Saturday, January 29, 2011

2011- ன் புத்தம் புதிய வரவுகள்!


ஆண்டுதோறும் ஒரு முறை, உலக அளவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கூடும் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடைபெறும். இதனை "Consumer Electronics Show" என அழைக்கின்றனர். இந்த ஆண்டு லாஸ்வேகாஸ் நகரில் இந்த கண்காட்சி நடைபெற்றது.
இதில் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் இயங்கும் நிறுவனங்கள் தாங்கள் அடுத்து கொண்டு வர இருக்கும் சாதனங்களைக் காட்சிக்கு வைப்பார்கள். இதன் மூலம் வர்த்தகர்கள் அவற்றிற்கான விற்பனை உரிமையினைப் பெற போட்டி போடுவார்கள்.

மேலும் சில சாதனங்களைத் தாங்கள் தயாரிக்கும் சாதனங்களில் இணைக்கவும் பலர் இந்தக் கண்காட்சியில் வட்டமிடுவார்கள். இந்த ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட சில அரிய கண்டுபிடிப்புகளை, தயாரிப்புகளை, வரும் ஆண்டில் நமக்குக் கம்ப்யூட்டர் சார்ந்து கிடைக்க இருப்பவை பற்றி இங்கு காணலாம். 
1. கேம்ஸ் கம்ப்யூட்டர்: விளையாட்டை மையப்படுத்தி தனியே சிறிய அளவிலான கம்ப்யூட்டர்கள் உருவாக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. Razer Switchblade என்ற பெயரில் 7 அங்குல அளவில் மல்ட்டி டச் கம்ப்யூட்டர் ஸ்கிரீனுடன் கூடிய, நொட்புக்கினைக் காட்டிலும் சற்றுப் பெரிய கம்ப்யூட்டர் ஒன்று தயாராகி விற்பனைக்கு வருகிறது.
இதுவரை வெளியிடப்படாத ஆட்டம்(Atom) ப்ராசசர் பயன்படுத்தப்பட்டுள்ளது. விண்டோஸ் 7 சிஸ்டம், 128 ஜிபி சாலிட் ஸ்டேட் டிஸ்க், வை-பி, 3ஜி எனப் பல புதிய வசதிகளைத் தரும் பொருட்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு நொட்புக் கம்ப்யூட்டர் விற்பனை செய்யப்படும் விலையில் இதனை எதிர்பார்க்கலாம்.
 2.ப்ராசசர்கள்: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அடுத்த விண்டோஸ் ஒரு சிப்பில் இணைத்துப் பதியப்பட்டு கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதன் மூலம் விண்டோஸ் சிஸ்டம் தரப்படும் விதம் மற்றும் இயக்கத்தில் அதிரடி மாற்றங்கள் வரலாம்.
இதனை SoC(System on Chip) என அழைக்கின்றனர். சிஸ்டம் சிப்பிலேயே தரப்படுவதால், கம்ப்யூட்டரின் பல பாகங்களுக்கும், ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கும் தகவல் பரிமாற்ற நேரம் முற்றிலுமாகக் குறைக்கப்படுகிறது. இதனால், கம்ப்யூட்டர் மிக அதிக வேகத்தில் இயங்கும். டேப்ளட் பிசிக்களுக்கு இது மிக உகந்ததாக இருக்கும்.
3. மெமரி:  இந்த ஆண்டு கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட மெமரி மற்றும் ஸ்டோரேஜ் சாதனங்கள் எண்ணிக்கை, இதுவரை இல்லாத வகையில் இருந்தன. சாம்சங் நிறுவனம் உலகின் முதல் DDR4 RAM சிப்பினை வெளியிட்டுள்ளது. நம்மில் பலர் இன்னும் DDR2 RAM சிப்பினையே பயன்படுத்தி வருகிறோம்.
சாம்சங் வெளியிட்டுள்ள இந்த சிப்பில் 30 நானோ மீட்டர் சிப்கள் உள்ளன. தற்போது பயன்பாட்டில் உள்ள DDR3 RAM சிப்பினைக் காட்டிலும் இரண்டு மடங்கு வேகத்தில் இந்த சிப்கள் இயங்குகின்றன. ஆனால் குறைவான மின் சக்தியைப் பயன்படுத்துகின்றன. ஒரு விநாடியில் 2.133 கிகா பிட்ஸ் தகவல்களைப் பரிமாறுகின்றன. இதனை 4 கிகா பிட்ஸ் ஆக மாற்றித் தர முடியும் என சாம்சங் அறிவித்துள்ளது.
4. ஸ்டோரேஜ்: உங்களுக்கு வேடிக்கையான ஒரு சாதனம் வேண்டுமென்றால், லெக்ஸார் நிறுவனம் வழங்கும், சாதாரண பிளாஷ் ட்ரைவ் அளவு உள்ள Echo MX என்னும் ஸ்டோரேஜ் சாதனத்தைப் பார்க்கலாம். இதன் மெமரி அளவு 128 ஜிபி. விநாடிக்கு 32 எம்பி தகவல்களைப் பரிமாறுகிறது.
17 எம் பி அளவில் எழுதுகிறது. இது உங்களுக்கு மிகச் சாதாரணமாகத் தோன்றினால், Victorinox Secure என்ற நிறுவனம் வழங்கும் சாலிட் ஸ்டேட் டிஸ்க் கொண்ட பிளாஷ் ட்ரைவினைக் காணலாம்.
இதன் கொள்ளளவு 256 ஜிபி. இது ஒரு ஸ்விஸ் ஆர்மி கத்தி போன்ற தோற்றத்தில் உள்ளது. உலகின் மிகச் சிறிய சாலிட் ஸ்டேட் டிஸ்க் என இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுவும் போதவில்லை என்றால், Rocstor என்னும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள 750 ஜிபி கொள்ளளவு கொண்ட ஹார்ட் டிஸ்க்கினைக் கொள்ளலாம்.
 மேலே சொல்லப்பட்ட அனைத்தும் புதியனவாகவும், அனைவரின் கவனத்தைக் கவர்வதாகவும் இருந்தாலும், ஒரு சாதனம் பலரை வியப்பில் ஆழ்த்தியது. அது வெறும் கம்ப்யூட்டர் கேபின் தான்.Zalmann நிறுவனம், ஜி.எஸ். 1200 என்ற பெயரில் அறிமுகப்படுத்திய கம்ப்யூட்டர் கேபின். இது ஏதோ சயின்ஸ் மூவியில் அறிமுகமாகும்சாதனம்போலத்தோற்றமளிக்கிறது. இதில் ப்ராசசர்களைக் குளிரவைக்க நான்கு மின்விசிறிகள், ஏழு ஹார்ட் டிஸ்க்கினை அமைக்க வசதி, மேலாக, எளிதாக அணுக நான்கு யு.எஸ்.பி. போர்ட், இ சடா (eSATA) சப்போர்ட், திரவம் பயன்படுத்தி கூலிங் செய்திட வசதி எனப் பல புதிய அம்சங்களைக் கொண்டதாக உள்ள இந்த கேபின் விரைவில் விற்பனைக்கு வர உள்ளது.
 
இன்னும் பல புதிய சாதனங்கள், லாஸ்வேகாஸ் கண்காட்சியில் இடம் பெற்றன.
Katie White Katie White demonstrates Toshiba's concept Spatial Motion Interface that uses hand motion operation for next generation digital televisions at the 2009 International Consumer Electronics Show at the Las Vegas Convention Center January 9, 2009 in Las Vegas, Nevada. CES, the world's largest annual consumer technology trade show, runs through January 11 and features 2,700 exhibitors showing off their latest products and services to more than 130,000 attendees.  (Photo by Ethan Miller/Getty Images) *** Local Caption *** Katie White




பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF