Friday, June 17, 2011

ஆதிகால பிரபஞ்சத்தின் வான்வெளியில் கறுப்பு ஓட்டைகள்.


நமது பிரபஞ்சம் 13.7 பில்லியன் ஆண்டு சரித்திரம் கொண்டது. ஒரு பில்லியன் என்பது 100 கோடி ஆண்டுகள் ஆகும்.பிரபஞ்சத்திற்கு 100 கோடி ஆண்டுகள் ஆன நிலையில் வான்பகுதியில் 300 லட்சம் கறுப்பு ஓட்டைகள் அமைந்து இருந்ததாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இன்றைய நட்சத்திர கூட்டமைப்பு காணப்படும் நிலைக்கு இந்த கறுப்பு ஓட்டைகள் முக்கிய காரணமாக இருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.பிரபஞ்சத்தின் பல லட்ச கறுப்பு ஓட்டைகள் குறித்த ஆய்வுக்கட்டுரை நேக்சர் இதழில் வெளியாகி உள்ளது. இந்த புதிய ஆய்வு நாசாவின் சந்த்ரா எக்ஸ்ரே கண்காணிப்பு பயன்பாடு மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
கறுப்பு ஓட்டையால் வான்வெளியின் அடர்த்தி பகுதியில் செல்ல முடியாது. பிரபஞ்சத்தில் இன்றும் சில பிரகாசமான பொருட்கள் உள்ளன. அவை கறுப்பு ஓட்டைகளின் விளைவு தான் என ஆராய்ச்சியின் தலைவரும் யேல் பல்கலைக்கழக விண்வெளி ஆய்வாளருமான தெவின் ஷாவின்ஸ் கூறினார்.பெரும் வெடிப்பு மற்றும் துவக்க கட்ட வெடிப்புக்கு பின்னர் முதல் கறுப்பு ஓட்டைகள் எப்படி ஏற்பட்டது என தெரியவில்லை. துவக்க கட்ட வெடிப்பின் விளைவாகவே நமது பிரபஞ்சம் உருவாகி உள்ளது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF