பிப்ரவரி 14-ம் தேதி தெற்கு சூடான் தனி நாடு உதயம்.
ஆப்ரிக்க நாடன சூடான் இரண்டாக பிரிக்கப்படுவது குறித்த மக்கள் வாக்கெடுப்பு முடிவுகள் பிப்ரவரி 7-ம் தேதி வெளியிடப்படவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் கடந்த 20 ஆண்டுகளாக நடந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த பின் கடந்த 2005-ம் ஆண்டு ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தின் படி சூடானைவ தெற்கு, வடக்கு என இரண்டாக பிரிக்க முடிவு செய்யப்பட்டது.
பின்னர் நிகழ்ந்த பல்வேறு அரசியல் மாற்றங்களுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. முன்னதாக சூடானை இரண்டாக பிரிக்கலாமா, வேண்டாமா என ஓட்டெடுப்பு நடந்தது.
இதில் பெரும்பாலான மக்கள் சூடானை பிரிக்க ஆதரவு தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து தெற்கு சூடான் மக்கள் வாக்கெடுப்பு கமிஷன் (எஸ்.எஸ்.ஆர்.சி) அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் கடந்த ஜனவரி மாதம் ஓட்டெடுப்பு நடத்தியது. மொத்தம் 99 சதவீதம் வாக்கெடுப்பு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் எஸ்.எஸ்.ஆர்.சி. யின் தலைவர் முகமது இப்ராஹிம் கஹாகிலி , கஹார்டூம் நகரில் செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறியதாவது: வாக்கெடுப்பு முடிவுகள் பிப். 7-ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவுள்ளன.
முன்னதாக அதிபர் ஒமர் பஷீர் சூடானை இரண்டாக பிரிக்கும் வாக்கெடுப்பிற்கு ஓப்புதல் அளித்தார். இதன்படி தெற்கு சூடானின் தலைநகரமாக கஹார்டூம் , வடக்கு சூடானின் தலைநகரமாக ஜூபாவும் முறையாக அறிவிக்கப்படும்.
இதனைத்தொடர்ந்து பிப்ரவரி 14-ம் தேதி இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டு அன்று ம முதல் தெற்கு சூடான் என்ற சுதந்திர நாடு உதயமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

ஈராக்கில் பயங்கரம்: இறுதி சடங்கில் கார் குண்டு தாக்குதல்; 48 பேர் பலி.
ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் வாபஸ் ஆக உள்ளன. இந்த நிலையில் அங்கு தற்போது குண்டு வெடிப்பு சம்பவங்கள் மற்றும் தற்கொலை தாக்குதல்கள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நடந்த 4 குண்டு வெடிப்பு சம்பவங்களில் 200 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக இத்தாக்குதல்கள் “ஷியாட்” பிரிவினர் வாழும் பகுதியில் தான் அதிகம் நடை பெறுகிறது.
சமீபத்தில் பாக்தாத் நகரில் “ஷியாட்” பிரிவினர் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் பலியானவர்களுக்கு நேற்று இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
அப்போது இறுதி சடங்கு நடந்து கொண்டிருந்த இடத்தில் தீவிரவாதிகள் கார்குண்டு தாக்குதல் நடத்தினார்கள். இதனால் அப்பகுதி முழுவதும் கரும் புகையுடன் தீப்பிடித்து எரிந்தது. இச்சம்பவத்தில் 48 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். சமீபத்தில் நடைபெறும் வன்முறை சம்பவங்கள் பிரதமர் நூரி அல்-மாலிகி கூட்டணி அரசுக்கு எதிராக நடைபெறுவதாக கருதப்படுகிறது.
இதற்கிடையே ஈராக்கில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய அரபு நாடுகள் முடிவு செய்துள்ளன. இது குறித்த மாநாடு வருகிற மார்ச் மாதம் நடைபெற உள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த தீவிரவாதிகள் அதை குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன் எதிரொலியாக தான் இது போன்ற தாக்குதல்கள் நடை பெறுகின்றன என பாக்தாத் மாகாண கவுன்சில் தலைவர் சுமில் நசீர் அல்-சாய்தி தெரிவித்துள்ளார்.