்த 2008ம் ஆண்டு ஒரு நாள் காலையில் தனது படுக்கையில் இருந்து எழுந்தார். அப்போது அவரது 17 வருட நினைவுகள் அனைத்தும் மறந்து போயின.
கடந்த 1992ம் ஆண்டு அவர் 15 வயது சிறுமியாக இருந்த போது பள்ளியில் முழு ஆண்டு தேர்வு எழுதியது தான் நினைவுக்கு வந்தது. அவரது மகன் அம்மா என்று அழைத்ததை அவரால் எற்றுக் கொள்ள முடியவில்லை.
தன்னை ஒரு சிறுமி போன்று பாவித்தார். எனவே அவரை மருத்துவரிடம் அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். ஞாபக மறதி நோய் பாதிக்கும் முன்பு அவர் மன நலம் குறித்த கல்வி படித்து வந்தார். அதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக மூளையில் பாதிப்பு ஏற்பட்டு இந்த ஞாபக மறதி வந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
3 ஆண்டு சிகிச்சைக்கு பிறகு தற்போது இவருக்கு ஓரளவு பழைய நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்துள்ளன. ஞாபக மறதியால் தான் பட்ட கஷ்டங்களை அவர் புத்தகமாக எழுதியுள்ளார்.
தனது நோய் முற்றிலும் குணமடைந்தததும் முகத்தை கண்ணாடியில் பார்த்ததாகவும் அப்போது சுருக்கமடைந்த முகத்துடன் வயதான தோற்றத்தில் தான் தெரிந்ததாகவும் கூறியுள்ளார்.
அப்போது மகன் தன்னை அம்மா என்று அழைத்த போது தான் தனது நிலையை புரிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவை விட அதிகளவு இருப்பு வைத்துள்ள ஆப்பிள் நிறுவனம்.
அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளிடம் உள்ள ரொக்க இருப்பு அமெரிக்க அரசின் ரொக்க இருப்பை விட அதிகம் என செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆப்பிள் நிறுவனத்திடம் 75.87 பில்லியன்(ஒரு பில்லியன்=100 கோடி) டொலர் ரொக்க இருப்பு உள்ளது. ஆனால் அமெரிக்க அரசின் கருவூலத்தில் 73.76 பில்லியன் டொலர் மட்டுமே ரொக்க இருப்பு உள்ளது.
அமெரிக்க அரசு தனது கடன் உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்று குடியரசு, ஜனநாயக கட்சிகள் கோரிவருவதற்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்காவின் கருவூலம் அளித்த பதிலில் இருந்து இந்த விவரம் பெறப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசிடம் உள்ள ரொக்க இருப்பு இந்த அளவிற்குத்தான் என்பதால் கடன் உச்ச வரம்பை உயர்த்த முடியாது என்று பதிலளித்துள்ளது.
அமெரிக்க அரசிற்கு தற்போது 14.3 டிரில்லியன்(ஒரு டிரில்லியன்=1000 பில்லியன்) டொலர் உள்ளது. இதற்கு மேலும் கடன் வாங்கினால் அது அமெரிக்காவின் பொருளாதாரத்தை பாதித்துவிடும் என்று அமெரிக்க கருவூலம் கூறியுள்ளது.
சந்தை மூலதனமாக 363.25 பில்லியன் கொண்டுள்ள ஆப்பிள் அமெரிக்காவின் மிகப் பெரும் எண்ணெய் நிறுவனமான எக்ஸான் மொபில் நிறுவனத்திற்கு அடுத்தப்படியாக மிகப் பெரிய நிறுவனமாகத் திகழ்கிறது. 3ஜி அலைபேசி வர்த்தகத்தில் அடியெடுத்து வைத்த பிறகு அதன் வளர்ச்சி அபரீதமான அளவிற்குச் சென்றுள்ளது.
முபாரக்கிடம் ஆகஸ்ட் 3ம் திகதி முதல் விசாரணை ஆரம்பம்.
எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக்கிடம் வரும் 3ம் திகதி முதல் விசாரணை நடத்தப்பட உள்ளது.
எகிப்தில் பல ஆண்டுகளாக ஆட்சி பொறுப்பில் இருந்த ஹோஸ்னி முபாரக் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
மக்கள் புரட்சி ஏற்பட்டதால் பதவியில் இருந்து அவர் தூக்கி எறியப்பட்டார். 83 வயதாகும் முபாரக் தற்போது ஷரம் எல்ஷேக்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் அரசுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டவர்களை கொன்று குவித்தது, ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து முபாரக்கிடம் ஆகஸ்ட் 3ம் திகதி முதல் விசாரணை நடக்கும் என்று உள்துறை அமைச்சர் மன்சூர் நேற்று தெரிவித்தார்.
முபாரக்கின் மகன்கள் ஆலா, கமால் ஆகியோரிடமும் விசாரணை நடக்கவுள்ளது. இதற்காக கெய்ரோவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மொனாக்கோ நாட்டில் விபத்து: ரூ.5 கோடி மதிப்பிலான கார்கள் நாசம்.
மொனாக்கோவில் சமீபத்தில் ஏற்பட்ட கார் விபத்து உலகின் விலை உயர்ந்த விபத்தாக கருதப்படுகிறது. ரூ.5 கோடி மதிப்புள்ள கார்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாயின.
பிரான்ஸ் அடுத்த மொனாக்கோ நாட்டில் உள்ள நகரம் மான்ட் கர்லோ. சில நாட்களுக்கு முன்பு இங்குள்ள பரபரப்பான சாலையில் வாகனங்கள் சீராக சென்று கொண்டிருந்தன.
பிளேஸ் டூ என்ற விடுதியின் அருகே உள்ள சிக்னலில் சிவப்பு விழுவதற்குள் சென்று விடலாம் என்ற தைரியத்தில் ஆக்சிலேட்டரை அழுத்தினார் பென்ட்லி அஸூர். இது இங்கிலாந்தின் பென்ட்லி நிறுவனத்தின் தயாரிப்பு. விலை சுமார் ரூ.1.8 கோடி.
அதே சிக்னலில் முந்திக் கொள்ள நினைத்த மெர்சிடஸ் எஸ் கிளாஸ் காரின் பக்கவாட்டில் இடித்தது பென்ட்லி. மெர்சிடஸ் விலை சுமார் ரூ. 54 லட்சம். அதோடு நிற்காமல் எதிரே வந்த பெராரி எப்480 மீதும் மோதியது.
இதன் விலை ரூ.1.03 கோடி. வேறு திசையில் இருந்து வந்த ஆஸ்டன் மார்ட்டின்(ரூ.1.08 கோடி), போர்ஷ்(ரூ.57.6 லட்சம்) ஆகிய கார்களும் இந்த கார்கள் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
எல்லாம் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்துவிட்டது. பளபள சொகுசு கார்கள் ஒன்றோடொன்று முட்டிக்கொண்டு நடுரோட்டில் நிற்பதை மொத்த கூட்டமும் திரண்டு வேடிக்கை பார்த்தது.
உலக அளவில் விலையுயர்ந்த கார்கள் வரிசையில் முன்னணியில் இருக்கும் பென்ட்லி, மெர்சிடஸ், பெராரி, ஆஸ்டன் மார்ட்டின், போர்ஷ் ஆகியவை மோதிக்கொண்டது அரிய சம்பவமாக கருதப்படுகிறது.
சிங்கத்துடன் ஒன்றாக ஐந்து வாரம்: உக்ரைன் நாட்டு வாலிபர் சாகசம்.
அலெக்ஸாண்டர் பிலிஷென்கோ என்பவர் உக்ரைன் நாட்டை சேர்ந்தவர். இவர் மிருககாட்சி சாலை ஒன்றின் உரிமையாளர். அங்கு சில சிங்கங்களை பராமரித்து வருகிறார்.
இந்நிலையில் திடீரென சிங்கங்கள் வசிக்கும் கூண்டில் அவற்றுடன் ஐந்து வாரங்கள் தங்கியிருந்து சாதனை செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.
இந்த காலகட்டத்தில் சிங்கங்களில் ஒன்று பிரசவத்திற்கு தயார் நிலையில் உள்ளது. சிங்கக்குட்டிகள் பிரசவிக்கும் போது தாம் கூண்டிலிருக்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவர் கூண்டில் இருக்கப்போகும் நாட்களில் உணவு உறக்கம் அனைத்துமே இந்த கூண்டுக்குள் தான் என்று கூறப்படுகிறது. இந்த கூண்டுக்குள் கமெராக்களை பொருத்தி ஒரு தொலைகாட்சியின் மூலம் ஒளிபரப்பவும் இவர் திட்டமிட்டுள்ளார்.
ரஷ்யாவில் பயங்கர காட்டுத் தீ: மரங்கள் எரிந்து நாசம்.
ரஷ்யாவின் பல பகுதிகளிலும் தொடர்ந்து கொழுந்துவிட்டு எரியும் காட்டு தீயால் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் வனப்பகுதியில் உள்ள மரங்கள் எரிந்து சாம்பலானது.
ரஷ்யாவின் ரோஸ்டோ பகுதியில் அண்மைக்காலமாக தொடர்ந்து காட்டு தீ பரவி வருகிறது. இதன் காரணமாக அரிய வகை பைன் மரங்கள் உள்ளிட்ட காட்டு மரங்கள் தீயில் எரிந்து நாசமானது.
வேகமாக பரவி வரும் இந்த காட்டு தீ ரஷ்யாவின் கிழக்கு பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான ஹெக்டேர் வனப்பகுதிகளை சேதப்படுத்தியதோடு ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த காட்டு தீயை அணைப்பதற்காக பல்வேறு முயற்சிகளை தீயணைப்பு துறையினர் மேற்கொண்டு வந்த போதிலும் தீ மேலும் கொழுந்து விட்டு எரிகிறது.
மருத்துவமனை தொழிலாளர்களுக்கு கிடைத்த லாட்டரி பரிசு.
டொரண்டோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் 34 மருத்துவ தாதிகள் சேர்ந்து ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கினார்கள்.
அந்த பரிசு சீட்டிற்கு 15 மில்லியன் டொலர் பரிசு விழுந்துள்ளது. இந்த செய்தியை அறிந்த அந்த மருத்துவ தாதிகள் பாட்டு பாடி ஆட்டம் போட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
ஜூலை 22ஆம் திகதி நாங்கள் வாங்கிய பரிசு சீட்டிற்கு பரிசு விழுந்துள்ளது என்ற செய்தியை அறிந்ததும் எங்கள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என பரிசுத்தொகையின் ஒரு பங்கைப் பெற்ற நயோமி கொனாடு என்ற தாதி கூறினார்.
மேலும் பரிசுப்பணத்தில் ஒரு சிவப்பு நிற ஸ்போர்ட்ஸ் கார் வாங்க இருப்பதாகவும், அதில் என் அருகில் யார் வேண்டுமானாலும் பயணம் செய்யலாம் என்றும் அவர் கூறினார்.
பரிசுத்தொகையை ஒவ்வொருவரும் 500,000 டொலர் வரை பகிர்ந்து கொண்டதும், எங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாட ஆடிப்பாடி மகிழ்ந்தோம்.
பரிசுத்தொகை முழுவதையும் நான் செலவு செய்ய மாட்டேன். என் எதிர்காலத்திற்காக இந்த பணத்தை உபயோகப்படுத்துவேன் என்று ஹென்ரிட்டா மக்மஹோன் தெரிவித்துள்ளார்.
ஆணா, பெண்ணா என்ற குழப்பத்தில் ஹிலாரி கிளிண்டன்: பேஷன் நிபுணர் கிண்டல்.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தான் ஆணா, பெண்ணா என்று குழப்பத்தில் இருப்பதாக பிரபல அமெரிக்க பேஷன் நிபுணர் டிம் கன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பிரபல பேஷன் நிபுணர் டிம் கன். அவர் அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது: ஹிலாரி கிளிண்டன் அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சராக உள்ளார். அவர் நியூயோர்க் செனட்டராகவும், முன்னாள் முதல் குடிமகளாகவும் இருந்துள்ளார். பின் ஏன் இப்படி ஆடை அணிகிறாரோ?
ஹிலாரி தான் ஆணா, பெண்ணா என்ற பெரும் குழப்பத்தில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். அவர் தொள தொளவென உள்ள ஆண்களின் ஆடைகளை அணிகிறார். அது அவருக்கு சற்றும் பொருந்தவில்லை என்றார்.
ஆப்கனில் சாலையோர குண்டு வெடிப்பு: 22 பேர் உடல் சிதறி பலி.
ஆப்கானிஸ்தானில் சாலையோரம் நடந்த குண்டுவெடிப்பில் டிராக்டர் மற்றும் மினி பஸ் ஒன்றில் சென்ற 22 பேர் பலியாயினர்.
ஆப்கானிஸ்தானில் ஹெல்மான்ட் மாகாணத்தில் உள்ள நகர் இ செர்ஜா மாவ்டடத்தில் தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் ஆட்களை ஏற்றிக்கொண்டு மினி பஸ் ஒன்றும், அதன் பின்னால் டிராக்டர் ஒன்றும் வந்து கொண்டிருந்தது.
அப்போது மினி பஸ் வந்து கொண்டிருந்த போது சாலையோரம் திடீரென வெடிகுண்டு வெடித்தில் மினி பஸ் தூக்கி வீசப்பட்டது. பின்னால் வந்த டிராக்டர் தூள்தூளானது.
இதில் மினி பஸ்சில் வந்த 22 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாயினர்.
இது குறித்து தேசிய பாதுகாப்பு இயக்குனர் கமாலுதீன் கூறுகையில்,"ஹெல்மான்ட் மாகாணம் தலிபான்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி. சம்பவ நடந்த இடத்தில் மினி பஸ்சில் குழந்தைகளும் சென்றுள்ளனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கும்" என்றார்.
கடந்த 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் வரையில் தலிபான்கள் தாக்குதலில் அப்பாவி மக்கள் பலியாவது அதிகரித்து வருகிறது.
பாகிஸ்தானில் சுவிஸ் தம்பதியினர் கடத்தல்.
