குழந்தைகளின் புரிந்து கொள்ளும் திறன், அறிவாற்றல், புத்திசாலித்தனம் தொடர்பாக அமெரிக்காவின் நியூயார்க் பல்கலைக்கழகம் சார்பில் சமீபத்தில் ஆய்வு நடந்தது.குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த சுமார் 1,850 குழந்தைகளை வைத்து சர்வே நடத்தப்பட்டது.
இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளதாவது: குழந்தைகளின் கல்வி மேம்பட அவர்களுக்கு குடும்ப சூழல் குறித்த விழிப்புணர்வு சிறுவயது முதலே ஏற்படுத்தப்பட வேண்டும். இதற்கு முதல் அடியாக மற்றவர்களைச் சார்ந்திருக்காமல் தன் வேலைகளை தானே செய்து கொள்ள அவர்களை பழக்க வேண்டும்.வீட்டு நிர்வாகம் குறித்த விடயங்களை அவர்கள் அறிந்து கொள்வது அவர்களின் எதிர்காலம் மற்றும் கல்வி மேம்பாட்டுக்கு பெரிதும் உதவும். குறிப்பாக நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களில் இது மிக முக்கியம்.
பணக்கார வீடுகளை விட நடுத்தர, ஏழை குடும்பங்களில் குழந்தைகள் அதிகம் வேலை செய்து பழக்கப்பட்டிருப்பார்கள். இது கல்வியில் அவர்களது புரிந்து கொள்ளும் திறனை அதிகரிக்கிறது.சூழ்நிலையை சமாளிக்கும் திறன், புதிதாக தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஆகியவையும் அதிகமாகிறது. தாயுடன் அதிக நேரம் செலவிடுவதன் காரணமாக கதைகளை கேட்கின்றனர். சிறுசிறு விடயங்களையும் தெரிந்து கொள்கின்றனர். படிப்பில் சாதனை படைக்க இது அவர்களுக்கு உந்துகோலாக அமைகிறது.