நட்சத்திரங்கள் அவற்றுக்கு இடையே உள்ள ஈர்ப்பு விசையின் காரணமாக ஒன்றையொன்று ஈர்த்துக் கொண்டு சுற்றிக் கொண்டு இருக்கும். இத்தகைய நட்சத்திரங்களை இரட்டை நட்சத்திரங்கள் என அழைப்பர்.குழந்தைகளில் இரட்டைக் குழந்தைகள் போன்று விண்வெளியில் இந்த இரட்டை நட்சத்திரங்கள் உள்ளன. பெரும்பாலான இரட்டை நட்சத்திரங்களை நாம் வெறும் கண்ணால் பார்க்கும் போது ஒரே நட்சத்திரமாகத் தெரியும்.
இரட்டை நட்சத்திரங்களைத் தனியே காண வேண்டுமெனில் அதிக திறன் கொண்ட தொலைநோக்கிகள் தேவையாகும். விண்வெளி விஞ்ஞானிகளுக்கு இந்த இரட்டை நட்சத்திரங்கள் அதிகளவில் பயன்படுகின்றன.இரட்டை நட்சத்திரங்களின் உதவியோடு நட்சத்திரங்களின் எடையை எளிதில் கண்டறியலாம். எத்தனையோ தொடர் ஆராய்ச்சிகள் நடைபெற்றாலும் விஞ்ஞானிகளுக்கு விண்வெளி மிகப் பெரிய புதிராகவே உள்ளது. இந்த புதிருக்கு மேலும் வலு சேர்ப்பது போல இரட்டை நட்சத்திரங்கள் உள்ளன.