அண்ணளவாக 250,000 மக்கள் ஒரே இடத்தில் கூடியது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. 80,000 பேர் பங்கு கொண்ட சிறப்பான புத்தாண்டு நிகழ்ச்சிக்கு எடின்பர்க்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
லண்டனில் இதுவரை கண்டிராத அளவிற்கு பல வித கண்ணைக்கவரும் வான வேடிக்கைகளும் நேற்றிரவு நடைபெற்றன. பிரிட்டனின் பல பகுதிகளிலிருந்தும் இந்த வான வேடிக்கைகளை காண இளைஞர்கள் பெருமளவில் லண்டன் வீதிகளில் குவிந்தனர்.
குடும்பத்துடன் வான வேடிக்கைகளை காண லண்டனில் குழுமிய மக்கள் இந்த வருடம் இடம்பெற்ற பிரமாண்ட வான வேடிக்கைகளை கண்டு மெய்சிலிர்த்து நின்றனர். குற்றங்களை தடுக்க 3000 போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
பல ஆயிரம் மக்கள் குவிந்த போதும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில சிறிய அளவிலான குற்ற சம்பவங்கள் மட்டுமே நடைபெற்றதாக காவல்துறை அதிகாரிகள் கூறினர்.
பல ஆயிரம் மக்கள் குவிந்த போதும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில சிறிய அளவிலான குற்ற சம்பவங்கள் மட்டுமே நடைபெற்றதாக காவல்துறை அதிகாரிகள் கூறினர்.