Monday, January 17, 2011

உலகின் அதி வேகமான மின்சாரக் கார்! அவுஸ்திரேலிய மாணவர்கள் சாதனை (


அவுஸ்திரேலியாவின் சிட்னி நகர நியுசவுத் வேல்ஸ் பல்கலைக்கழக மாணவர்கள் மோட்டார் வாகனமொன்றை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். 

அங்குள்ள மின்சாரக் கார் உற்பத்தி நிறுவனமொன்றுடன் சேர்ந்து பல்கலைக்கழக மாணவர்கள் உலகின் மிக வேகமான மின்சாரக் காரை உருவாக்கியுள்ளனர். 

இது மணிக்கு 54 மைல் வேகத்தில் பயணம் செய்யக்கூடியது. கடந்த 23 வருடங்களாக மின்சாரக் கார்களில் காணப்பட்ட வேக சாதனை இதன் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது. 

175, 000 பவுண் செலவில் இந்தக் கார் உருவாக்கப் பட்டுள்ளது. தொழிற்சார் மோட்டார் கார் ஓட்ட வீரர்களான பார்டன் மேவர், மற்றும் கிரய்க் டேவிஸ் ஆகியோர் இந்தக் காரின் வெள்ளோட்டத்தில் பங்கேற்று அதன் வேகத்தை நிரூபித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் நியுசவுத் வேல்ஸ் விமானப் படைத் தளத்தில் இந்த வெள்ளோட்டம் இடம்பெற்றது.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF