ஆப்கானிஸ்தானின் தென் பகுதியில் கனடாவின் புதிய இராணுவ விமானங்கள் தரையிறங்கின. கனடாவின் புதிய ஹேர்கியுலஸ் C 130 J ரக விமானங்களே வார இறுதியில் கந்தஹார் விமானத்தளத்தை வந்தடைந்தன.
இதற்கு முன்னர் இந்தப்பகுதியில் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட சிறிய ரக மற்றும் 50 வருடத்துக்கு மேற்பட்ட பழைய விமானங்களை சேவையிலிருந்து நீக்கிவிட்டே இந்தப் புதிய விமானங்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள கனடா துருப்புக்களின் விநியோக சேவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன.
கனடாவின் இந்தப் பழைய விமானங்கள் அவற்றுக்கு உரிய சேவைக்காலத்தையும் மீறி மிகச் சிறந்த முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று ஆப்கானிஸ்தானில் உள்ள கனடா படைகளின் உயர் அதிகாரி மேஜர் பிறேட் வின்டரப் கூறினார்.
பழைய விமானங்களில் 92 பேர் மட்டுமே பயணம் செய்யலாம். புதிய விமானத்தில் 125 பேர் பயணம் செய்ய முடியும் என்றும் அவர் கூறினார். 1.4பில்லியன் டொலர் பெறுமதியான இத்தகைய17 விமானங்களை கனடா ஆடர் செய்துள்ளது.
அவற்றுள் ஐந்து விமானங்களை கனடா இதுவரைப் பெற்றுள்ளது. இவற்றுள் இரண்டு கந்தஹாருக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஏனையவை ரொறன்ரோவிலுள்ள விமானத்தளத்தில் வைக்கப்பட்டுள்ளன.
2012 முடிவுக்குள் எஞ்சிய விமானங்களும் கனடாவுக்குக் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த வகை விமானங்கள் ஏற்கனவே உள்ள நாடுகள் வரிசையில் அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் இடம்பிடிக்கின்றன.
கனடா இவ்வாண்டு இறுதியில் ஆப்கானிஸ்தானில் தனது பணிகளை முடிவுக்குக் கொண்டுவரவுள்ள நிலையிலேயே இவ்விரு புதிய விமானங்களும் சேவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF