Wednesday, January 12, 2011

சவூதியில் பணிப்பெண்ணை கொடூரமாக தாக்கிய எஜமானிக்கு 3 வருட சிறை


தனது வீட்டில் பணிப் பெண்ணாக கடமையாற்றிய இந்தோனேசிய பெண்ணொருவரை மோசமாக தாக்கி, சூடுவைத்த சவூதி நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு மதீனா நகர நீதிமன்றம் 3 வருட காலம் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

தாக்குதலுக்குள்ளான சுமிஹாடி பிண்டி சாலான் முஸ்தபா (23) என்ற அப்பெண் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார். இவரது தலையில் மின் அழுத்தியினால் ஏற்படுத்தப்பட்ட எரி காயங்கள் காணப்படுவதுடன் உதடுகளும் கத்தரிக்கோலினால் வெட்டப்பட்டுள்ளன. 

மேற்படி பெண்மணியின் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியதைத் தொடர்ந்து இந்தோனேசிய ஜனாதிபதி சுசீலோ மாம்பாங் தனது நாட்டு பிரஜைக்கு உடனடியாக நீதி வேண்டும் என கோரியிருந்தார். 

இந்நிலையில் கடந்தவாரம் இப்பெண்ணின் எஜமானிக்கு 3 வருட சிறைத்தண்டனை வழங்கி மெதீனா நீதி மன்றம் தீர்ப்பளித்தது. இவ்விடயம் தொடர்பில் சவூதி அரசாங்கம் மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்திருந்தது. 

எனினும் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள மனித உரிமை அமைப்புக்கள் சவூதி மற்றும் மத்தியகிழக்கு நாடுகளில் பணிபுரியும் பல பெண்கள் இத்தகைய இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளன.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF