Friday, January 14, 2011

6,100 ஆண்டுகளுக்கு முந்தைய ஒயின் தயாரிக்கும் தொழிற்சாலை


அர்மேனியா நாட்டின் மலை குகையில் 6,100 ஆண்டுகளுக்கு முந்தைய ஒயின் தயாரிக்கும் தொழிற்சாலை கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கலிபோர்னியா பல்கலைக்கழத்தை சேர்ந்த கிரிகோரி அர்ஷியன் என்பவர் தொல்பொருள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். இவர் அர்மேனியா நாட்டின் மலைகளில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது மலை குகை ஒன்றில் 6,100 ஆண்டுகளுக்கு முந்தைய ஒயின் தயாரிக்கும் தொழிற்சாலை இருப்பதை கண்டுபிடித்தார். அங்கு திராட்சை கூழாக்க பயன்படுத்திய பள்ளம், புளிக்க வைக்கும் ஜாடிகள், குடிக்க பயன்படுத்தும் கப் மற்றும் கிண்ணங்கள் இருந்தன. இங்கு 3 அடி நீள குழிவான பள்ளம், ஒரு பெரிய கொப்பரையுடன் இணைக்கப்பட்டிருந்தது. 

பள்ளத்தில் திராட்சை கொட்டி காலால் மிதித்து, இதிலிருந்து வெளியேறும் சாறு கொப்பரையில் போய் சேர்ந்துள்ளது. பின்னர் இதை ஜாடிகளில் ஊற்றி புளிக்க செய்துள்ளனர். ‘பண்டைய காலத்தில் ஒயின் தயாரிப்பு தொழிற்சாலை இருந்ததற்கும், மக்கள் ஒயின் அருந்தியதற்கும் இது சரியான உதாரணம்’ என்று கிரிகோரி அர்ஷியன் கூறினார்.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF