Monday, January 31, 2011

இன்றய செய்திகள் 31/01/2011

எகிப்தில் தொடரும் போராட்டம்: பலி எண்ணிக்கை 150 ஆக உயர்வு.

எகிப்து ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டத்தினால் சுமார் 150க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர் என அந்நாட்டுத் தகல்கள் தெரிவிக்கின்றன.
எகிப்தில் சுமார் 30 ஆண்டுகளாக அதிபராக உள்ள ஹோஸ்னி முபாரக் பதவி விலக வலியுறுத்தி தலைநகர் கெய்ரோவில் ஏறக்குறைய ஒரு வாரமாக பல இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே பல இடங்களில் மோதல் வெடித்தது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். கண்ணீர் புகைக் குண்டுகளும் தொடர்ந்து வீசப்பட்டன. தடியடியும் நடத்தப்பட்டது. நேற்று அரசுக்கு எதிரான கலவரம் உச்சக் கட்டத்தை எட்டியது. நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான கைதிகள் சிறைகளை உடைத்து தப்பி ஓடினர். கடைகளும், வணிக நிறுவனங்களும் தொடர்ந்து சூறையாடப்பட்டு வருகின்றன.
கலவரத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது. நான்காயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் கிளர்ச்சியாளர்களை இராணுவப் படையினர் மூலம் அடக்கிவிடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ள அதிபர் ஹோஸ்னி முபாரக் இன்று இராணுவ தலைமையகத்திற்கு சென்றார். அங்கு இராணுவ உயரதிகாரிகள் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள துணை அதிபர் ஒமர் சுலைமான் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து வீதிகளில் கூடுதல் இராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை ஆர்ப்பாட்டம் நாடுபூராகவும் இடம்பெற்று வருவதால் கெய்ரோ, அலெக்சாண்டியா, சூயஸ் உட்பட நாட்டின் பல நகரங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பதவி விழக மறுத்துவரும் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் தனது அமைச்சரவையை கலைத்து புதிய அரசாங்கத்தை அமைத்துள்ளார். இந்நிலையில் விமான போக்குவரத்து அமைச்சராக இருந்த அகமது ஷாபிக்கை பிரதமராக அறிவித்துள்ளார்.



எகிப்து நிலைமைகள் குறித்து அந்நாட்டு தூதுவரை அழைத்து பேச்சுவார்த்தை.

எகிப்து நிலைமைகள் குறித்து அந்நாட்டு தூதுவரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக சுவிட்சர்லாந்து வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்துக்கான எகிப்து தூதுவரை அழைத்து அடிப்படை மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நாட்டு மக்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்துவிடக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.பிரதான எதிர்க்கட்சித் தலைவர் எல்பராடி விரைவில் வீட்டுக் காவலிலிருந்து விடுவிக்கப்படுவார் என தாம் எதிர்பார்ப்பதாக சுவிட்சர்லாந்து வெளிவிவகார அமைச்சர் கள்மி ரே தெரிவித்துள்ளார்.எகிப்தின் தற்போதைய நிலைமைகள் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



கடலுக்குள்ளே காணப்படும் மிகவும் நீளமான பாலத்தை கட்டிய உலக சாதனையை நிலைநாட்டி உள்ளது சீனா.
இப்பாலம் The Qingdao Haiwan Bridge என்கிற பெயரால் அழைக்கப்படுகின்றது.
கிழக்குச் சீனாவில் Shandong மாகாணத்தில் உள்ள Qingdao என்கிற நகரத்தையும்,
suburban Huangdao மாவட்டத்தில் உள்ள Jiaozhou Bay நகரத்தின் வட பகுதியையும் இது கடல் வழியாக இணைக்கின்றது.

இது ஐந்து கிலோமீற்றருக்கும் அதிகமான நீளத்தை கொண்ட பாலம் ஆகும்.

கடந்த வருடம் மக்கள் பாவனைக்கு திறந்து விடப்பட்டது.

ஒரு நாளில் 30,000 இற்கும் அதிகமான கார்கள் இதன் ஊடாக பயணிக்க முடியும்.

தரை வழிப் பாதையால் சுற்றிச் செல்லாமல் இப்பாலம் ஊடாக பயணிக்கின்றமையால் சுமார் 25 நிமிடங்களை பயணிகள் சேமிக்க முடிகின்றது.

நான்கு வருடங்களில் இப்பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.
8.6 பில்லியன் அமெரிக்க டொலர் வரை செலவாகி உள்ளது.10,000 தொழிலாளர்கள் பணியாற்றி உள்ளனர்.







32 நாய்களை பழி வாங்கிய மனிதன்.

தெரு நாய் ஒன்றிடம் கடி வாங்கிய தாய்வான் நாட்டு மனிதர் ஒருவர் இதற்குப் பழிவாங்கும் வகையில் 32 தெரு நாய்களுக்கு நஞ்சு ஊட்டப்பட்ட உணவை கொடுத்து உள்ளனர்.18 நாய்கள் இறந்து விட்டன.
கோழி எலும்புத் துண்டுகளில் பூச்சி கொல்லி மருந்தை கலந்து இருக்கின்றார்.
இவர் இவ்வுணவை நாய்களுக்கு வீசி விட்டு மோட்டார் சைக்கிளில் மாயமாக மறைந்து போனார்.இரு நாட்கள் இவ்வாறு செய்து இருக்கின்றார்.இவர் கைது செய்யப்பட்டு விட்டார்.
நாயிடம் கடி வாங்கியதால் ஏற்பட்ட கோபத்தில் பழி வாங்கினார் என்று பொலிஸாருக்குக் கூறினார்.



கடல் அலையின் உருவத்தில் விசித்திரமான பாறை!
மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள Hyden என்கிற நகரத்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது ஒரு விசித்திரமான பாறை.இப்பாறை கடல் அலையின் உருவத்தில் அமையப் பெற்றிருப்பதே மேற்சொன்ன விசித்திரம் ஆகும்.இதனால் இப்பாறையை ஆங்கிலத்தில் Wave Rock என்று அழைக்கின்றனர்.
இப்பாறையின் உயரம் 15 மீற்றர்.நீளம் 110 மீற்றர்.படங்களைப் பாருங்கள்.









சீனாவில் லஞ்சம் பெற்ற அதிகாரிக்கு மரண தண்டனை.

சீனாவின் ஒரு மாகாணத்தைச் சேர்ந்த முன்னாள் உயர் அதிகாரி ஒருவர் லஞ்சம் பெற்ற வழக்கில், அவருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
சீனாவின் வட கிழக்குப் பகுதியில் உள்ள லியோனிங் மாகாண மக்கள் காங்கிரஸ் நிலைக் குழுவின் துணைத் தலைவராக இருந்தவர் சாங் யோங்(56).
கடந்த 2000 முதல் 2009 வரை இவர் பதவியில் இருந்த போது தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி 23 தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களிடம் 720 லட்சம் ரூபாய் லஞ்சமாகப் பெற்றுக் கொண்டு அரசு ஒப்பந்தங்களையும் பணி உயர்வையும் லஞ்சம் பெற்றுக் கொண்டு வழங்கியுள்ளார்.
இது குறித்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சட்ட விரோதமாக அவர் சம்பாதித்த அனைத்தும் அரசால் கைப்பற்றப்பட்டன. பீஜிங் நகர இரண்டாவது இடை நிலை மக்கள் கோர்ட் அவரது வழக்கை விசாரித்து அவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

ரகசிய ஆவணங்களை அழிக்க முடியாது: விக்கிலீக்ஸ் ஸ்தாபகர்.
இரகசிய ஆவணங்கள் பெரும் எண்ணிக்கையில் பிரதிகள் எடுக்கப்பட்டு பல்வேறு இடங்களில் சேமிக்கப்பட்டுள்ளது. அவற்றை யாராலும் அழிக்க முடியாது என விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் ஸ்தாபகர் ஜூலியன் அசேஞ் தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடக நிறுவனம் ஒன்றுக்கு அளித்த நேர்காணல் ஒன்றிலேயே அவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார். எந்த விதத்திலும் தன்னுடைய நோக்கத்திலிருந்து விலகுவதில்லை என அவர் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.
மக்களுக்கு தகவல் வழங்குவதற்கான வழியைத் தான் நான் கையாளுகிறேன். வங்கிக் கணக்குகளில் கறுப்புப் பணம் வைத்திருப்போர் தொடர்பிலும் நாம் தகவல் வழங்குவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்திய மாணவர்களின் காலில் கண்காணிப்பு கேமரா: அமெரிக்காவுக்கு இந்தியா கண்டனம்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டிரி வேலி பல்கலைக்கழக வழக்கில் சிக்கிக் கொண்டுள்ள இந்திய மாணவர்களின் காலில், "எலக்ட்ரானிக் டேக்" எனப்படும் கருவியைக் கட்டி, அவர்களின் நடமாட்டத்தை அமெரிக்க குடியேற்றத் துறை கண்காணித்து வருகிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் மிகப் பெரிய நகரமான சான்பிரான்சிஸ்கோ நகரின் புறநகர் பகுதியில் அமைந்துள்ளது டிரி வேலி பல்கலைக் கழகம். அமெரிக்க சட்டப்படி, இப்பல்கலைகழகமானது ஆண்டுக்கு 144 விசாக்கள் மட்டுமே வெளிநாட்டு மாணவர்களுக்கு அளிக்க முடியும். ஆனால், இந்தாண்டு சட்ட விரோதமாக மாணவர்களிடம் அதிகளவில் பணத்தைக் கறந்து, போலி விசாக்கள் மூலம் மாணவர் சேர்க்கையை பல்கலை நடத்தியுள்ளது.
இப்பிரச்னையில் மாட்டியுள்ள 1,555 இந்திய மாணவர்களில் 750 பேர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். இவர்களில் பெரும்பாலானோர், வேறு வழியில்லாமல் தங்கள் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு அங்கேயே தங்கி, வேறு கல்வி நிறுவனங்களில் தங்கள் படிப்பைத் தொடர்வதற்காக முயன்று வருகின்றனர். அமெரிக்க குடியேற்றத் துறை இவர்கள் அனைவரிடமும் விசாரித்து வருகிறது.
இதற்காக இவர்களது காலில், எலக்ட்ரானிக் டேக் எனப்படும் மின்னணு கண்காணிப்புக் கருவியை அத்துறை கட்டி விட்டுள்ளது. பாதத்திற்கு மேல் வளையம் போன்ற எலக்ட்ரானிக் தகவல் தரும் கருவி மாட்டப்படுகிறது. மாணவர்கள் எங்குள்ளனர் என்பதை இதன் மூலம் சம்பந்தப்பட்டவர்கள் அறிந்து கொள்ள முடியும். இதற்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி இது பற்றி கூறியிருப்பதாவது: அமெரிக்க கொள்கைப்படி மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கையை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் இந்த விவகாரத்தில் மோசடி செய்தது பல்கலைக் கழகம் தான். மாணவர்கள் ஒன்றும் அறியாத அப்பாவிகள்.
அதனால் அவர்கள் மீது இரக்கம் கொண்டு இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் கைவிட வேண்டும். நேர்மையான மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பது தான் இந்திய அரசின் கவலை. அதற்காக அமெரிக்க அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இவ்விவகாரத்திற்கு காரணம் போலி ஏஜன்டுகள் தான். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு வயலார் ரவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வட அமெரிக்க தெலுங்கு அசோசியேஷன் தலைவர் கோமதி ஜெயராம் கூறுகையில், இந்தப் பிரச்னையில் அரசியல் ரீதியிலான நடவடிக்கை எடுக்கும்படி இந்திய அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். இந்த மாணவர்களை இங்குள்ள வேறு பல்கலைக் கழகங்களுக்கு மாற்றுவது அல்லது இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவது ஆகிய நடவடிக்கைகளை எடுக்கும்படியும் இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.
டிரி வேலி பல்கலைக் கழகத்திற்கு படிக்கச் சென்றுள்ள மாணவர்கள், அவர்களது குடும்பத்தினர் இப்பிரச்னையில் இந்தியத் தூதரக உதவிகளைப் பெறுவதற்காக www.indianembassy.org என்ற இ-மெயில் முகவரியை வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் இதுகுறித்து minca@indiagov.org மற்றும் edu@indiacgny.org என்ற முகவரிகளுக்குக் கடிதம் எழுதி இந்திய அதிகாரிகளின் வழிகாட்டுதலைப் பெறலாம்.

போதையில் இருக்கும் சாரதிகளை காட்டி கொடுக்கும் கார்: அமெரிக்காவின் புதிய முயற்சி.
தற்போது மது அருந்தி விட்டு குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இதனால் விபத்துகள் அதிகரித்து பலரின் உயிர்கள் பறிபோகின்றன. அதை தடுக்கும் வகையில் புதிய வகை கார் ஒன்று அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த கார் குடிபோதையில் இருக்கும் சாரதியை கண்டுபிடித்து தருகிறது. இந்த அதிநவீன காரில் மனித உடலின் உணர்வுகளை பதிவு செய்யக் கூடிய கருவி பொருத்தப்பட்டுள்ளது. சாரதியின் மூச்சுக் காற்று, அல்லது தோல் பகுதியின் உணர்வு மூலம் சாரதி குடிபோதையில் இருக்கிறாரா? என்பதை கண்டறிய முடியும்.

இது தவிர காரின் சக்கரங்களை இயக்க கூடிய ஸ்டீயரிங், மற்றும் கதவு பூட்டுகளிலும் பொருத்தலாம். அதன் மூலம் ஓட்டுனரின் ரத்தத்தில் கலந்து இருக்கும் ஹெல்கஹோலின் விகிதத்தை கண்டறிந்து அவர் போதையில் உள்ளாரா? என கண்டறிய முடியும்.

இந்த கார் வெள்ளோட்ட சோதனை நடந்தது. அமெரிக்காவில் உள்ள வால்கம் நகரில் நடந்த இந்த சோதனை ஓட்டத்தை அமெரிக்க போக்குவரத்து செயலாளர் ரோய் லாகூட் நேரில் வந்து பார்த்தார்.

இக்காரை தயாரித்த நிபுணர்களை அவர் வெகுவாக பாராட்டினார். இந்த புதிய முயற்சிக்கு மக்களிடையே வரவேற்பும் பாராட்டும் கிடைத்துள்ளது. இது போன்ற காரை புழக்கத்தில் விடவேண்டும். இதன் மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்படும் என தெரிவித்துள்ளனர்.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF