
விண்வெளியில் உள்ள பால் வீதி மண்டலத்தில் இருக்கும் நட்சத்திரக் கூட்டங்களுக்கு அழிவு இல்லை.பழமையான கேலக்சிகள் அழிந்து போவதாக கருதப்பட்டு வந்தது. ஆனால் அவை புதிய நட்சத்திரங்களை உருவாக்குவதை மிச்சிகன் பல்கலைகழக வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.
இந்தப் பல்கலைகழகத்தின் ஆராய்ச்சியாளரான வானியல் ஆய்வு பேராசிரியர் ஜோல் பிரகமன் பழைய கேலக்சிகளில் இருந்து உருவாகும் புதிய நட்சத்திரங்கள் குறித்த கண்டுபிடிப்பை தெரிவித்து உள்ளார்.மே 31ம் திகதி ஒண்டோரியாவில் உள்ள லண்டனில் கனேடிய விண்வெளி சொசைட்டி கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர் ஜோல் குழுவினர் தங்களது கண்டுபிடிப்பை தெரிவித்தனர்.
நீண்ட தொலைவில் உள்ள பொருட்களை மிக நுணுக்கமாக அவதானிக்க உதவும் கமெரா மூலம் விண்வெளி நுண்ணோக்கியில் ஆய்வு செய்த போது 400 லட்சம் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள 4 பால் வீதி மண்டலத்தில் புதிய இளம் நட்சத்திரங்கள் மற்றும் நட்சத்திரக்கூட்டம் உருவாகி இருப்பது தெரியவந்தது.ஒரு ஒளி ஆண்டு என்பது 5-9 டிரில்லியன் மைல்கள் ஆகும். ஒரு டிரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடி என்ற அளவை குறிப்பதாகும்.



