Tuesday, June 14, 2011

புதிராகக் காட்சியளிக்கும் விலங்கு!



ஒருகாலத்தில்ஆஸ்திரேலியாவும்அனேகமாகதென்அமெரிக்காவும் ஆசியாவுடன் இணைந்திருந்ததாகவும், பாலத்தைப் போன்ற ஒரு நிலப்பகுதி இந்தஇணைப்பைஏற்படுத்திஇருந்ததாகவும்புவியியல்வல்லுநர்கள்கூறுகின்றனர்.
பாலமாகஅமைந்திருந்தபகுதியைநீண்டகாலத்துக்குமுன்புகடல்விழுங்கிவிட்டது.உயர்இனத்தைச்சேர்ந்தவிலங்குகள்தோன்றுவதற்குமுன்பே இணைப்பு நிலப்பகுதியைக் கடல் கவர்ந்துவிட்டது.
அதன் விளைவாக ஆஸ்திரேலியா ஒரு தீவாகவும், தனிப்பெரும் கண்டமாகவும் உருவாகிவிட்டது. ஆதிகாலத்து விலங்குகள் ஆசியாவின் மற்ற பகுதிகளுக்குச் செல்ல முடியாமல் ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தப்பட்டன. அவை மரபற்று அழிந்துவிடவில்லை. அவற்றைப் போன்ற விலங்குகள் உலகின் மற்ற பகுதிகளில் மரபற்று மறைந்துவிட்டன என்பதே உண்மை.
`மார்சுபியஸ்’ எனப்படும் விலங்குகளின் தொகுதி ஆஸ்திரேலியாவில்தான் காணப்படுகிறது. இந்தச் சொல், `மார்சுபியன்’ என்ற கிரேக்க வார்த்தையில் இருந்து வந்திருக்கிறது. இதற்கு, `சிறிய பை’ என்று பொருள். இந்த இனத்தின் பெண் விலங்குகளின் உடலில் ஒரு பை அமைந்துள்ளது. அந்தப் பையில்தான் இந்த விலங்குகள் தமது குட்டிகளை பத்திரமாகச் சுமந்து செல்கின்றன.
மற்ற பாலூட்டிகளுக்கும், பை பாலூட்டிகளுக்கும் பல ஒற்றுமைகள் இருந்தாலும், உடலில் பையைப் பெற்றிருப்பதன் காரணமாக இவை தனிச்சிறப்பு உடையவையாகத் திகழ்கின்றன.
ஆஸ்திரேலியாவில் மட்டும் பை பாலூட்டிகளில் சுமார் 100 பிரிவுகள் உள்ளன. அவற்றில் கங்காரு, வல்லபி, வாம்பட்ஸ், கொயாலா ஆகியவை குறிப்பிடத்தக்கவை. பை பாலூட்டிகளுக்கு கங்காருவை சிறந்த உதாரணமாகக் கூறலாம். கங்காருகள் அந்நாட்டில் குடியேறிய ஐரோப்பியர்களுக்கு மட்டுமல்ல, அங்கிருந்த பூர்வகுடி மக்களுக்கும் திகைப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும் விலங்குகளாக இருந்தன.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF