
மாடிக் கட்டிடத்தில் அமைந்துள்ள இரண்டாவது மாடியிலுள்ள தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 18 மாதக் குழந்தை வீட்டு ஜன்னலில் ஏற முற்பட்டபோது இடறி 20 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தது.
இருந்தாலும் வெட்டுக்காயங்கள் மற்றும் கீறல் காயங்களுடன் குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பியது.
லண்டனின் வட பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குழந்தை விழுந்ததும் 37 வயதான தந்தை சிறிஸ் மற்றும் 35 வயதான தாய் கெலி ஆகியோர் பதறிப் போய்விட்டனர்.
ஆனால் குழந்தையின் தாடை எலும்பு மற்றும் மூக்குப் பகுதியில் முறிவும், இன்னும் சில கீறல் காயங்களுமே ஏற்பட்டுள்ளதாகவும், ஆபத்து ஏதும் இல்லையென்றும் வைத்திய அதிகாரிகள் கூறிய பின்புதான் அவர்கள் ஆறுதலடைந்தனர்.
குழந்தையை விட்டு சற்று தூரம் தான் தள்ளிச் சென்ற வேளையில் நொடிப்பொழுதில் இந்தச் சம்பவம் இடம் பெற்றதாக தாய் கூறினார.
படுக்கையறையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கட்டிலின் மேலே ஏறி ஜன்னல் வழியாக வெளியே பாய்ந்துள்ளது.

