Thursday, January 27, 2011

எகிப்து அதிபரை எதிர்த்து போராட்டம்: மகன் பிரிட்டனில் தஞ்சம்


எகிப்து நாட்டில் 30 ஆண்டுகளாக அதிபராக  இருந்து வரும் முபாரக், சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார். எகிப்தில் விலைவாசி உயர்வு அதிகமாக உள்ளது. வேலையில்லா திண்டாட்டம் தலை விரித்தாடுகிறது.
இதனால் அதிபர் மீது கடும் அதிருப்தி நிலவுகிறது. அவர்கள் இப்போது அதிபருக்கு எதிராக தெருவில் இறங்கி போராடி வருகின்றனர். எகிப்தின் பக்கத்து நாடான துனுசியாவில் அந்த நாட்டு அதிபருக்கு எதிராக நடந்த போராட்டத்தால் அதிபரே நாட்டை விட்டு ஓடி விட்டார். அங்கு நடந்த சம்பவம் எகிப்து மக்கள் மனதிலும் எதிரொலித்து இருக்கிறது.
எனவே துனிசியா அதிபரை போல எகிப்து அதிபரையும் பதவியை விட்டு விலக வைக்க வேண்டும் என தீவிர போராட்டத்தில் குதித்துள்ளனர். தலைநகரம் கெய்ரோ, சூயஸ் மச்சாலா, அலெக்சான் டிரியா உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் கலவரம் வெடித்துள்ளது.
சூயஸ் நகரில் அருங்காட்சி அலுவலகம் மற்றும் அரசு கட்டிடங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. கலவரத்தை ஒடுக்க போலீசார் பல இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். 19 பேர் காயம் அடைந்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இது வரை 700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கலவரம் தீவிரமடைந்திருப்பதைத் தொடர்ந்து அதிபரின் அரசியல் வாரிசாகக் கருதப்படும் அவரது மகன் காமல் முபாரக், மனைவி, மகளுடன் பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ளார். போராட்டம் தீவிரம் அடைந்ததால் அதிபர் முபாரக் பதவியை இழக்க வேண்டியது வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF