பூமியின் புவியீர்ப்பு விசையைக் காட்டிலும் சந்திரனின் ஈர்ப்புவிசை ஆறுமடங்கு குறைவு. பூமியில் ஈர்ப்பு விசை இருப்பதால்தான் அந்த விசை காற்று மண்டலத்தை இழுத்துப் பிடித்து வைத்து இருக்கிறது. அத்தகைய விசை சந்திரனுக்கு இல்லாததால் அங்கே காற்று இல்லை.
சந்திரனோடு ஒப்பிடும்போது செவ்வாயின் ஈர்ப்புவிசை கொஞ்சம் பரவாயில்லை. பூமியின் ஈர்ப்பு விசையின் பாதியளவு உள்ளது. இதன் காரணமாக அங்கே கொஞ்சம் காற்று உள்ளது. எனவேதான் அங்கு உயிர்கள் வாய்ப்பிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
வியாழன் கிரகத்தின் ஈர்ப்பு விசை பூமியைக் காட்டிலும் 350 மடங்கு அதிகம். இந்த ஈர்ப்பு விசைக்கு உட்பட்டு நாள்தோறும் விண்கற்கள் வியாழனில் விழுந்து கொண்டேயிருக்கின்றன. வால் நட்சத்திரங்களும் அடிக்கடி வந்து மோதுவது உண்டு. இந்த அபாயகரமான ஈர்ப்பு விசையால் வியாழனில் மனிதன் உயிர் வாழ இயலாது.