தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் மஹிந்த அரசு மெத்தனப் போக்கு! டில்லியில் ரணில்.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு கண்டு தமிழர்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளாது மெத்தனப் போக்கை மஹிந்த ராஜபக்ஷ அரசு கடைப்பிடிக்கிறது என்று எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று டில்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்..இரண்டு நாள் பயணமாக இந்தியா சென்ற ரணில், புதுடில்லியில் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.
சிரியாவின் அரசுக்கெதிராக கலவரம் செய்தவர்கள், அரசியல் குற்றவாளிகள் ஆகியோருக்கு அந்நாட்டு அதிபர் பஷீர் அல் ஆசாத் பொது மன்னிப்பு வழங்கி அதற்கான சட்டம் கொண்டு வந்தார்.சிரியாவில் கடந்த சிலமாதங்களாக அரசுக்கெதிராக பொதுமக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் பஷீர் ஆசாத் பதவி விலக வலியுறத்தி வந்தனர்.
உடனடி போர் நிறுத்தத்திற்கு கடாபி தயாராக உள்ளார். அதே நேரம் இருதரப்பும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு லிபியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்க வேண்டும் என அவர் விரும்புகிறார் என அதிபர் ஜேக்கப் ஜூமா தெரிவித்துள்ளார்.அவரது இந்த கோரிக்கையை எதிர்த் தரப்பினர் உடனடியாக நிராகரித்து விட்டனர். லிபிய விவகாரத்தில் அமைதி ஏற்படுத்துவதற்காக தென் ஆப்ரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா நேற்று முன்தினம் லிபியா சென்றார்.அங்கு கடாபியுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஆப்ரிக்க யூனியன் சார்பில் உடனடி போர் நிறுத்தத்தை அவர் வலியுறுத்தினார். ஆனால் கடாபி பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்ததாக கூறப்படுகிறது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

இந்தியாவில் தங்கியிருந்து ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் காலை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, வெளியுறவுச் செயலர் நிருபமாராவ், எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரைச் சந்தித்து இலங்கைப் பிரச்சினை தொடர்பாக பேச்சு நடத்தினார்.நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு திரும்பு முன்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்திருந்தார்.
அப்போது அங்கு அவர் தெரிவித்ததாவது:
இலங்கைத் தமிழர்களுக்கு ஆட்சியில் அதிகாரப் பகிர்வு அளிக்க வகை செய்யும் இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அரசு உறுதி அளித்திருந்தது.ஆனால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாக்குறுதியை நிறைவேற்றுவதில் கால தாமதம் செய்து வருகிறார்.
போரால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தங்களது வீடுகளுக்குத் திரும்பும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இலங்கை அரசு கூறியது. ஆனால், மறுசீரமைப்பு பணிகள் வெறும் கோப்புகளில் மட்டும் உள்ளன.போர்க்குற்றம் புரிந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ள ஐ.நா. அறிக்கைக்கு இலங்கை அரசு விரைவில் தனது விளக்கத்தை அளிக்கும் என தாம் நம்புகிறார் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா என்னிடம் தெரிவித்தார் என்றார்.
தமிழக முதல்வராக மூன்றாவது தடவை பதவி ஏற்ற ஜெயலலிதாவுக்கு ரணில் விக்கிரமசிங்க வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டார்.அரச நிர்வாகமும், நேரமும் வாய்ப்பு அளித்தால் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து இலங்கைத் தமிழர்களின் இப்போதைய நிலைமை குறித்தும் இலங்கை அரசியலில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்தும் விளக்கம் அளிக்கத் தயாராக உள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.
சிரியாவில் குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும்: அதிபர்.

தேரா நகரில் துவங்கிய மக்கள் கலவரத்தால் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.எனினும் அதிபர் பதவி விலக மறுத்து வந்தார். எதிர்க்கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. மேலும் இந்த கலவரத்தால் உள்ளூர் பத்திரிகைகள் மற்றும் வெளிநாட்டு பத்திரிகைகளுக்கு கடுமையான எச்சரிக்கப்பட்டனர்.
இந்நிலையில் அதிபர் ஆசாத் நேற்று அரசு தொலைக்காட்சி வாயிலாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: அரசுக்கெதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள், எதிர்க்கட்சித்தலைவர்கள், அரசியல் கைதிகள் ஆகியோருக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக அவசர சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
போர் நிறுத்தத்திற்கு கடாபி தயார்: எதிர்த்தரப்புகள் ஆர்ப்பாட்டம்.

இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜூமா,"போர் நிறுத்தத்திற்கு கடாபி தயாராகவே உள்ளார். அதே நேரம் இருதரப்பும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு லிபியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்க வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார்" என்று கூறினார்.ஆனால் பதவி விலகுவது குறித்து கடாபி உறுதியளித்தாரா என்று ஜூமா எதுவும் குறிப்பிடவில்லை. இதையடுத்து பெங்காசியில் உள்ள எதிர்த் தரப்பினர் கடாபியின் கோரிக்கையை உடனடியாக நிராகரித்து விட்டனர்.
பெங்காசியில் இயங்கி வரும் தேசிய இடைக்கால அரசின் வெளியுறவு அமைச்சர் பத்தி பஜா,"இதை நாங்கள் முழுமையாக நிராகரிக்கிறோம். இந்த பேச்சுவார்த்தையை ஒரு அரசியல் துவக்க முயற்சியாக நாங்கள் கருதவில்லை. பதவியில் தொடர்வதற்கு கடாபி பயன்படுத்தும் சந்தர்ப்பம் இது" என்றார்.இந்நிலையில் நேட்டோ தாக்குதலுக்கு தென் ஆப்ரிக்க அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதே நேரம் ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் ஐகமிஷனர் நவநீதம் பிள்ளை பொதுமக்கள் மீதான கடாபி ராணுவத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.