Thursday, June 9, 2011

iCloud: அப்பிள் நிறுவனத்தின் புதிய பரிணாமம்.


அப்பிள் தனது ஐ கிளவுட்(iCloud) எனப்படும் மேக நினைவக சேவையை(cloud storage service) அறிமுகப்படுத்தியது.சென் பிரான்ஸிஸ்கோவில் நடைபெற்ற அப்பிளின் மென்பொருள் அபிவிருத்தியாளர்களுக்கான மாநாட்டிலேயே இச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.ஐ கிளவுட்டானது 9 பிரதான அப்ளிகேஷன்களை கொண்டதாகும். இவற்றில் அதிகமானவை அப்பிளின் மொபைல் மீ சேவையில் காணப்பட்டதாகும்.
இப்புதிய சேவையானது பாவனையாளரின் தரவுகளை அதாவது மின்னஞ்சல்கள், அப்ளிகேஷன்கள், கோப்புக்கள் மற்றும் பாடல்கள் ஆகியவற்றை ஓன்லைன் சேர்வரில் சேமித்து வைக்க உதவுவதுடன் அப்பிளின் மெக் மற்றும் ஐ போன், ஐ பேட் உபகரணங்களின் ஊடாக அவற்றிற்குள் நுழைய முடியும்.இதன் பிரகாரம் பாவனையாளர்கள் தாம் சேமித்து வைத்துள்ள தரவுகளுக்கு இணையத்தின் ஊடாக வெவ்வேறு உபகரணங்களின் வாயிலாக நுழைய முடியும்.குறித்த சேவையானது அப்பிளின் ஐ போன், ஐ பேட் மற்றும் மெக் ஆகியவற்றிற்கிடையில் ஒரு பாலமாக செயற்படுமென தெரிவிக்கின்றது.
உதாரணமாக ஐ கிளவுட் கணக்கொன்றினை வைத்திருக்கும் ஐ போன் பாவனையாளர் புதிய தொடர்பு இலக்கமொன்றினை பதிவு செய்வாராயின் அது உடனேயே அவரது ஐ கிளவுட் கணக்கிற்கு அனுப்பப்படுவதுடன் அப் பாவனையாளரின் மற்ற உபகரணங்களுடன் அது இணைக்கப்படும்.மேலும் ஐ போனில் இரு புகைப்படம் எடுக்கப்படுமாயின் அதனை ஐபேட்டின் ஊடாக பார்வையிட முடியும்.இச்சேவையானது அப்பிளின் ஐ ஓஎஸ் இயங்குதளத்தின் உதவியுடன் இயங்கும் ஐபோன், ஐ பேட் மற்றும் ஐ பொட் உபகரணங்களின் மூலம் உபயோகிக்க முடியும்.
இந்நிகழ்வில் அப்பிள் தனது ஐபேட் கணணி, ஐ போன் ஆகியவற்றின் இயங்குதளங்களின் மேம்படுத்திய "iOS 5" என்ற புதிய தொகுப்பினையும், மெக் வகை கணனிகளுக்கான "Mac OS X Lion" இயங்குதளத்தினையும் அறிமுகப்படுத்தியது. இவை புது வசதிகள் பலவற்றை உள்ளடக்கியுள்ளன.இவையும் சந்தையில் வெளியாகும் முன்னரே பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF