
அபுதாபியில் இருந்து மும்பைக்கு ஏர் இந்தியா விமானம் வந்தது. அந்த விமானத்தில் விலை உயர்ந்த பொருட்களை கடத்தி வருவதாக வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. உடனே அதிகாரிகள் அந்த விமானத்துக்கு சென்று சோதனை நடத்தினார்கள்.
விமானத்தில் கழிவறையில் மறைவான இடத்தில் ஒரு பை கிடந்தது. அதை எடுத்து பார்த்தனர். உள்ளே வைரங்கள் பதித்த 20 கடிகாரங்கள், மற்றும் 6 விலை உயர்ந்த கடிகா ரங்களும் கிடந்தன. வைரம் பதித்த கடிகாரத்தில் விலை தலா ரூ.15 லட்சம். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.3 கோடி இவற்றை யார் கடத்தி வந்தார்கள் என்று தெரிய வில்லை.
இதில் விமானத்தை சுத்தப்படுத்தும் ஊழியர் களுக்கு தொடர்பு இருக்கலாம் என கருதப்படுகிறது. கடத்தல்காரர்கள் கழி வறைக்குள் வைத்த கடி காரங்கள் விமானத்தை சுத்தப்படுத்தும் ஊழியர்கள் வெளியே எடுத்து வந்து கடத்தல்காரர்களிடம் ஒப்ப டைக்க அவர்களுக்குள் ரகசிய ஒப்பந்தம் இருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே விமானங்கள் பராமரிக்கும் நிறுவனம் மற் றும் ஊழியர்களிடம் விசா ரணை நடந்து வருகிறது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF