Saturday, January 15, 2011
கொழும்பின் வெப்பநிலை: 61 வருடங்களின் பின் 18.8 பாகை செல்சியஸாக பதிவு
கொழும்பு மாவட்டத்தின் வெப்பநிலை இன்று 18.8 பாகை செல்சியஸாக பதிவாகியதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது. இது சுமார் 61 வருடங்களின் பின்னர் பதிவாகிய ஆகக்குறைந்த வெப்பநிலையாகும்.
இவ்வெப்பநிலை இன்றைய தினம் முழுவதும் தொடரும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை நுவரெலிய மாவட்டத்தின் வெப்பநிலை 7.9 பாகை செல்சியஸாகவும், மட்டக்களப்பு மாவட்டத்தின் வெப்பநிலை 16.9 பாகை செல்சியஸாகவும் பதிவாகியதாகவும் அந் நிலையம் தெரிவிக்கின்றது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF