பிரிட்டனில் 20 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த வெப்ப வாயு பலூன் ஒன்று உடைந்து விழுந்ததனால் அதில் பயணம் செய்த ஆண்கள் இருவர் பலியாகியுள்ளனர்.
நேற்று சனிக்கிழமை நடைபெற்ற விபத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைள் நடைபெறுகின்றன. இவ்விபத்தில் வேறு வான்கலங்கள் எதுவும் சம்பந்தப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனின் சமர்செட் பிராந்தியத்தில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. அனர்த்தம் ஏற்பட்ட வேளையில் அந்த பலூனை 20,000 அடி (6096 மீற்றர்) உயரத்திற்கு கொண்டு செல்ல அதில் பயணம் செய்த இருவரும் முயற்சித்ததாக கருதப்படுகிறது.
பலூன் வானிலிருந்து கீழே விழுவதை கண்ட பலர் கோளாறுக்குள்ளான விமானம் விழுவதைப் போல் சத்தம் கேட்டதாக தெரிவித்துள்ளனர்.
கடமையில் இல்லாத தீயணைப்பு வீரர்கள் இருவர் சைக்கிள் மூலம் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். எனினும் பலூனிலிருந்த எரிவாயு தீப்பற்றியதால் மீட்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
கடமையில் இல்லாத தீயணைப்பு வீரர்கள் இருவர் சைக்கிள் மூலம் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். எனினும் பலூனிலிருந்த எரிவாயு தீப்பற்றியதால் மீட்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
அதையடுத்து நான்கு தீயணைப்பு இயந்திரங்கள் அங்கு அனுப்பப்பட்டன. எனினும் பலூன் பயணிகள் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.