Saturday, January 22, 2011

பட்டர் சிக்கன் மற்றும் தந்தூரிகளாக உருமாறும் செத்த கோழிகள்



டெல்லியில் செத்த கோழிகளை வாங்கி பிளாட்பார கடைகள் உணவு தயாரிக்கின்றனர் என தகவல் வெளிவந்துள்ளது. இது அனைவரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அசைவ பிரியர்கள் சூடு பறக்க சிக்கன் சூப், சில்லி சிக்கன் என விதவிதமாக பிளாட்பார கடைகளில் வாங்கி உண்பார்கள். டெல்லியிலும் தெருவோர கடைகளில் அசைவ உணவுகளின் விற்பனை மிகவும் அமோகமாக இருக்கும்.
டெல்லியில் உள்ள பகர்கஞ்ச் மார்க்கெட் பகுதியில், 3 கிலோ எடையுள்ள உயிர்கோழி ரூ.420 மற்றும் அதற்கு மேல் விற்கப்படுகிறது. இதற்காக, இரவு முழுவதும் ஏராளமான லாரிகளிலிருந்து, பிராய்லர் கோழிகள் இறக்கப்படும்.
போக்குவரத்தின் போது, ஒவ்வொரு லாரிகளிலும் இருந்து சராசரியாக 15 முதல் 20 கோழிகள் வரை உயிர் இழக்கின்றது. இந்த கோழிகள் குப்பையில் எறியப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கோழிகளை கிலோ ரூ.15 வீதம், 3கிலோ எடையுள்ள கோழிகளை ரூ.50க்கு வாங்குவதற்கு மார்க்கெட்டில் ஒரு கூட்டமே காத்திருக்கிறது. இவர்கள் எல்லாரும் பகர்கஞ்ச், கரோல் பாக் பகுதிகளில் ஓட்டல், தெருவோர கடைகள் நடத்துபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
லாரி டிரைவர்கள், கிளீனர்களிடம் செத்த கோழிகளை இவர்கள் பேரம் பேசி வாங்குவதை தினமும் அதிகாலையில் பார்க்கலாம்.
இது குறித்து ஓட்டல் வியாபாரி ஒருவர் கூறுகையில், “உணவு பொருட்கள் விலை அதிகரித்து கொண்டே போகிறது. அதற்கு ஏற்றாற்போல் நாங்கள் விலையை ஏற்றினால், வியாபாரம் படுத்துவிடும்".
ஒரு பிளேட் சிக்கன் 30 ரூபாய். கோழிக்கறியை கிலோ ரூ.140க்கு வாங்கி எப்படி வியாபாரம் முடியும். மலிவு விலைக்கு கோழிகளை வாங்கினால் மட்டுமே நல்ல முறையில் வியாபாரம் நடக்கும் என்று கூறினார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF