விக்கிலீக்ஸ் இணையதளம் அமெரிக்காவின் உண்மை முகத்தை வெளிக்கொண்டு வந்துள்ளதாக ரஷ்ய அதிபர் மெக்ததேவ் தெரிவித்துள்ளார்.
மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் பேசியபோது இதனை அவர் தெரிவித்துள்ளார்.
விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ள தகவல்களால் ரஷ்யா- இங்கிலாந்து இடையிலான உறவுகள் பாதிக்கப்படாது என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
முன்னதாக ரஷ்யாவை மாபியா கும்பலின் ஆதிக்கம் நிறைந்த நாடாக மாற்றிய பெருமை மெக்தேவையே சேரும் என்று அமெரிக்க தூதர் மாஸ்கோவில் இருந்து வாஷிங்டனுக்கு அனுப்பிய தகவல் விக்கிலீக்ஸில் வெளியானது குறிப்பிடத்தக்கது.