பூமியின் காந்த ஈர்ப்பு தன்மையை உணரும் சக்தி மனித கண்களில் உள்ள புரதத்திற்கு உள்ளது. பறந்து செல்லும் பூச்சிகளின் கண்களில் காந்தப்புலம் தெரிவது இல்லை.அதே பூச்சிகளுக்கு மனித கண் புரதத்தை செலுத்திய போது அந்த பூச்சிகள் பூமியின் காந்த புல பகுதியை கடக்கும் போது பதில் அளிப்பதாக இருந்தது. காந்த திசையை காட்டும் கருவியாக மனித கண் புரதம் இருக்கும் என்ற ஆய்வு விவரம் நேச்சர் கொம்யூனிகேஷன்ஸ் ஆய்வு இதழில் வெளியாகி உள்ளது.இந்த ஆய்வு குறித்த சர்ச்சை நீடித்த போதும் புதிய கண்டுபிடிப்பு ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. மனிதர்களை போல இடம்பெயரும் பறவைகளுக்கு பதிவு செய்யும் கிரிப்டோகிராம் மூலக்கூறு இருப்பது தெரியவந்துள்ளது.
1980ம் ஆண்டு முதல் மனித கண் புரதம் குறித்து மான்செஸ்டர் பல்கலைகழக பேராசிரியர் ரொபின் பேக்கர் ஆய்வு மேற்கொண்டு இருந்தார். அதில் மனிதர்களுக்கு காந்த சக்தி அறியும் ஆற்றல் இருப்பதையும் கண்டறிந்தார்.பழமை வாய்ந்த புரதம் பெரும் வடிவ நிலைகளாக இருக்கும் போது கிரிப்டோ கிராம் என அழைக்கப்படுகின்றன. பூமியில் ஒவ்வொரு விலங்குக்கும் இந்த புரதம் உள்ளது.இடம்பெயரும் பறவைகள், மொனார்கோ பட்டாம்பூச்சி, பழப்பூச்சிகள் ஆகியவற்றுக்கு தாங்கள் செல்லும் பாதையை கண்டறிய கண்ணில் உள்ள கிரிப்டோகிராம் புரதம் உதவுகிறது.