Sunday, January 30, 2011

இன்றய செய்திகள் 30/01/2011

நம்பவே முடியாத கண்கட்டு வித்தை !
மேஜிக் என்று சொல்லப்படும் மாயாஜாலம் அல்லது கண்கட்டு வித்தைகள் பல விதம். இதில் பலர் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள்.

சிலர் ஏற்கனவே செய்துவைத்த பொருட்களை எடுத்து அதில் வித்தைகளைச் செய்துகாட்டுவது வழக்கம். ஆனால் இங்கே அரங்கத்தில் எல்லோரும் பார்கும் போதே வினோதமான கண்கட்டு வித்தை ஒன்று செய்துகாண்பிக்கப்பட்டுள்ளது இதனைப் பார்த்த அனைவரும் கதிகலங்கி வியப்பில் ஆழ்ந்துபோனார்கள்.




மாடியில் வசிப்பவர்களை துரத்த புதிய உத்தி!
ஆர்ஜென்டீனா நாட்டில் Martillo என்று ஒரு குட்டித் தீவு உண்டு.
இதை பென்குயின்களின் தீவு என்றும் அழைக்க முடியும்.

இத்தீவு முழுவதும் பென்குயின்கள் நிறைந்து காணப்படுகின்றன.
இதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளை இத்தீவு பெரிதும் ஈர்க்கின்றது.






2014- ல் சாக்லேட் பற்றாக்குறை ஏற்படும்.



ஐவரி கோஸ்ட் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கல்களால், கோகோ பீன்ஸ் விளைச்சல் பாதியாக குறைந்துள்ளது. இதனால் 2014- ல் உலகில் சாக்லேட் பற்றாக்குறை ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை சாக்லேட்டை விரும்பாதவர்கள் எவரும் இல்லை. சாக்லேட் தயாரிக்க முக்கியமான பொருள் கோகோ. கோகோ பீன்ஸில் இருந்து தயாரிக்கப்படும் கோகோ தான் சாக்லேட்டின் இன்றியமையாத மூலதனப் பொருள்.
உலகளவில் விளைவிக்கப்படும் கோகோ பீன்ஸில் பாதி ஐவரி கோஸ்ட் நாட்டில் இருந்து தான் பெறப்படுகிறது. தற்பொழுது அந்நாட்டு அரசியலில் சிக்கல்கள் உள்ளன. இதனால் விவசாயிகள் கோகோ பீன்ஸ் தயாரிப்பை பாதியளவாக குறைத்துள்ளன.
பலர் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டனர். விளைவிக்கப்படும் சிறிதளவு கோகோவையும் கானா நாட்டிற்கு கொண்டு சென்று அதிக விலைக்கு விற்கின்றனர். சர்வதேச நாடுகளுக்கு கோகோ பீன்ஸை ஏற்றுமதி செய்ய அந்நாட்டு அதிபர் அலஸ்சேன் குவட்டாரா தடை விதித்துள்ளார்.
இதன் எதிரொலியாக நடப்பு மாதத்தில் மட்டும் கோகோ விலை 10 சதவீதம் அதிகரித்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க டிரக் வண்டியில் 6 இலங்கை அகதிகள் கண்டுபிடிப்பு.
டிரக் வண்டியில் சிக்கியிருந்த நிலையில் 219 அகதிகள் மெக்சிகோ அதிகாரிகளினால் காப்பாற்றப்பட்டனர். இவ்வாறு காப்பாற்றப்பட்டவர்களில் 6 இலங்கை அகதிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காப்பாற்றப்பட்டவர்களில் மேலும் நான்கு பேர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், ஏனையவர்கள் மத்திய அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 33 பெண்களும், குழந்தைகள் 9 பேரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
டிரக் வண்டியை சோதனை செய்ய சாப்பஸ் பொலிஸார் முயற்சித்த நிலையில் டிரக் வண்டியின் சாரதி மற்றும் நடத்துனர் பொலிஸாருக்கு லஞ்சம் வழங்க முன்வந்துள்ளனர். சோதனையிடுவதற்கு டிரக் வண்டியை பொலிஸார் நிறுத்துமாறு சமிக்ஞை செய்தபோது சாரதி டிரக் வண்டியை நிறுத்தாது சென்றுள்ளார்.
பின்னர் பொலிஸார் லொறியை மடக்கிப் பிடித்துள்ளனர். குறித்த லொறியிலிருந்து காப்பாற்றப்பட்ட அகதிகள் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

செல்போன் அதிகம் பயன்படுத்தினால் மூளை கேன்சர்: உலக சுகாதார மையம் எச்சரிக்கை.
செல்போன் அதிகளவில் பயன்படுத்தினால் அதிலிருந்து வரும் கதிரியக்கத்தால் மூளை புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார மையம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
உலக சுகாதார மையம்(WHO) நடத்திய ஆய்வில் தினமும் அரைமணிநேரம் ‌மொபைல் போன் பயன்படுத்துபவர்களுக்கு நோய் பாதிக்கும் தன்மை 3 மடங்கு அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதிகளவில் பயன்படுத்துவோருக்கு இந்த பாதிப்பு அதிகளவில் இருக்கும் எனவும், அவர்களுக்கு மூளை கட்டி உருவாகும் வாய்ப்பு அதிகம் எனவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் 13 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 5000 பேர் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. இளம் வயதினர் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரத்திற்கு அதிகமாக மொபைல் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.
அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு மூளை கட்டி இருப்பது தெரியவந்துள்ளது. மற்றவர்களுக்கு நரம்பு கோளாறு ஏற்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

64.8 மில்லியன் வயது உடைய டைனோசரின் எலும்புகளின் எச்சங்களை கண்டு பிடித்து கனடா சாதனை! 

64.8 மில்லியன் வயது உடைய டைனோசர் ஒன்றின் உடைய எலும்புகளின் எச்சங்கள் கனடாவின் Alberta பல்கலைக்கழகத்தினர் நடத்திய ஆய்வு ஒன்றின் மூலம் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளன. இந்த டைனோசர் சுமார்    700, 000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து இருக்கின்றது. டைனோசர்கள் தாவர உண்ணிகள். டைனோசர்கள் காலநிலை மாற்றங்கள் காரணமாக முற்றாக அழிந்து விட்டன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF