Saturday, June 4, 2011

பேஸ்புக் நண்பர்களுக்கு பரிசளிக்க உதவும் இணையம்.

பேஸ்புக் யுகத்தில் எதையுமே யாரும் தனியே செய்வதில்லை. எல்லாவற்றையும் நண்பர்களோடு சேர்ந்து தான் செய்கின்றனர். இப்போது பரிசளிப்பதையும் நண்பர்களோடு சேர்ந்தே மேற்கொள்ளலாம். சோஷியல் கிப்ட் இணையதளம் இதற்கான வசதியை வழங்குகிறது. இந்த தளத்தின் மூலம் பொருத்தமான பரிசு பொருளை சுலபமாக தேர்வு செய்வதோடு அதற்கான விலையை நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ளலாம்.

நிஜ வாழ்க்கையில் பிறந்த நாள் கொண்டாடும் நண்பனுக்கு சக நண்பர்கள் ஒன்று சேர்ந்து ஏதாவது பரிசு பொருள் வாங்கி கொடுப்பது உண்டல்லவா?அதே போலவே இணையம் மூலம் நண்பர்கள் ஒன்று சேர்ந்து பரிசு பொருள் வாங்கி கொடுக்க இந்த சேவை உதவுகிறது.பரிசளிக்க விரும்பும் நபர் முதலில் பரிசு பொருளை தேர்வு செய்து கொள்ள வேண்டும். இதற்கான இணைய கடையும் உள்ளது. மின்னணு சாதனங்கள், கலை பொருட்கள், வாசனை திரவியங்கள் என்று பல்வேறு விதமான பரிசு பொருட்களில் இருந்து விருப்பமானதை தேர்வு செய்து கொள்ளலாம். 


தேர்வு செய்த பிறகு இது பற்றிய தகவலை உங்கள் பேஸ்புக் நண்பர்களோடு பகிர்ந்து கொண்டும் அவர்களும் பரிசளிக்க விரும்புகின்றனரா என்று கேட்க‌லாம். சம்மதம் என்றால் அவர்களும் தங்கள் பங்கிற்கு உரிய தொகையை செலுத்தலாம். இப்படி பரிசுக்கான தொகை சேர்ந்ததுமே குறிப்பிட்ட அந்த நண்பருக்கு பரிசு பொருள் அனுப்பி வைக்கப்படும்.நண்பர்களின் பிறந்த நாள் போன்ற நிகழ்வுகளின் போது இப்படி கூட்டாக பரிசளித்து அசத்தலாம். பேஸ்புக்கில் வெறும் வாழ்த்து செய்தி அனுப்புவதைவிட அழகான பரிசு பொருளை அனுப்பி வைப்பது சிறந்த்து அல்லவா? மேலும் பேஸ்புக் நண்பர்களைடையே பிரபலமாக உள்ள மெய்நிகர் பரிசுகளை வழங்குவதைவிட நிஜ பரிசையை வழங்குவது மேலானது. 

இந்த சேவையை நிறுவியுள்ள மோ கோவிந்த்ஜி இப்படி பேஸ்புக்கில் அர்த்தம் இல்லா வாழ்த்து அட்டைகளும் பயனில்லா பரிசுகளும் பரிமாறிக் கொள்ளப்படுவதை பார்த்து வெறுத்து போய் உண்மையிலேயே மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடிய பரிசு பொருளை வழங்கும் சேவை தேவை என்று உணர்ந்து தனது நண்பர்களோடு சேர்ந்து இந்த தளத்தை துவக்கியுள்ளார். பேஸ்புக் நண்பர்களை கவரக்கூடிய வகையில் சமூக தன்மை கொண்ட சேவையாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

இணையதள முகவரி.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF