2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இலங்கைக் கிறிக்கெற் அணி மீது தீவிரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டமை நாம் அறிந்ததே.
இத்தாக்குதலில் ஈடுபட்ட பாக்.தீவிரவாதிகளில் ஒருவர் Ahmad Faraz .
இவர் கைது செய்யப்பட்டு விட்டார்.
இவர் அந்நாட்டு தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு அண்மையில் வழங்கிய பேட்டியில் பாரிய அதிர்ச்சித் தகவல் ஒன்று கிடைத்து உள்ளது.
என்ன தகவல் தெரியுமா?
இலங்கைக் கிறிக்கெற் அணியினரை பணயக் கைதிகளாக பிடிக்க இருந்தனராம்.
LeJ என்கிற தீவிரவாத கும்பல்தான் இத்திட்டத்தை தீட்டி இருக்கின்றது.
இத்தீவிரவாத கும்பல் அல்-குவைதா, தாலிபான் போன்ற தீவிரவாத அமைப்புக்களுடன் தொடர்பு உடையது.
இத்தீவிரவாத கும்பலைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலர் பாகிஸ்தானில் சிறை வைக்கப்பட்டு உள்ளனர்.
இலங்கை கிறிக்கெற் அணியினரை உயிருடன் பிடித்து பணய கைதிகள் ஆக்கி பாகிஸ்தான் அரசுடன் பேரம் பேசி சிறையில் இருக்கும் சகாக்களை விடுவிக்கின்றமையே உண்மையான திட்டமாக இருந்திருக்கின்றது.
இத்தாக்குதல் இலங்கைக் கிறிக்கெற் அணி வீரர்கள் மயிரிழையில் உயிர் தப்பி இருந்தனர்.