
ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை உடைய முதியவர்களுக்கு ஆயுள் அதிகம் என ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக எழுபது வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கம் அவர்களது ஆயுட் காலத்தை நீடிப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
கொழுப்பு சத்துடைய உணவுப் பொருட்களை அதிகமாக உட்கொள்வதனால் அதிக உயிராபத்து ஏற்படக் கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மரக்கறி வகைகள் மற்றும் பழங்களை உட்கொள்ளும் நபர்களின் ஆயுட்காலம் பத்து ஆண்டுகள் வரையில் நீட்டிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மரக்கறி வகைகள் மற்றும் பழங்களை உட்கொள்ளும் நபர்களின் ஆயுட்காலம் பத்து ஆண்டுகள் வரையில் நீட்டிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2500 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த விடயம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஐஸ் கிறீம், முட்டை, இறைச்சி வகைகள், பால், சீஸ் போன்ற உணவுப் பொருட்களை உட்கொள்வோர் விரைவில் உயிரிழக்கக் கூடிய அபாயத்தை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.