
மனிதர்களின் உடல் வெப்பத்தைப் பயன்படுத்தி சக்தியை உற்பத்தி செய்ய முடியும் என நவீன ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
நிறுவனங்களின் சக்தி வளப் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வாறு புதிய தொழில்நுடபம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மனிதர்களின் உடல் வெப்ப நிலையை பயன்படுத்தி சுவீடன் நிறுவனமொன்று சக்தியை உற்பத்தி செய்துள்ளது.
உடல் வெப்பநிலை வீண் விரயமாக்கப்படுவதாகவும், இந்த சக்தியைப் பயன்படுத்தி கட்டங்களில் கதகதப்பை ஏற்படுத்த முடியும் எனறும் குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.
ஸ்டொக்கொம் மத்திய ரயில் நிலையப் பயணிகளின் உடல் வெப்ப நிலையைப் பயன்படுத்தி அருகில் உள்ள கட்டடமொன்றின் வெப்ப நிலையை அதிகரிக்கும் முயற்சி வெற்றியளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மனித உடலின் வெப்பநிலையை வெப்பக்கடத்திகள் மூலம் ஈர்த்து அருகில் உள்ள கட்டடம் வெப்பமாக்கப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்த முறைமையினால் சுற்றாடலுக்கு தீங்கு ஏற்படாது எனவும், எரிபொருள் செலவினை 25 வீதத்தினால் குறைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.