Saturday, January 22, 2011

ஐரோப்பாவில் மிக மோசமான படுகொலை: 16 வருடங்களின் பின்னர் சந்தேகநபர் கைது


பொஸ்னியாவில் 1995 ஆம் ஆண்டுப் பகுதியில் சுமார் 8,000 முஸ்லிம்களின் கொலையுடன் சம்பந்தப்பட்டவராக கருதப்படும் முன்னாள் பொஸ்னிய சேர்பிய இராணுவ வீரர் ஒருவர் இஸ்ரேலில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அலெக்ஸாண்டர் வெட்கோவிச் என்ற அந் நபரை தமது நாட்டுக்கு நாடுகடத்தும் படி பொஸ்னியா கேட்டுக்கொண்டுள்ளது.
பொஸ்னிய நகரான ஸ்ரெப்ரெனிகாவில் 1995 ஆம் ஆண்டு நடைபெற்ற இனஒழிப்பு நடவடிக்கையில் இவர் நேரடியாக தொடர்புபட்டிருந்ததாகவும் பல முஸ்லிம் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் கொலைக்கு காரணமாக இருந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவர் குறித்த காலப்பகுதியில் 8 பேரைக் கொண்ட படையணியில் இவர் ஒருவராக இருந்துள்ளார்.
மேற்படி சம்பவமானது இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் ஐரோப்பாவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மிக மோசமான அழிவாகக் கருதப்படுகின்றது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF