ஹேக்கர்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர்களுக்குப் பலவித ஆசைகளைக் காட்டி, ஒரு குறிப்பிட்ட இணைய தளத்தை கிளிக் செய்திடத் தூண்டுகின்றனர். அந்த தளம் திறக்கப்பட்டவுடன், இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் உள்ள பிழைவழிகளைப் பயன்படுத்தி, மால்வேர் புரோகிராகள் அனுப்பப்படுவது இவர்களுக்கு எளிதாகிறது.
கம்ப்யூட்டர் தரும் மெமரியினைப் பிரவுசர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்றபடி செயல்படுத்துகையில், இந்த ஹேக்கர்களின் புரோகிராம் அதற்கான குறியீடுகளை அனுப்புகிறது. பின்னர் அவற்றின் மூலம் கம்ப்யூட்டரைக் கைப்பற்றுகிறது. இதற்கான நிரந்தர தீர்வு ஏற்படுத்த மைக்ரோசாப்ட் முயன்று வருகிறது.