சமீப காலமாக மாரடைப்பு நோய்க்கு பலர் பலியாகி வருகின்றனர். மாரடைப்பு ஏற்படுவதற்கு இருதய செல்கள் அழிவதால் ரத்த ஓட்டத்துக்கு தேவையான ஓக்சிஜன் கிடைக்காதது தான் காரணம் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
மாரடைப்பு வராமல் தடுக்க தற்போது எந்திர தொழில் நுட்பத்தை பயன்படுத்துகின்றனர். அதே வேளையில் மாரடைப்பு ஏற்பட காரணமான அழிந்து வரும் செல்களை மீண்டும் வளர செய்ய பல ஆராய்ச்சிகளை செய்து வருகின்றனர்.இந்நிலையில் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியை சேர்ந்த பால் ரிலே குழுவினர் எலியின் இருதயத்தில் உள்ள ஸ்டெம் செல்கள் மூலம் மனிதர்களின் மாரடைப்பை தடுக்க முடியும் என கண்டுபிடித்துள்ளனர்.
எலியின் இருதயத்தில் உள்ள தைமோசின் பேடா 4 என்ற மூலக்கூறுடன் கூடிய ஸ்டெம் செல் இதற்கு பயன்படும் என தெரியவந்துள்ளது. மாரடைப்பு ஏற்பட்ட எலிக்கு உடல் நலத்துடன் கூடிய எலியின் ஸ்டெம் செல்லை செலுத்தி இந்த சிகிச்சை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.அதே முறையில் மனிதர்களுக்கும் சிகிச்சை அளித்து மாரடைப்பு நோயை தடுக்க முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.