பாகிஸ்தானைச் சேர்ந்த தலிபான்கள் இரண்டு சுவிஸ் நாட்டு தம்பதியினரை கடத்திச் சென்றுள்ளனர்.
இதற்காக அமெரிக்காவில் சிறை வைக்கப்பட்டுள்ள பெண் விஞ்ஞானி ஒருவரை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
பாகிஸ்தானில் தலிபான்கள் அமைப்பின் இரண்டாம் கட்ட தலைவராக உள்ளவர் வெலிரூ ரஹ்மான். பாகிஸ்தானில் தென்மேற்கு மாகாணத்திற்கு சுற்றுலா வந்திருந்த இருந்த இரண்டு சுவிட்சர்லாந்து நாட்டு தம்பதியினரை கடத்திச் சென்றுள்ளார்.
அவர்களை விடுவிக்க வேண்டுமென்றால் அமெரிக்க சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பாகிஸ்தான் பெண் விஞ்ஞானி அபியா சித்திக்கை(38) விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் பிணை கைதியாக பிடித்து வைக்கப்பட்டுள்ள சுவிஸ் தம்பதியினை நாங்கள் எந்த கொடுமைக்கும் ஆளாக்கமாட்டோம் என்றும், இதற்கு கைமாறாக உடனடியாக பெண் விஞ்ஞானி அபியா சித்தி‌க்கை விடுவிக்க வேண்டும் எனவும், இல்லையென்றால் சுவிஸ் தம்பதியினரின் உயிரை தலிபான் கோர்ட் தீர்மானிக்க வேண்டியிருக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க சிறையில் உள்ள அபியா சித்திக்(38) பெண் அல்கொய்தா என அழைக்கப்படுகிறார். ஆப்கானிஸ்தானில் அமெரிக்க அதிகாரிகளை கொல்ல முயன்றதாக கடந்த ஆண்டு(2010) செப்டம்பர் மாதம் தொடரப்பட்ட வழக்கில் சித்திக்கிற்கு 86 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அமெரிக்கா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
அல்கொய்தா இயக்கமும், ஈரானும் ரகசிய உடன்பாடு: அமெரிக்கா குற்றச்சாட்டு.
பயங்கரவாதச் செயல்களுக்கு ஆள்களை தேர்வு செய்ய ஈரானும், அல்கொய்தாவும் ரகசிய உடன்பாடு செய்து கொண்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.
பாரசீக வளைகுடா பகுதியில் இருந்து ஆள்களை தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி அளித்து பின்னர் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானுக்கு அனுப்பி தாக்குதலை நிகழ்த்த அல்கொய்தா பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர்.
அல்கொய்தாவின் இந்த மோசமான திட்டத்துக்கு ஈரானும் உடந்தையாக இருக்க ஒப்புக்கொண்டுள்ளது. அல்கொய்தா தமது செயலுக்கு ஈரான் மண்ணைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்து அந்நாடு ரகசிய உடன்பாடு செய்து கொண்டுள்ளது என்றும் அமெரிக்காவின் நிதித் துறை குறிப்பிட்டுள்ளது.
அல்கொய்தா முக்கிய தலைவரான அப்துல் ஆசி கலீல் உள்ளிட்டோருடன் ஈரான் உடன்பாடு செய்துள்ளது. இவர்கள் பாரசீக வளைகுடா நாடுகளில் தங்களது பணியைத் தொடங்க மும்முரமாகவுள்ளனர்.
இவர்களுக்கு அமெரிக்காவில் ஏதேனும் சொத்துக்கள் இருப்பின் அவை முடக்கப்படும். இந்த பயங்கரவாதிகள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுகிறது என்றும் அமெரிக்காவின் நிதித்துறை தெரிவித்துள்ளது.
உக்ரைன் நிலக்கரி சுரங்க வெடி விபத்து: 16 பேர் பலி.
உக்ரைனின் கிழக்கு பிராந்தியமான லுகான்ஸ்க் நிலக்கரி சுரங்கத்தில் வெடிப்பு ஏற்பட்டது. இந்த பயங்கர விபத்தில் 16 சுரங்கத் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் 10 பேரை காணவில்லை. இன்று ஏற்பட்ட இந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என உக்ரைன் அவசர நிலை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
மாயமான தொழிலாளர்கள் எங்கே உள்ளனர் எனத் தெரியவில்லை. உலகிலேயே மிக ஆபத்தான சூழ்நிலையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களாக உக்ரைன் சுரங்க தொழிலாளர்கள் உள்ளனர்.
அவர்களுக்கு மிக குறைந்த ஊதியமே தரப்படுகிறது. சோவியத் கால பழைய கருவிகளே இந்த சுரங்கப் பணியில் பயன்படுத்தப்படுகிறது.
உக்ரைனில் சுரங்க விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன. இன்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:57 மணிக்கு விபத்து ஏற்பட்டது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF