Friday, June 24, 2011

குழந்தைகளின் அறிவை வளர்க்க உதவும் இணையங்கள்.


இணையம் தொழில்நுட்ப வளர்ச்சியின் பிரம்மாண்டம். அந்த பிரம்மாண்டத்தில் இன்றைய குழந்தைகள் அதிக ஆர்வம் காட்டுகின்றன. அவர்களின் அறிவை வளர்ப்பதற்காகவே பல தளங்கள் இருக்கின்றன.
1. Kidsmart: லண்டனிலிருந்து செயல்படும் இந்த இணையதளம் குழந்தைகளுக்கு இணையம் தொடர்பான பல்வேறு விடயங்களை கற்றுத்தருகிறது. அரட்டை, சமூக இணைய தளங்கள், இணைய பாதுகாப்பு என்று இன்னும் நிறைய விடயங்களை சின்ன சின்ன டிப்ஸ்களாக சொல்லி தருகிறது.
2. Yahoo Kids: குழந்தைகளுக்காக யாஹூ நடத்தும் வலைத்தளம். விளையாட்டுக்கள், படங்கள், நகைச்சுவைகள், பொது அறிவு செய்திகள் இன்னும் நிறைய இருக்கின்றன. பெற்றோர்களுக்காகவும் ஒரு பகுதி இருக்கின்றது.
3. Ask Kids: முன்னணி தேடுபொறிகளில் ஒன்றான Ask.com தளத்தின் குழந்தைகளுக்கான தேடுபொறியாகும்.
4. National Geographic Kids: அமெரிக்காவிலிருந்து செயல்படும் அறிவியல், கல்வி அமைப்பான The National Geographic Society (National Geographic தொலைக்காட்சி இவர்களுடையது தான்).குழந்தைகளுக்காக நடத்தும் தளம் இது. அறிவியல், உயிரினங்கள் போன்ற பல விடயங்களை குழந்தைகள் கற்றுக் கொள்ளலாம்.
5. Kids Health: மருத்துவம் பற்றி குழந்தைகளுக்கு சொல்லி தரும் தளம். "மூட்டைப்பூச்சி கடித்தால் என்ன செய்ய வேண்டும்?", "நமது உடல் பாகங்கள் எவ்வாறு செயல்படுகின்றது?" என்று பல்வேறு விடயங்கள் இருக்கின்றன.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF