பல வண்ணங்களில் ரோஜா மலர்களை பார்த்திருக்கிறோம். உலகில் முதன் முதலில் நீல நிற ரோஜா மலர்கள் கண்டுபிடிக்கப்பட்டு 2009 ம் ஆண்டு முதல் முதலில் விற்பனை செய்யப்பட்டது.அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து உலகின் நீல நிறத்தில் வளரும் தாவரங்களின் மரபணுக்களை வைத்து நீல நிற ரோஜாக்களின் தொழில் நுட்பத்தினை பயன்படுத்தி உருவாக்க முடியும் என்று நிரூபித்துள்ளனர். பல ஆய்வுகளுக்கு பின் 1995 ம் ஆண்டு முதல் நீல நிற ரோஜா மலர் பூத்தது. பின் 1997 ம் ஆண்டு அபிவிருத்தி செய்யப்பட்டது. 2004 ம் ஆண்டு வெற்றிகரமாக பெருமளவில் அபிவிருத்தி செய்யப்பட்டு 2009 ம் ஆண்டு சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது.