Sunday, June 5, 2011

6 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த யானையின் எலும்பில் புரதம்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு.


6 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த யானையின் எலும்பில் இருந்து விஞ்ஞானிகள் புரதத்தை எடுத்து சாதனை படைத்து உள்ளனர்.இந்த புதிய சோதனை முந்தய கால படிவங்களை அடையாளப்படுத்தி வகைப்படுத்த உதவும். மாமூத் என்ற  வார்த்தை ரஷ்ய மொழியில் உருவானது ஆகும்.பல லட்சம் ஆண்டுக்கு முந்தய மாமூத் யானை அதிக முடிகளுடனும் தந்தங்களை கொண்ட யானை வகை ஆகும். 1990ம் ஆண்டில் நோர்போக் முகடுகளில் மாமூத் எலும்புக்கூட்டை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
உயிரி தொல்லியல் ஆய்வாளர்கள் அதிக சக்தி வாய்ந்த ஸ்பெக்ட்ரோ மீற்றரை பயன்படுத்தி சோதனை செய்த போது புரதத்தினை எடுக்க முடிந்தது.உலகில் யானை இனம் தோன்றியதற்கு முழு உதாரணமாக திகழும் மாமூத் யானை எலும்புக்கூடு நார்விக்கின் நோர்போக் அருங்காட்சியகம் மற்றும் தொல்லியல் சேவைப்பகுதியில் பாதுகாக்கப்படுகிறது.
யார்க் பல்கலைகழகத்தின் தொல்லியல் துறை போராசிரியர் மாத்யூஸ் காலின்ஸ் கூறுகையில்,"6 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தய யானையின் புரத ஆய்வு மகத்தானது. பல ஆண்டுகளுக்கு முன்னர் பழமைவாய்ந்த மாமூத்தின் எலும்பில் இருந்து புரதம் எடுக்க முடியும் என்பதை நம்பவில்லை. தற்போதைய ஆய்வு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது" என்றார்.டி.என்.ஏ என்ற மரபணு 1 லட்சம் ஆண்டுகள் வரை ஆய்வு செய்ய உதவும். ஆனால் இந்த புரத கண்டுபிடிப்பு டி.என்.ஏ போன்று பத்து மடங்கு அதிகமாக ஆய்வு செய்ய உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF