பறவைக் காய்ச்சல் அச்சம் காரணமாக 410,000 கோழிகளை கொல்வதற்கு யப்பானிய அரசு தீர்மானித்து உள்ளது.
மேற்கு மியாசாக்கி நகரத்தில் உள்ள பெரிய பண்ணை ஒன்றில் வளர்க்கப்படும் கோழிகளே இவ்வாறு கொல்லப்பட இருக்கின்றன.
இங்கு வளர்க்கப்படுகின்ற கோழிகளில் 20 ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென உயிர் இழந்த நிலையில் மீட்கப்பட்டன.
எனவே பறவைக் காய்ச்சல் தொற்றை தடுப்பதற்காக பண்ணையில் கோழிகள் முழுவதும் கொல்லப்பட உள்ளன.
.