
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவால் இன்றையதினம் யாழ்ப்பாணம் - பூநகரிப் பிரதேசங்களை இணைக்கும் சங்குப்பிட்டிப் பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையை ஆசிய நாடுகளின் மிகச்சிறந்த நாடாக மாற்றும் பொருட்டு அனைவரும் ஒன்றாக அணிதிரள வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அழைப்பு விடுத்துள்ளார்.
ஒருவருடத்திற்கும் குறைவான காலப்பகுதிக்குள் அமைக்கப்பட்ட பாலமானது வடக்கின் வசந்தத்தின் மற்றுமொரு வரப்பிரசாதம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ,
அரசியல்வாதிகள் இதற்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும், தற்போதுள்ள அரசாங்கம் சொல்வதைச் செய்யவும், செய்வதைச் சொல்லும் அரசாங்கமாகும்.
பிரிட்டனின் இருப்புப் பாலம் அமைக்கும் திட்டத்தின் கீழ் பெருந்தெருக்கல் அமைச்சினால் அமைக்கப்பட்ட சங்குப்பிட்டி பாலத்திற்கான செலவு ஆயிரத்து 32 மில்லியன் ரூபாவாகும்.
ஏ-32 பெருந்தெருவில், பூநகரி மற்றும் யாழ். குடாநாட்டை இணைக்கும் சங்குப்பிட்டி பாலமானது இருவழி போக்குவரத்திற்காக அமைக்கப்படட் பாலமாகும்.


