Saturday, January 29, 2011

இன்றய செய்திகள் 29/01/2011

பிரித்தானியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கையில் அபார வளர்ச்சி.
A Kashmiri girl faces the crowd of women play as thousands attend the Eid-Al-Fitr prayer on October 1, 2008 in Srinagar, Kashmir in India. Today marks the first day of a three day holiday signaling the end of Ramadan, Islam's holiest month.
பிரித்தானியாவில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை எதிர்வரும் 20 வருடங்களில் இரு மடங்காக அதிகரிக்கும் என ஆய்வறிக்கையொன்று தெரிவிக்கின்றது.

முஸ்லிம்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 5.5 மில்லியன்களாகக் காணப்படும் எனவும் இத்தொகையானது குவைத்தில் உள்ள முஸ்லிம்களின் தொகையை விட அதிகம் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகப்படியான இடம்பெயர்வுகளே இதற்கான காரணமாக இருக்குமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை குறித்த காலப்பகுதியில் அமெரிக்காவில் உள்ள பிரித்தானியர்களின் எண்ணிக்கை சுமார் 6.2 மில்லியனாக இருக்கலாம் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையின்படி பிரித்தானியாவில் குடியேறும் 4 பேரில் ஒருவர் முஸ்லிம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2030 ஆம் ஆண்டளவில் உலகின் மொத்த சனத்தொகையில் 26 % முஸ்லிம்களாக காணப்படுவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.



அவுஸ்திரேலிய தொழிற்சாலையொன்றில் பாரிய வெடிப்பு.

அவுஸ்திரேலியாவில் சிட்னி நகரில் உள்ள வர்ணப்பூச்சுக்களை தயாரிக்கும் தொழிற்சாலையொன்றில் பாரிய வெடிப்புச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

இதனால் ஏற்பட்ட தீயினால் அப்பிரதேசம் முழுவதும் கரும்புகையினால் சூழப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தொழிற்சாலையில் 20,000 லீற்றர் இரசாயன திரவியங்கள் கையிருப்பில் இருந்ததாகவும் இவையே வெடித்து தீப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இத்தீயை கட்டுப்படுத்த சுமார் 6 தீயணைப்பு படைகள் கடுமையாக போராடி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.




எகிப்து அதிபருக்கு எதிரான போராட்டம்: அமைச்சரவை கலைப்பு.

எகிப்தில் இடம்பெற்றுவரும் மக்கள் ஆர்ப்பாட்டத்தினால், அந்நாட்டு அதிபர் ஹொஸ்னி முபாரக் தனது அரசாங்கத்தைக் கலைத்து புதிய அரசாங்கத்தை அமைக்கவுள்ளார்.
டூனிசியாவில் இடம்பெற்ற போராட்டங்களினால் அந்த நாட்டு அதிபர் பென் அலி பதவியை விட்டு விலகினார். அதன் எதிரொலியாக எகிப்திலும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் எகிப்தின் முக்கிய நகரங்களான கெய்ரோ, சூஸ், அலெக்ஸ்சாண்ட்ரியா ஆகிய நகரங்களில் இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சூஸ் நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 13 பேரும், கெய்ரோ நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 5 பேரும் உயிரிழந்தனர்.
இதேநேரம் அதிபர் ஹொஸ்னி முபாரக்கின் அரசியல் வாரிசாகக் கருதப்படும் அவரது மகன் காமல் முபாரக் மற்றும் அவரது குடும்பத்தினர் பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ளனர்.

30 ஆண்டுகளாக ஆட்சிசெய்து வரும் அதிபர் ஹொஸ்னி முபாரக்கின் அரசுக்கு எதிராக மக்கள் தீவிரமாக ஆர்ப்பாட்டம் செய்துவருகின்றனர். இதில் இளைஞர்கள் பேஸ்புக், டுவிட்டர் ஆகிய இணையத்தளங்கள் மூலமாக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

இதனால் குறிப்பிட்ட இணையத்தளங்களை அந்நாட்டு அரசு தடைசெய்துள்ளது. இதேநேரம் எகிப்தில் இடம்பெறும் ஆர்ப்பாட்டத்தை தடுக்குமாறு முபாரக் நிர்வாகத்துக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்கர்களையே ஆட்டிப்படைக்கும் பிரெஞ்ச் சிறுவன்.
விக்கிலீக்ஸ் தளத்திற்கு உதவி செய்யும் முகமாக அமெரிக்க இணையத்தளங்கள் சிலவற்றில் ஊடுருவல் செய்த குற்றத்திற்காக 15 வயது பிரெஞ்ச் சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
எந்தவிதமான குற்றச் செயல் பதிவுகளுமில்லாத இந்தச் சிறுவன் மாஸ்டர்கார்டு, வீசா, பேபால் போன்ற அமெரிக்க பணமாற்று தளங்களின் தரவுகளைத் திருடியுள்ளான்.
சமூக இணையத்தளங்களில் ஒரு குழுவாக இயங்கும் இவர்கள் தனிப்பட்ட சுதந்திரங்களைப் பாதுகாப்பதாகக் கூறி இத்தகைய பெருந்தளங்களுக்குள் ஊடுருவுகின்றனர். இப்படியான இலத்திரனியல் தகவற் திருட்டு பாரிய குற்றமாகக் கருதப்படுகின்றது. இதற்கு அடிப்படையில் 5 ஆண்டுகள் சிறையும் 75,000 யூரோக்கள் அபராதமாகவும் விதிக்கப்படும்.

ஆனால் ஒரு வயது குறைந்த சிறுவன், முன்பு எந்தவிதமான குற்றச் செயல்களும் புரியாத ஒரு சிறுவனைத் தண்டிப்பதற்குப் பொருத்தமான சட்டப்பிரிவுகள் இருப்பதாகத் தெரியவில்லை என அரசு தரப்பு வக்கீல் தெரிவித்தார். ஆவணப் பாதுகாப்பு மற்றும் இலத்திரனியல் குற்றத்தடுப்புப் பிரிவினர் இப்படியான செயல்கள் குறித்து மேலும் கவனமெடுக்கப் போவதாகக் கூறியுள்ளது.

இவர்கள் தமது அதியுச்ச கணினியியல் அறிவைப் பயன்படுத்தி பல நூற்றுக்கணக்கான கணினிகளை வலைய அமைப்பில் இணைத்து ஒரே நேரத்தில் பல லட்சம் தகவல் கேள்விகளை ஒரு தளத்திற்கு அனுப்பி அதன் தகவல் மையத்தைத் தாக்கி அந்தத் தளத்தை முடக்கி வைக்கவும், தகவல் வங்கியிலுள்ள கோப்புகளை அழிக்க அல்லது தரவிறக்கம் செய்யவும் இவர்களால் முடிகின்றது.

ஆனாலும் அந்தச் சிறுவனின் வழக்கில் இவன் பல அமரிக்கத் தளங்களில் ஊடுருவியிருப்பினும் இது எந்தக் குற்றவியல் நோக்கங்களுக்காகவும் செய்யப்படவில்லை எனவும், இவன் தன்னால் என்ன முடியும் என்ற ஆர்வத்தில் மட்டுமே இதைச் செய்துள்ளான் எனவும் விக்கிலீக்ஸ் இணையத்திற்கு ஆதரவு வழங்கும் நோக்கில் விக்கிலீக்ஸிற்கு உதவமறுத்த மாஸ்டர்கார்டு, வீசா, பேபால் போன்ற அமெரிக்க பணமாற்று தளங்களின் மீதே இவன் தாக்குதல் நடாத்தியுள்ளதாகவும் அரச தரப்பு வக்கீல் தெரிவித்துள்ளார்.

வடகொரியாவுக்கான நிபந்தனையை கைவிட்டது தென்கொரியா.
பேச்சுவார்த்தை துவங்க வேண்டுமானால், நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் இயான்பியாங் தீவு மீதான தாக்குதல்களுக்கு வடகொரியா மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற நிபந்தனையை, தென்கொரியா கைவிட்டது.
இயான்பியாங் தீவு மீதான தாக்குதலுக்குப் பின், வடகொரியா பேச்சுவார்த்தைக்கு முன்வந்தது. முதலில் இதை ஏற்க மறுத்த தென்கொரியா பின் சம்மதித்தது. முதல்கட்டமாக இருதரப்புக்கும் இடையே ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை, பிப்ரவரி 11ல் நடக்க உள்ளது.
அதேநேரத்தில், இருநாட்டு பார்லிமென்ட் உறுப்பினர்களும் ஒன்று கூடி, இருதரப்பு பிரச்னைகள் குறித்து பேசலாம் என்ற வடகொரியாவின் அடுத்த கட்ட அழைப்புக்கு தென்கொரியா பதிலளிக்கவில்லை. இதற்கிடையில், தென் கொரிய தலைநகர் சியோலில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகையில், "நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் இயான்பியாங் தீவு மீதான தாக்குதல் குறித்து வடகொரியா மன்னிப்புக் கேட்க வேண்டும்".
மன்னிப்பு கேட்டால் தான் அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைகள் துவக்கப்படும் என, தென்கொரிய அரசு வட்டாரங்கள் கூறியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த நிபந்தனையை தற்போது தென்கொரியா வாபஸ் பெற்றுள்ளது.



பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF